தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வாங்கிய பணத்தை திருப்பித்தராமல் ஏமாற்றுகிறார் என குமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் பல கேள்விகளை இன்று எழுப்பியது.
குறிப்பாக, ‘உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அமைச்சர் காமராஜ் மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை?’ என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ‘அமைச்சர் என்றால் அவர் சட்டத்திற்கு மேலானவரா?’ என்று தனது கண்டன கேள்வியை பதிவு செய்தது.
தொடர்ந்து, இந்த மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.