நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. அதிகாரி பல்வீர் சிங், விசாரணை கைதிகள் சிலரின் பற்களை பிடுங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து பற்கள் பிடுங்கப்படட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சூர்யா என்பவர் புதன்கிழமை (மார்ச் 29) பேட்டியளித்தார். அப்போது அவர், “தமது பற்களை யாரும் பிடுங்கவில்லை. தடுக்கி விழுந்து பற்கள் உடைந்து விட்டதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “காவல் துறை என் பல்லை உடைக்கவில்லை. நான் கீழே விழுந்ததில்தான் பல் உடைந்தது. இதற்கும் காவல் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் விசாரணை கைதியாக இருப்பதாக கூறுகிறார்கள்.
அதனால்தான் இங்கு வந்தேன்” என்றார். தொடர்ந்து போலீசார் மிரட்டினார்களா? என்ற கேள்விக்கு இல்லை எனப் பதில் அளித்துவிட்டு சூர்யா அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இந்த வழக்கில் முன்னதாக லட்சுமி என்பவர் ஆஜராகிவிட்டு எந்தத் தகவலும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார். இரண்டாவது நபராக சூர்யா இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இதுவரை 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. மீடியாக்களிடம் கூறிய விவரத்தைதான் சூர்யா விசாரணை குழுவிடமும் கூறினார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“