‘போயஸ் கார்டன் எங்கள் கோவில், தமிழகம் கொந்தளிக்கும்’ டி.டி.வி.தினகரன் அணி ஆவேசம்

போயஸ் கார்டன் எங்கள் கோவில், இங்கு ரெய்டு நடத்தியது ஜெயலலிதாவுக்கு இழுக்கு, இதனால் தமிழகம் கொந்தளிக்கும் என டி.டி.வி.தினகரன் அணி கூறியிருக்கிறது.

jeyalalitha, aiadmk, poes garden, income tax department, IT raids, tamilnadu government, v.p.kalairajan, ttv dhinakaran

போயஸ் கார்டன் எங்கள் கோவில், இங்கு ரெய்டு நடத்தியது ஜெயலலிதாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல், இதனால் தமிழகம் கொந்தளிக்கும் என டி.டி.வி.தினகரன் அணி கூறியிருக்கிறது.

சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் இருக்கிறது. இன்று (17-ம் தேதி) இரவு 9 மணியளவில் இங்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு போலீஸார் துணையுடன் உள்ளே புகுந்தனர்.

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் அவரது உதவியாளர் பூங்குன்றனின் அலுவலகம் இருக்கிறது. அதை குறி வைத்தே வருமான வரித்துறை அதிகாரிகள் புகுந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வி.கே.சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போதும் பூங்குன்றனிடம் விசாரணை நடந்தது. அதன் தொடர்ச்சியாக இதை குறிப்பிடுகிறார்கள்.

இந்த சோதனை குறித்து தகவல் கிடைத்ததும் இரவு 10 மணிக்கு மேல் அதிமுக நிர்வாகிகள் சிலர் அங்கு வந்தனர். அவர்களில் தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளருமான வி.பி.கலைராஜனும் ஒருவர். அவர் போயஸ் கார்டன் இல்லத்திற்குள் செல்ல முயன்றபோது அவரை போலீஸ் உள்ளே விடவில்லை. இதனால் அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதம் செய்தார்.

பின்னர் டிடிவி ஆதரவாளரான கலைராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: வருமான வரி மோசடி செய்தவர்களிடம் விசாரணை நடத்துவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை குறிவைத்து சோதனை நடத்துவது முழுக்க பழி வாங்கும் நடவடிக்கை.

அதுவும் அம்மா வாழ்ந்த வீடு எங்களுக்கு கோவில் மாதிரி. அங்கு சோதனை நடத்துவது அம்மாவுக்கு இழுக்கு ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கை. ஏதோ அம்மாவே தவறு செய்தது போன்ற ஒரு தோற்றத்தை இதன் மூலமாக வருமான வரித்துறையும் மத்திய அரசும் ஏற்படுத்துகின்றன. அம்மா இல்லத்தில் நடைபெறும் இந்த சோதனையை மக்கள் ஏற்க மாட்டார்கள். இதனால் தமிழகம் கொந்தளிக்கும்!’ என்றார் அவர்.

சற்று நேரத்தில் பெருமளவில் தொண்டர்கள் திரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: T t v dhinakaran faction opposses it raid in poes garden

Next Story
தமிழகம் முழுவதும் இன்று பந்த்…! வெற்றிப் பெறுமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com