டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களின் போக்குவரத்தை ஏற்பாடு செய்ததில், கட்சியின் வழக்கறிஞர் பிரிவினரின் கடின உழைப்பை நினைத்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மகிழ்ச்சி அடைவதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜா முஹம்மது தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதுகுறித்து, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ராஜா முஹம்மது வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
கடந்த மாதம் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அச. உமர் ஃபாரூக் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில் அவசரமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அறிவிப்பின் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்லியில் அரசின் உத்தரவை ஏற்று தங்கியுள்ள தமிழர்களை(தப்லீக் ஜமாத்தினர் உட்பட தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களை) உடனடியாக திரும்ப அழைத்து வர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடக் கோரி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனு 28.04.2020 அன்று ஒப்புக் கொள்ளப்பட்ட பின்னர், அதில் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது மே- 7ம் தேதியன்று நடந்த விசாரணையில் , 11.5.2020 அன்று நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து, மீண்டும் 12.5.2020 அன்று நீதிபதி டாக்டர் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
மாநில அரசு சார்பில் ஜெயபிரகாஷ் நாராயணன், மத்திய அரசின் சார்பில்
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் ஆகியோர் ஆஜராயினர். மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் மனுதாரருக்காக ஆஜரானார். ராஜா முகம்மது அவருக்கு உதவினார்.
முந்தைய விசாரணையின்போது (28.04.2020 அன்று) நீதிபதி சத்தியநாராயணன் சிக்கித் தவிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு தேவையான செலவுகளைச் சந்திக்கும் பொறுப்பு குறித்து கேட்டபோது, மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், உலகெங்கிலும் உள்ள தங்கள் குடிமக்களை தங்கள் சொந்த செலவில் அமெரிக்க அரசு அழைத்து வந்துள்ளது, ஆனால் இந்திய அரசாங்கம் விமானங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், தங்கள் சொந்த குடிமக்களிடமிருந்து இரட்டைக் கட்டணம் வசூலித்துள்ளது என்றார். வெளிநாடுகளில் இருந்து சில குடிமக்களை இந்திய அரசு இலவசமாகவே அழைத்து வந்துள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அஜ்மல் கான், வெளிநாட்டிலிருந்து சிக்கித் தவிக்கும் சில இந்தியர்களை இலவசமாக அரசாங்கத்தால் கொண்டு வர முடிந்தபோது ஏன் தங்கள் குடிமக்களை நாட்டின் பிறபகுதிகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான், அரசானது தனது சொந்த குடிமகனின் போக்குவரத்து செலவினங்களை செலுத்த முடியாவிட்டால், சிக்கித் தவிக்கும் மக்கள் செலவுகளை ஏற்றுக் கொள்வர் என்று கூறினார். இதற்காக கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த மனு 07.05.2020 அன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கூடுதல் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் செலவுகள் பயணிகள் ஏற்றுக் கொள்வர் என்றும், மேலும் ஏதேனும் தேவைப்பட்டால் ஜமாஅத் உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. நீதிபதி டாக்டர் வினீத் கோத்தாரி, அந்த நபர்களின் போக்குவரத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு அறிவுறுத்தினார். மேலும், தற்போது மக்கள் தாக்கல் செய்த விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மே 12ம் தேதி, நீதிபதி டாக்டர் வினீத் கோத்தாரி, நிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேட்டார். மே -11 மாலை வரை டெல்லி அரசாங்கத்திடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று தமிழ்நாடு அரசாங்கம் சார்பாக ஆஜரானான மூத்த வழக்கறிஞர் ராஜா கோபால் தெரிவித்தார்.
மே 11ம் தேதி இரவு, அவர்கள் டெல்லி முதல்வருடன் பேசியதாகவும், அதில் டெல்லி முதல்வரால் அந்த நபர்களின் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வரும் மக்களை தனிமைப்படுத்த அவர்கள் ஏற்கனவே இரண்டு கல்லூரிகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். நிலை அறிக்கையை 15.05.2020 அன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
12.05.2020 இரவு 9.30 மணியளவில் டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களின் போக்குவரத்துக்கு மாநில அரசு சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்துள்ளது என்றும், அவர்கள் பயணத்தை 16.05.2020 அன்று தொடங்குவார்கள் பிரதான காட்சி ஊடகங்களில் செய்தி ஒளிபரப்பப்பட்டது. பின்பு அந்த வழக்கு மே- 15ம் தேதியன்று நீதிபதி சத்தியநாரயணன் மற்றும் புஷ்பா சத்தியநாரயணன் முன்பு விசாரனைக்கு வந்த போது, அவர்கள் நாளை கிளம்புவதற்கு அரசு தரப்பில், அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டது என கூறினார்கள் அந்த அரசின் உத்திரவாத்த்தை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று (மே- 16) அன்று மதியம் 3 மணியளவில் அவர்கள் டெல்லியில் இருந்து கிளம்பி விட்டார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வழக்கறிஞர் பிரிவினரால் தொடங்கப்பட்ட தன்னலமற்ற கடின உழைப்பு மற்றும் முயற்சிகள் காரணமாக கிடைத்த வெற்றி இது என்று முஸ்லிம் சமூகம் மற்றும் தமிழ் சமூகத்திற்கு தெரிவிப்பதில் எஸ்.டி.பி.ஐ. மகிழ்ச்சி அடைகிறது. முஸ்லிம் சமூகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ வக்கீல்கள் பிரிவு சார்பாக, இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சரியான கோணம் மற்றும் வலுவான வாதங்களுடன் வாதிட்ட கற்றறிந்த மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.