தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் சுரங்கபாதையில் கசியும் மழைநீர் – அவதியில் பயணிகள்

வழுக்கும் படிக்கட்டால் மழை காலத்தில் பயணிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இது ஆபத்தான இடமாக மாறிவிடுகிறது.

சமீப காலத்தில் பெய்த கனமழை காரணத்தினால் சென்னையில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதித்தது; இதில் தாழ்வான இடத்தில குடியிருந்த மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. ஆனால்  தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்து வந்தாலும் ஒரு இடத்தை தவற விட்டனர். அதுதான் ரயில்வே நிலையங்களுக்கு அருகில் இருக்கும் சுரங்கப்பாதை.

தம்பரம், தாம்பரம் சானடோரியும், பல்லாவரம், மற்றும் ஆலந்தூர் ஆகிய இடங்களில் இருக்கும் சுரங்கப்பாதை மழைநீரால் பாதிக்கப்பட்டு நீர்க்கசிவு ஏற்படுகிறது. இதனால் சுரங்கப்பாதை பயன்படுத்தி செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

இதற்கான காரணம் என்னவென்று பார்த்தல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சுரங்கப்பாதையில் விரிசல் விழுந்த கூரை, வழுக்கும் தளம் மற்றும் கசிவு சுவர்கள் என பாதிக்கப்படுகிறது. பருவமழையின் போது, ​​ஒவ்வொரு மழையின் பின்னரும், சுரங்கப்பாதை நீரில் மூழ்கி, சில நாட்களுக்குப் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறிவிடும் என்று சுரங்கப்பாதை பயன்படுத்தும் பயணிகள் புகாரளிகின்றனர்.

“கட்டமைப்பு தவறானது, மேலும் முழுமையான மறுவடிவமைப்பு தேவை. ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு பருவமழையிலும் நாங்கள் புகார்களை எழுப்புகிறோம். ஆனால் அதிகாரிகள் அதை குறுகிய கால நிவாரணத்திற்காக சரி செய்கிறார்கள், ”என்று தாம்பரத்தை சேர்ந்த குடியிருப்பு வாசி ஒருவர் கூறுகிறார்.

சுரங்கப்பாதை 2006 இல் திறக்கப்பட்டது, மேலும் ரயில்கள் மேலே ஓடுவதால், விரிசல்கள் மெதுவாக உருவாகி, கான்கிரீட் திட்டுகள் விழுந்து வலுவிழந்துவிடுகிறது.

வழுக்கும் படிக்கட்டால் மழை காலத்தில் பயணிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இது ஆபத்தான இடமாக மாறிவிடுகிறது.

பல்லாவரம் சுரங்கபாதையின் நீர்கசிவை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது.

இதுகுறித்து தாம்பரம் சானடோரியத்தின் மேற்பார்வையாளர் மெர்சி கிரேஸ் கூறியதாவது: கட்டுமானப் பொறியாளர் மற்றும் மின் பொறியாளர் ஆகியோரின் ஆலோசனை கூட்டி அறிக்கை புகைப்படத்துடன் உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

“பொதுமக்கள் ரயில்களில் ஏறுவதற்கும் குறுக்கே செல்லவும் ஒரே வழி சுரங்கப்பாதை என்பதால், எங்கள் மின் ஊழியர்கள் இரவும் பகலும் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். இப்போதைக்கு இதைத்தான் செய்ய முடியும். கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டு, கால் மேல் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், மழை பெய்து வருவதால் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. விரைவில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tambaram pallavaram alandur subway needs renovation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express