தாம்பரம்-செங்கோட்டை உட்பட 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு!

பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பயணிகளின் வசதியைக் கருத்தில்கொண்டு, முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

author-image
abhisudha
New Update
Tambaram Sengottai Express Silambu Express Chennai Nagercoil Train Kovai Rameswaram Express Temporary Coaches Southern Railway

Tambaram Sengottai Express| Silambu Express |Chennai Nagercoil Train| Kovai Rameswaram Express

பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையிலும், பயணிகளின் வசதிக்காகவும், தாம்பரம்-செங்கோட்டை ரயில் உட்பட மொத்தம் 5 எக்ஸ்பிரஸ் ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ள விவரங்கள்:

பயணிகளின் தேவைக்காக, தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நாகர்கோவில், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம், சென்னை சென்ட்ரல்-ஆழப்புழா மற்றும் கோவை-ராமேசுவரம் ஆகிய 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ் (வ.எண்: 20681/20682):

தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலும், செங்கோட்டையில் இருந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

Advertisment
Advertisements

இணைக்கப்படும் பெட்டிகள்: ஒரு 2-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டி, இரண்டு 3-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், மற்றும் ஒரு 2-ஆம் வகுப்பு பொதுப் பெட்டி ஆகியவை தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

தாம்பரம் - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22657/22658):

தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலும் இந்தக் கூடுதல் வசதி தொடரும்.

இணைக்கப்படும் பெட்டிகள்: ஒரு 2-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டி, இரண்டு 3-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டிகள், மூன்று படுக்கை வசதி பெட்டிகள், மற்றும் ஒரு 2-ஆம் வகுப்பு பொதுப் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (வ.எண்: 22639/22640):

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 27-ஆம் தேதி வரையிலும், ஆலப்புழாவில் இருந்து ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு 2-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. இந்த இணைப்பு கடந்த 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 12695/12696):

சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு 2-ஆம் வகுப்பு ஏ.சி. பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளது.

கோவை - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (வ.எண்: 16618/16617):

கோவையில் இருந்து வருகிற நவம்பர் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரையிலும், ராமேசுவரத்தில் இருந்து நவம்பர் 5-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது.

பயணிகள் இந்த தற்காலிக கூடுதல் பெட்டி வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: