scorecardresearch

புதுச்சேரி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் : பட்ஜெட் தாக்கலுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

சட்டப்பேரவையில் உள்ள அரங்கில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் : பட்ஜெட் தாக்கலுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

பாபு ராஜேந்திரன் புதுச்சேரி

புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய அரசு ரூபாய் 11 ஆயிரத்து 600 கோடி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

2023-24ம் ஆண்டுக்கு, 11 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெறுவதற்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கோப்புக்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளித்து, நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிதி அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பட்ஜெட் தாக்கலுக்கு ஏற்பட்டு இருந்த சிக்கல் நீங்கியது.

இதனைத் தொடர்ந்து வரும் 13ம் தேதியன்று, முதல்வர் ரங்கசாமி, திட்டமிட்டப்படி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதையடுத்து, பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் தரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சட்டப்பேரவையில் உள்ள அரங்கில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், நமச்சிவாயம், தேனி. ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன் குமார், சந்திர பிரியங்கா ஆகியோர் பங்கேற்றனர். மேலும் தலைமை செயலர், நிதி செயலர் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil central govt approved puducherry budget