மீண்டும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை... சங்கம் செயல்பட ஆரம்பிச்சுட்டு

அரசோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரைக் கொண்ட தமிழ் திரைப்பட வர்த்தக சபை (Tamil Film Chamber of Commerce) இன்று மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தருமான அபிராமி ராமநாதன் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மற்ற நிர்வாகிகள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபிராமி ராமநாதன் கூறியதாவது: “இந்த அமைப்பு திரையுலகின் நலனை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படும். இதன் நிலைப்பாடு யாருக்கும் எதிரானது அல்ல. அரசோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து தமிழ் சினிமா நலனுக்காக பாடுபடும்,” என்று தெரிவித்தார்.

இந்த சபை ஏற்கெனவே தொடங்கப்பட்டிருந்தாலும், இத்தனை காலமும் அமைதியாக இருந்தது. இன்று முதல் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது.தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, அன்பு செழியன், வநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவர் செல்வின் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close