Advertisment

Tamil Nadu Assembly: நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் பதிலில் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை, அது ’ரிட்டன்’ - சி.வி.சண்முகம்

TN Assembly: தமிழக சட்டப்பேரவை விவாதங்களை இங்கே உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Assembly, cv sanmugam

நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் இமெயில் கடிதத்திலும், பிரமாண பத்திரத்திலும் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை எனவும்,  ’ரிட்டன்’ Tamil Nadu Assembly Live: தமிழக சட்டப்பேரவை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், பல்வேறு பிரச்னைகள் மற்றும் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்படுகின்றன.

Advertisment

இதில் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களும் கலந்துக் கொண்டு, தங்களது தொகுதியின் பிரச்னைகளை எடுத்துரைக்கிறார்கள். அதற்கு அமைச்சர்கள் பதிலளிக்கிறார்கள்.

 

Live Blog

Tamil Nadu Assembly

தமிழக சட்டப்பேரவை லைவ் அப்டேட்ஸ்!



























Highlights

    14:29 (IST)17 Jul 2019

    முதல்வர் தகவல்

    கேரள அரசின் ஒப்புதலை பெற்றபிறகு ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

    12:33 (IST)17 Jul 2019

    ஸ்டாலின் கேள்வி

    உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்க முடியாமல் உள்ளது. மத்திய அரசின் நிதி கிடைப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது என சட்டமன்றத்தில் தெரிவித்த மு.க.ஸ்டாலின், இனியாவது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா எனக் கேள்வி எழுப்பினார். 

    12:07 (IST)17 Jul 2019

    அது ரிஜெக்ட் இல்ல ரிட்டர்ன்

    நீட் மசோதா தொடர்பான மத்திய அரசின் இமெயில் கடிதத்திலும், பிரமாண பத்திரத்திலும் ’ரிஜெக்ட்’ என்ற வார்த்தை இடம்பெறவில்லை எனவும்,  ’ரிட்டன்’ என்ற வார்த்தையே இடம்பெற்றிருந்தது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கமளித்துள்ளார். 

    11:54 (IST)17 Jul 2019

    நீட் விவகாரம்

    நீட் தேர்வு விவகாரத்தை மீண்டும் அவையில் எழுப்பினார், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். மீண்டும் 2 மசோதாக்களை நிறைவேற்றி, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பீர்களா? என ஸ்டாலின் கேட்டதற்கு, நீட் விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை, திருப்பி அனுப்பியது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். இதுவரை பதில் இல்லை, என்றார் சி.வி சண்முகம்

    10:54 (IST)17 Jul 2019

    TN Live: எஸ்.பி வேலுமணி

    ”தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது, இதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதிகளில் சாலைகள் அமைத்திட கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் சாலைகள் சீர் செய்யப்படும்” என சட்டப்பேரவையில் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

    TN Assembly: தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சியார் படத்தை, வரும் 19-ம் தேதி மாலை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என சபாநாயகர் தனபால் நேற்று அறிவித்தார். அதோடு முதல்வர் தலைமையில், துணை முதல்வர் முன்னிலையில் நடக்கும் விழாவில் பங்கேற்க அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

    நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதன் மூலம் நெசவு தொழிலாளர்களுக்கு சேலை ஒன்றிற்கு கூலி ரூ 43.1 ஆகவும், வேட்டிக்கு ரூ 24 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

    Tamil Nadu Mk Stalin Dmk Aiadmk
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment