ஹாய் கைய்ஸ் : 6 மணிநேரத்தில் ரூ.210 கோடி அளவிற்கு விற்பனை - பெருமையா இருக்கு 'குடி'மகன்களே...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும்

ஹாய் பிரெண்ட்ஸ், பாதுகாப்பாக இருங்க, கொரோனாவை விரட்டி அடிங்க

வாங்க, நாம நேரடியா நிகழ்ச்சிக்கு போவோம்.

கடந்த செவ்வாய்க்கிழமை, 6 மணிநேரத்தில் ரூ.210 கோடி அளவில் மதுவகைககளை வாங்கி நமது குடிமகன்கள் சாதனை படைத்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க, தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை பிறப்பித்தது. டாஸ்மாக் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் அடைக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 24ம் தேதி மாலை 6 மணிக்குள் டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணியளவில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மாலை 6 மணிக்கு மூடுவதற்கு முன்னதாகவே, அதாவது 6 மணிநேரத்திற்குள் ரூ.210 கோடி மதிப்பிலான மதுவகைககள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5400 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது பெருமையா..இது பெருமையா…

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக இயங்கி வருகின்றனர். இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

குணமடைந்தவரின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் எனவும், அதனை கொண்டு மற்றவர்களை குணப்படுத்த உதவியாக இருக்கும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து அது சிகிச்சை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிரிகள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

ஹாய் கைய்ஸ் : மக்களே சிந்திப்பீர், கொரோனாவுக்கு ஆதரவு அளித்து தங்களின் வாழ்வாதாரத்தை இழக்காதீர்.

ஹாய் கைய்ஸ் : கோடை காலம் துவங்கியிருச்சு. தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்க மக்கா…

சபரிமலையில், பங்குனி உத்திர ஆராட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 28ம் தேதி, நடை திறக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கொரோனா’ காரணமாக, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், சடங்குகள் அனைத்தும் நடைபெறும் என்றும் தேவசம் போர்டு கூறியிருந்தது.ஆனால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், கேரளாவில் அனைத்து கோவில்களிலும், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ‘சபரிமலை நடை, மார்ச், 28ல் திறக்காது. ரத்து செய்யப்பட்ட திருவிழா, தந்திரியின் ஆலோசனை பெற்று, வேறு தேதியில் நடத்தப்படும்’ என, தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், தமிழகத்தின் தினசரி மின் தேவை, 4,000 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகாவாட்டாகும்.வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், தமிழக மின் தேவை நேற்று, 11 ஆயிரம் மெகா வாட்டிற்கு கீழ் குறைந்தது. இம்மாதம், 18ம் தேதி மின் பயன்பாடு, 14 ஆயிரத்து, 600 மெகாவாட்டாக இருந்தது.தற்போது, 4,000 மெகா வாட் வரை குறைந்த மின் தேவை, வரும் நாட்களில், மேலும் குறையும் என, தெரிகிறது.மின் தேவையை பூர்த்தி செய்ய, தினமும், 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின் உற்பத்தி செய்யப்பட்ட, அனல் மின் நிலையங்களில், தற்போது, மின் வாரியம், 1,000 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம், Bye

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close