உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 22, அரசு மருத்துவமனைகளில் 38 என மொத்தம் 60 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,811-ஆக அதிகரித்துள்ளது.
குணமடைவோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,86,479 ஆக உயர்ந்துள்ளது. அதாவது,கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 89.76 % குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 46,703 ஆக உள்ளது.
தொடர்ந்து இரண்டு நாட்களாக தினமும் 94 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொவிட் தொற்றில் இருந்து இந்தியாவில் குணமடைந்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94,612 கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 43 லட்சத்தை (43,03,043) கடந்துள்ளது. குணமடைதல் விகிதம் தற்போது 79.68 சதவீதமாக உள்ளது. குணமடைந்தவர்களில் 60 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளனர் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 996 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 568 (செப்டம்பர் 17 – 530) , சேலம் – 291 (செப்டம்பர் 17 – 291), செங்கல்பட்டு – 283 (செப்டம்பர் 17 – 283 ), கடலூர் – 297 (செப்டம்பர் 17 – 206), திருவள்ளூர் – 207 (செப்டம்பர் 17 – 239), திருப்பூர் – 169 (செப்டம்பர் 17 – 191), காஞ்சிபுரம் – 156 ,(செப்டம்பர் 17 – 187), விழுப்புரம் – 127 (செப்டம்பர் 17 – 125), திருநெல்வேலி – 92 (செப்டம்பர் 17 – 95), வேலூர் – 95 (செப்டம்பர் 17 – 141) என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 2 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4, 520 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,55,639 ஆக அதிகரித்துள்ளது.