scorecardresearch

“வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் வீடியோக்கள் போலியானவை” : டி.ஜி.பி.சைலேந்திர பாபு டுவீட்

ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் அடங்கிய இந்த செல், இந்த சேவைக்காக 24 மணி நேரமும் வேலை செய்யும் என்றும் கூறினார்.

“வடமாநிலத்தவர் மீதான தாக்குதல் வீடியோக்கள் போலியானவை” : டி.ஜி.பி.சைலேந்திர பாபு டுவீட்

வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்திற்கு வந்து பணிபுரியும் பொழுது, அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

அவை “தவறானவை” என்று தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநர் சி.சைலேந்திர பாபு வியாழக்கிழமை தெளிவுபடுத்தினார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதைப்பற்றி டுவீட் செய்ததை அடுத்து, இந்த வீடியோக்கள் குறித்த ஊடக அறிக்கைகளை கவனத்தில் கொண்டு, தமிழக அரசு அதிகாரிகளிடம் பேசி, பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில தலைமைச் செயலாளர் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

“பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகாரில் உள்ள ஒருவர் தவறான வீடியோவை வெளியிட்டுள்ளார். இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன, இரண்டும் தவறான வீடியோக்கள். இந்த இரண்டு சம்பவங்களும் முன்னதாக திருப்பூர் மற்றும் கோவையில் நடந்துள்ளன.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், தமிழ்நாட்டு மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் அல்ல. ஒன்று பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இரு குழுக்களுக்கு இடையேயான மோதல் மற்றும் மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் வசிக்கும் இரண்டு உள்ளூர்வாசிகளுக்கு இடையிலான மோதல், ”என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறினார்.

இதற்கிடையில், சமூக வலைதளங்களில் போலி வீடியோக்களை பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் நேற்றிரவு ட்விட்டரில், “தமிழகத்தில் பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்கள் என்பது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் வதந்திகளை பரப்புகிறது என்று டிஜிபி தமிழ்நாடு கூறுகிறார். பீகார் மக்கள் இனி தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி பழைய வீடியோவை பரப்பப்பட்டு பீதியை உருவாக்குகிறது”, என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பகிரப்படும் போலி வீடியோக்கள் குறித்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விழிப்புடன் இருக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜி ஷசாங்க் சாய், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்புப் பிரிவு ஆய்வாளரின் மேற்பார்வையில் காவல்துறை தனிப் பிரிவை அமைத்துள்ளதாகவும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஹெல்ப்லைன் எண்களை வழங்குவதாகவும் கூறினார்.

ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் அடங்கிய இந்த செல், இந்த சேவைக்காக 24 மணி நேரமும் வேலை செய்யும் என்றும் கூறினார்.

“ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் இந்த விழிப்புணர்வை தொடங்கினோம், அங்கு காவல்துறை அதிகாரிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிறுவனங்களுக்குச் சென்று பல விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி, பீகார் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பான புகார்கள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்தனர். இந்த போலி வீடியோக்களின் தோற்றம் குறித்து தொழிலாளர்களுக்குத் தெரிவித்து, சமூக ஊடகங்களில் உள்ள அனைத்தையும் நம்பாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் அவர்களின் தாய்மொழியில் எங்களின் முன்முயற்சியைப் புரிந்துகொள்கிறார்கள்.

தொழிலாளர்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால் எங்களைத் தொடர்புகொள்ள ஹெல்ப்லைன்களை (9498101320/04212970017) அமைத்துள்ளோம். இதுவரை, வீடியோக்கள் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக தொழிலாளர்களிடமிருந்து எங்களுக்கு 35 அழைப்புகள் வந்துள்ளன, மேலும் அவர்களின் குறைகளை நாங்கள் நிவர்த்தி செய்து வருகிறோம், ”என்று எஸ்பி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu dgp says videos of attacks on migrants are fake after bihar cm expresses concern

Best of Express