சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் சர்ச்சைக்குரிய வாகனம் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.
Advertisment
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வாக்காளர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு இயந்திரம் பூட்டப்பட்டு அந்தத்த தொகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்துவுடன் வரும் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நாளுக்கும் வாக்கு எண்ணும் நாளுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு மாதம் இடைவெளி இருப்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் இந்த இடைவெளியை ஏற்றுக்கொள்ள முடியாது, உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் தேர்தல் ஆணையம் இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் நேற்று நள்ளிரவு கழிவறை வசதி கொண்ட கண்டெய்னர் லாரி வந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள்ளும் ஒரு லாரி கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.பொன்னுசாமி என்பவர், (ஏப்ரல் 15, மாலை 7 மணி) லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார்.
மேலும் அந்த இடத்தில் இருந்த கழிவறை வசதி கொண்ட லாரியை ஆய்வு செய்துள்ளார். அப்போது திமுக, அதிமுக கட்சியின் பிரபமுகர்கள் அங்கே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே லயோலா கல்லூரி வளாகத்தில் பல்வேறு கட்டிடங்களில் கழிவறை வசதிகள் இருக்கும் போது புதிதாக கண்டெய்னர் லாரி வடிவில் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியுடன் இந்த கண்டெய்னர் லாரி வருகை பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil