பொதுப் பிரிவு மாணவர்களுக்கான இன்ஜினியரிங் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது 1,41,077 விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தொழில் கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு வரும் 17,18-ம் தேதி தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு 19ம் தேதி நடைபெறவுள்ளது. விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறும். இதைத்தொடர்ந்து அவர்களுக்கான கலந்தாய்வு 21-ம் தேதி நடைபெறும்.
பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 23-ம் தேதி முதல் தொடங்கி, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறும். அடுத்தகட்டமாக துணை கலந்தாய்வு பதிவுக்கான விண்ணப்பம் ஆகஸ்டு 16-ம் தேதி பதிவு செய்ய வேண்டும். எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 18-ம் தேதி நடைபெறும்.
பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு மூலம் சேர்ந்த மாணவர்கள், மருத்துவ கல்லூரிக்கு செல்வதால் ஏற்படும் காலியிடம் நிரப்பும் நிலை தற்போது இல்லை. அதனால்தான் காலதாமதம் ஏற்பட்டது. ஒரு இடம் கூட வீணாகிவிடக் கூடாது என்பது தான் நோக்கமாக இருக்கிறது.
நடப்பு ஆண்டில் பொறியியல் படிப்பு செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கும். பெறியியல் கலந்தாய்வுக்கு வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். காலை 7-மணி முதலே கலந்தாய்வு தொடங்கும் என்பதால், ஒருநாள் முன்னதாகவே அவர்களை சென்னையில் வந்து தங்க ஏற்பாடு செய்து தரப்படும்.
பொறியியல் இந்த ஆண்டு புதிய கண்டனம் நடைமுறைக்கு வருகிறது. ஒவ்வொரு 3-ஆண்டுகளுக்கும் கட்டண விதத்தை மாற்றி அமைக்கலாம் என்ற விதி உள்ளது. கடைசியாக 2012-13-ம் ஆண்டு கல்லூரி நிர்ணயிக்கப்பட்டது. அதப்விறகு கட்டணத்தை கூட்டவில்லை. தற்போது, 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கூடுதலாக ரூ.10,000 கட்டணம் அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 583 கல்லூரிகளில் 1,73,643 பொறியியல் சீட்டுகள் உள்ளது.
2016 முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பம் வழங்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறுகிறது. எதிர்வரும் காலங்களில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக கலந்தாய்வு இணையவழி மூலம் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தேவையான அனைத்து தொழிட்நுட்ப வசதிகளையும் அரசு செய்து வருகிறது என்று கூறினார்.