Advertisment

ஜெயலலிதா மரண மர்மம் : ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு 3 மாதம் அவகாசம்

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
jeyalalitha, j.jeyalalitha video, apollo hospital, aiadmk, TTV Dhinakaran, vetrivel, RK Nagar, RK Nagar ByPoll, Krishnapriya, Ilavarasi, VK Sasikala

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.

Advertisment

ஜெயலலிதா மரண மர்மம், இன்னமும் தமிழக அரசியலை சூடாக்கியபடியே இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி சென்னை கோட்டையில் நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் மூலமாக விசாரணை நடத்தப்படும்’ என அறிவித்தார்.

ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பான அந்த விசாரணை கமிஷன் அறிவிப்பு செயல்வடிவம் பெறாமலேயே இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘அப்பல்லோவில் இருந்தபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் குறிப்பிட்டது பொய். அதற்காக மன்னிப்பு கோருகிறோம்’ என்றார். இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை அதிகமானது.

இந்தச் சூழலில் ஏற்கனவே அறிவித்த விசாரணை ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயரை செப்டம்பர் 25-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது, அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான ஆறுமுகசாமி. கோவையை சேர்ந்தவர் இவர். வயது 65.

2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளராக நியமிக்கப்பட்டவர் இவர். 2014-ம் ஆண்டு பணி ஓய்வு பெறும் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் மும்பையில் உள்ள கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டில் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச்சிற்கான உறுப்பினராக பொறுப்பேற்றார். இந்தச் சூழலில்தான் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு பொறுப்பேற்கிறார்.

விசாரணை ஆணைய நீதிபதி பெயர் அறிவிக்கப்பட்டாலும் விசாரணைக்கான கால அளவு, விசாரணை ஆணையத்தின் அதிகார வரம்பு ஆகியன தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் செப்டம்பர் 27-ம் தேதி (செவ்வாய்) இரவு இது தொடர்பான கவர்னரின் ஆணையை தமிழக பொதுத்துறை முதன்மை செயலாளர் மூலமாக தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கான கால அவகாசம் 3 மாதங்கள் ஆகும். 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழல், அவரது அப்போதைய நிலைமை, அதன்பிறகு டிசம்பர் 5-ம் தேதி வரை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை ஆகியவை குறித்து இந்த ஆணையம் விசாரிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி டிசம்பர் 25-ம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யவேண்டும். அந்த ஆணைய அறிக்கை அடிப்படையில் உரிய மேல் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

 

Justice Arumughaswamy Vk Sasikala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment