தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை அருவி அலங்கரிக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் செயலாளர் செல்வராஜ் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குனர் மோகன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.