பள்ளி கல்வித்துறை இயக்குனராக அறிவொளி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது தொடக்க கல்வித்துறை இயக்குனராக அறிவொளி உள்ளார்.
மேலும் பாடநூல் கழகத்தில் உறுப்பினர் செயலராக இருக்கும் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனர் ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, இந்தப் பணியிடத்தில் இருந்த பழனிசாமி முறைசாரா கல்வி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். முறைசாரா கல்வி இயக்குனராக இருக்கும் குப்புசாமி பாடநூல் கழக உறுப்பினர் செயலராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
5 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வந்த இணை இயக்குனர்கள் நரேஷ், ராமசாமி உள்ளிட்ட 7 இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வி இயக்குனர் பணியிடத்தை, மீண்டும் தமிழக அரசு நிரப்பி இருப்பது ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, திமுக ஆட்சிக்கு வந்ததும் பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த கண்ணப்பன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்த பணியிடத்தில் ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“