துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரண்டு நாட்கள் பயணமாக இன்று(திங்கள் கிழமை) தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த வெங்கையா நாயுடுவை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் வரவேற்றனர். இந்த வரவேற்பின் போது, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற வெங்கையா நாயுடு அங்கு சிறிது நேரம் ஓய்பெடுத்தார். பின்னர், அங்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் அலகை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதிய நூலை வெளியிட்டார். இதைதொடர்ந்து அண்ணா பல்லைக்ழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்யில் கலந்து கொண்டார்.
லலித் காலா அகடமியில் மறைந்த கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை வெங்கையா நாயுடு நாளை தொடங்கி வைக்க இருக்கிறார். ஆந்திர வர்த்தக சபையின் 90-ம் ஆண்டு விழாவிலும் பங்கேற்கவுள்ளார்.