scorecardresearch

சைகை மொழியில் சட்டமன்ற நிகழ்வுகள்: முதல்வர் அறிமுகம்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை சைகை மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

முதல்வர்

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை சைகை மொழியில் மொழிபெயர்க்கும் முயற்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டபேரவை நிகழ்வுகளை சைகை மொழியில் மொழி பெயர்க்கும் முறையை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இந்நிலையில் இது யுடியூப் காணொலி மூலம்  ஒளிபரப்படும். மேலும் எல்லா ஊடங்களிலும், இது வெளியாகும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்வு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு முன்னிலையில் நடைபெற்றது. அமைச்சர்கள் கீதா ஜீவன், மா. சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்ற ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உள்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  சைகைமொழி பெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாடிற்காக தமிழக அரசு ரூ, 1 லட்சத்து 10 ஆயிரத்து 648 கோடி ஒதிக்கி உள்ளது. இது 2020- 21 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகைவிட அதிகம்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின் , ‘ மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழ்நாடு  நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வீடு வாங்குவதற்கான டெபாசிட் தொகை செலுத்த முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு, கூட்டுறவு வங்கி மூலம், வட்டியில்லா கடன் 5 வருடங்கள் வரை வழங்கப்படும் என்று  கூறினார். இந்த கடன் திட்டம் ரூ.1.20 கோடியில் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் 1000 பேர் பயணடைவர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu launches telecast of assembly proceedings in sign language