வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசியல் சாராத பிரபலங்கள் பலரை சந்தித்துள்ளார்.
இந்தியாவில் வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், இப்போதிருந்தே அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜவின் மூத்த தலைவருமான அமித்ஷா வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்தார்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பாஜக அரசு நிகழ்த்திய சாதனைகள் குறித்து விளக்கும் வகையில் நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா நேற்று தமிழகம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சென்னை கிண்டியில் தனியார் ஹோட்டலில் தங்கிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் சில மணி நேரங்கள் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு தமிழக உள்துறை செய்லாளர் அமுதா அவருக்கு வரவேற்பு கொடுத்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோருடன் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அமித்ஷா தமிழகத்தில் அரசியல் அல்லாத பிரபலங்கள் பலரை சந்தித்தார். இதில் குறிப்பாக வின் தொலைக்காட்சி தேவநாதன், முன்னாள் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகரன், இந்தியா சிமெண்ட்ஸ், செட்டிநாடு சிமெண்ட்ஸ், தாஜ், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், நல்லி குப்புசாமி, பாஸ்கரன், அனிதா பால்துரை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆர்காட் நவாப், டேப்லட்ஸ் இந்தியா, பி.கே.எஃப், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 24 பேருடன் 2 மணி நேரம் நடத்த இந்த சந்திப்பில் பல நிகழ்வகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிரைலயில், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் அல்லாத பிரபலங்களை சந்திதப்பதை வழக்கமாக வைத்திருக்கும் பாஜக தலைவர் இந்த முறையும் அதே யுக்தியை தொடர்ந்துள்ளனர். இதில் ஜல்லிக்கட்டு தொடங்கி சமூகரீதியான பல கருத்துக்களை தைரியமாக முன் வைக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil