Advertisment

நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் போராட்டம்

நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம்.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் போராட்டம்

நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம்.

Advertisment

நீண்ட ஆண்டுகளாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

publive-image

இதில் தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முழக்கங்களைத் தொடர்ந்து இது குறித்து பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர்

ஜவாஹிருல்லா பேசியதாவது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கோவை மண்டல சார்பாக நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் 37 முஸ்லிம் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.

publive-image

பல்வேறு முன் விடுதலை அறிவிப்புகள் பல காலமாக பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு மற்றும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு முன்னிட்டு விடுதலை செய்துள்ளனர். இதற்கு முன்பு விடுதலை செய்த போது நாங்கள் குறிப்பிட்ட 37  முஸ்லிம் கைதிகளை மட்டும் விடுதலை செய்யப்படவில்லை.

எனவே முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 37" முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து சிறை முற்றுகை போராட்டத்தை நடத்தி வருகின்றோம்.ஒரு மாதத்திற்குள்ளாக நடைபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். 

ஆர்.என்.ரவி  தமிழ்நாட்டில் ஆளுநராக நீடிப்பதற்கு ஒரு நிமிடம் கூட தகுதியற்றவர். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தமிழக முதல்வர் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அமைந்திருக்கிறது.

publive-image

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பாரதிய ஜனதாவுக்கு ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு அடுத்த கட்டமாக கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் எதிர்க்கட்சி கூட்டங்கள் நடைபெற இருக்கிறது

அடுத்த முன்னெடுப்பு பாஜ.க"வின் கூட்டணியை ஆட்சியை முந்தைய ஆட்சியில் இருந்து நீக்க கூடிய வகையில் 2024 தேர்தல் இருக்கும் என தெரிவித்தார்.இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான். கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment