தமிழக நிதியமைச்சரின் பெயரில் போலி இ-மெயில்: 7 பேர் மீது வழக்குப்பதிவு!

Tamilnadu finance minister PTR Palanivel Thiaga Rajan latest Tamil News: நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளுக்கு களங்கம் ஏற்படுத்திய ஏழு பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

PTR Palanivel Thiyagarajan, Tamilnadu Budget 2021
Tamil Nadu Budget 2021 Live:

finance minister PTR Palanivel Thiaga Rajan Tamil News: அதிமுக ஆட்சியின் கடந்த பத்தாண்டு கால நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் நேற்று வெளியிட்டார். 120 பக்கங்களைக் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் கடன் சுமை 5 லட்சத்து 70ஆயிரத்து 189 கோடி ரூபாயாக உள்ளது எனவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ஆயிரம் ரூபாயாக உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், “தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் 39,079 கோடி ரூபாய் மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது. மாநில வரிவருவாய் வளர்ச்சி திமுக ஆட்சிக்காலத்தில் 11.4 சதவிகிதமாக உயர்ந்திருந்தது. 2016-2021ல் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவிகிதமாக சரிந்துள்ளது” என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாக ராஜன் நேற்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னர், அவரது பெயரில் போலி இ-மெயில் (palanivel.thiagarajan@gmail.com) ஒன்றை உருவாக்கிய சில மர்மநபர்கள் அவர்மீது அவதூறு பரப்பியுள்ளனர். இதுகுறித்து சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது பெயரில் போலி மின்னஞ்சல் ஆரம்பித்து அதன் மூலம், மூஸ்லீம்களை அவதூறாக பேசியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழக நிதி அமைச்சரின்பேரில் போலி மின்னஞ்சல் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மத உணர்வுகளுக்கு களங்கம் ஏற்படுத்திய மர்மநபர்களான ஏழு பேர் மீது E4 PS Cr No: 736/21 U/s 465, 467, r/w 34 IPC & 500, 153(A),295(A) IPC & 66D IT Act, ஆகிய 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil nadu news in tamil 7 booked for circulating fake e mail on tn finance minister

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com