Advertisment

Tamil News: ரஷ்ய படையெடுப்பால் இதுவரை 1300 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஜெலன்ஸ்கி

Tamil Nadu News Latest Updates Today, Five state election results 2022, Ukraine Russia war latest news 12 March 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil News: ரஷ்ய படையெடுப்பால் இதுவரை 1300 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஜெலன்ஸ்கி

Tamil Nadu News Today LIVE: நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை விடுதலையானார்.

Advertisment

என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. ஜெயக்குமார் பேட்டி

என் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் வாக்குச்சாவடியை கைப்பற்ற முயற்சித்தனர் . திமுக அரசு’ ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு நல்லது எதுவும் செய்யவில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஹிட்லரின் மறு உருவம் தான் ஸ்டாலின்- சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த ஜெயக்குமார் பேட்டி!

Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 128-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைனில் தவித்த அனைத்து மாணவர்களும் தமிழகம் திரும்பினர்!

உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர். கடைசியாக திரும்பிய 10 மாணவர்களுடன் தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு மீட்பு குழுவினரும் காலை சென்னை திரும்புகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவர்களை வரவேற்கிறார்.

Tamilnadu News Update

பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கிய இந்திய ஏவுகணை!

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியது. ஏவுகணை தரையிறங்கியதற்கு இந்தியா வருத்தம் தெரிவிப்பதாக, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

அனைத்து கிராமங்களிலும் 75 மரங்களை நட மோடி வேண்டுகோள்!

கிராம சுயாட்சியின் கனவை நிறைவேற்ற பஞ்சாயத்துராஜ் அமைப்பு முக்கியமானது. எனவே 75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் 75 மரங்களை நட பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tamil Nadu News LIVE Updates:

இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு!

உக்ரைன் ரஷ்யா போரால்’ இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் தகவல்!

அந்த இமயமலை சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன் தான்.. சிபிஐ!

தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் கைதான நிலையில், ஊழலில் தொடர்புடைய இமயமலை சாமியார் ஆனந்த் சுப்பிரமணியன் தான் என டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:46 (IST) 12 Mar 2022
    மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

    மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதி, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், இதே நாளில் மகாராஷ்டிரா, பீகார், சத்தீஸ்கர் மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • 20:43 (IST) 12 Mar 2022
    லோக் அதாலத்தில் 80 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு

    தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ₨334 கோடி மதிப்பிலான 79,599 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 19:30 (IST) 12 Mar 2022
    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய கம்யூ. எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம்

    பி.எஃப். வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய கம்யூ. எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம் எழுதியுள்ளார்.



  • 19:29 (IST) 12 Mar 2022
    ரஷ்ய பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் உருக்கமான வேண்டுகோள்

    உக்ரைன் ரஷ்யா போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா அனு ஆயுதங்களை பயன்படுத்த தயாராகி வருகிறது. இதனை எதிர்கொள்ள உக்ரைனும் தயாராகி வரும் நிலையில், "போர்க்களத்தில் உங்கள் மகன்கள் கொல்லப்படலாம்" என்று ரஷ்ய பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 18:36 (IST) 12 Mar 2022
    வேலை வாய்ப்பில் கட்டுமான நிறுவனங்களின் பங்கு முக்கியமானது - முதல்வர் ஸ்டாலின்

    மாமல்லபுரத்தில் இந்திய கட்டுமான சங்க மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின் நாட்டின் உள்கட்டமைப்பில் கட்டுமான நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது நாட்டின் முன்னேற்றம், வேலை வாய்ப்பில் கட்டுமான நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்



  • 17:33 (IST) 12 Mar 2022
    உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

    உக்ரைனுக்கு மேற்கத்திய இராணுவ உபகரணங்களை ரஷ்யா இலக்கு வைக்கக்கூடும் என்று ஒரு மூத்த ரஷ்ய தூதர் எச்சரிக்கிறார்.

    சனிக்கிழமையன்று பேசிய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ், உக்ரைனுக்கு மேற்கத்திய ஆயுதங்களை வழங்குவதை இலக்குகளாகப் பார்க்கும் ரஷ்யா, அமெரிக்காவை எச்சரித்துள்ளது என்றார்.

    ரியாப்கோவ், ரஷ்யா "அமெரிக்காவை எச்சரித்தது, அது திட்டமிடும் பல நாடுகளில் இருந்து ஆயுதங்களை செலுத்துவது ஒரு ஆபத்தான நடவடிக்கை அல்ல, அது அந்த கான்வாய்களை முறையான இலக்குகளாக மாற்றும் ஒரு நடவடிக்கையாகும்". ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் "ரஷ்ய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கு கடுமையான அடியை எதிர்கொள்ளும் முன்னோடியில்லாத முயற்சி" என்றும் அவர் கண்டித்தார், ஆனால் ரஷ்யா தன்னைத்தானே காயப்படுத்தாமல் இருக்க அளவிடப்பட்ட வழியில் செயல்படும் என்று குறிப்பிட்டார்.

    மேற்கத்திய நாடுகளுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் வணிகங்களை வெளியேற்றும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்று கூறிய ரியாப்கோவ், "நாங்கள் நிலைமையை அதிகரிக்கப் போவதில்லை" என்றும் கூறினார். (ஏபி)



  • 17:11 (IST) 12 Mar 2022
    பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமனம்

    ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக டூபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணியின் கேப்டனாக விராட் கோலி கடந்த சீசன் வரை இருந்த நிலையில், தற்போது புதிய கேப்டனாக தென்னாப்பிரிக்க வீரர் டூபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்



  • 16:49 (IST) 12 Mar 2022
    ரஷ்ய கோரிக்கைகளுக்கு இணங்க பரிந்துரைத்ததாக வெளியான பென்னட் அறிக்கைக்கு இஸ்ரேல், உக்ரைன் மறுப்பு

    ஒரு உயர் உக்ரேனிய ஆலோசகரும் ஒரு இஸ்ரேலிய அதிகாரியும் சனிக்கிழமையன்று ஒரு ஊடக அறிக்கைக்கு எதிராக விளக்கம் அளித்தனர்,

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் தூதரக முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதிடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேசினார்.

    இஸ்ரேலின் வாலா நியூஸ், ஜெருசலேம் போஸ்ட் மற்றும் அமெரிக்க செய்தித் தளமான ஆக்சியோஸ் ஆகியவற்றால் நடத்தப்பட்ட ஒரு அறிக்கை, அடையாளம் தெரியாத உக்ரேனிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பென்னட் உக்ரைனை ரஷ்யாவிடம் இணங்க வலியுறுத்தியதாக பரிந்துரைத்துள்ளது.

    இஸ்ரேல், "மற்ற நிபந்தனைக்குட்பட்ட இடைத்தரகர் நாடுகளைப் போல, ரஷ்ய கூட்டமைப்பின் எந்தவொரு கோரிக்கையையும் ஏற்க உக்ரைனுக்கு ஆலோசனை வழங்கவில்லை" என்று உக்ரைனிய ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் ட்விட்டரில் தெரிவித்தார். "இராணுவ மற்றும் அரசியல் காரணங்களுக்காக இது சாத்தியமற்றது. மாறாக, நிகழ்வுகளை இன்னும் போதுமானதாக மதிப்பிடுமாறு இஸ்ரேல் ரஷ்யாவை வலியுறுத்துகிறது." (ராய்ட்டர்ஸ்)



  • 16:33 (IST) 12 Mar 2022
    சென்னை: பெயிண்ட் குடோனில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து

    சென்னை, அம்பத்தூர் அருகே தனியார் பெயிண்ட் குடோனில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது



  • 16:19 (IST) 12 Mar 2022
    உக்ரைன் மரியுபோலில் உள்ள மசூதி மீது ரஷ்யா தாக்குதல்

    துருக்கிய குடிமக்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள ஒரு மசூதியில் ரஷ்ய படைகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

    முற்றுகையால் நூறாயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ள மரியுபோலில் இருந்து மக்களை வெளியேற அனுமதிக்க ரஷ்யா மறுப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மக்களை வெளியேற்றத் தவறியதற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

    மரியுபோலில் உள்ள சுல்தான் சுலைமான் தி மாக்னிஃபிசென்ட் மற்றும் அவரது மனைவி ரோக்சோலானா (ஹுர்ரெம் சுல்தான்) ஆகியோரின் மசூதி ரஷ்ய படையெடுப்பாளர்களால் ஷெல் தாக்குதலுக்கு உள்ளானது என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. துருக்கியின் குடிமக்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஷெல் தாக்குதலில் இருந்து அங்கு மறைந்துள்ளனர்.

    இதில் யாராவது கொல்லப்பட்டார்களா அல்லது காயமடைந்தார்களா என்று கூறவில்லை. (ராய்ட்டர்ஸ்)



  • 16:15 (IST) 12 Mar 2022
    லைகா நிறுவனத்திற்கு ரூ15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் உத்தரவு

    விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக கடனாக பெற்ற ரூ21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தியிருந்தது. இந்த தொகையை செலுத்தாமல் ’வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரிய வழக்கில், லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூ15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்த வேண்டும் என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 16:00 (IST) 12 Mar 2022
    டெல்லியில் நாளை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

    டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் 5 மாநில தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது



  • 15:40 (IST) 12 Mar 2022
    முதுநிலை நீட் தேர்வு; அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைப்பு

    முதுநிலை நீட் தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் கட் ஆஃப் மதிப்பெண் 15% குறைக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினருக்கு 35%, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 25% ஆகவும் குறைக்க தேசிய தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது



  • 15:26 (IST) 12 Mar 2022
    “உக்ரைன் போர்” தலைநகர் கீவ் நோக்கி முன்னேறும் ரஷிய படைகள்!

    உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில் தலைநகர் கீவ், ஒடெசா, டினிப்ரோ மற்றும் கார்கிவ் உள்ளிட்ட பல நகரங்களில் சனிக்கிழமை வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



  • 15:24 (IST) 12 Mar 2022
    சாதனை படைத்த இந்திய வீராங்கனை கோஸ்வாமி

    மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. அவர் உலகக்கோப்பை தொடர்களில் இதுவரை 40 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.



  • 14:52 (IST) 12 Mar 2022
    தனியார் பொறியியல் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பு!

    காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அரசின் உதவித்தொகை கிடைத்தபோதும், தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை வட்டியுடன் மாணவருக்கு திரும்ப செலுத்த வேண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.



  • 14:49 (IST) 12 Mar 2022
    வனப் பாதுகாவலர் சேகர் குமார் பணிமாற்றம் - உயர் நீதிமன்றம் கேள்வி!

    தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ்ஜை பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா? என்று கேள்வியெழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 15ல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 14:33 (IST) 12 Mar 2022
    மக்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

    2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவில் தடுப்பூசி போட வேண்டும். கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் கொரோனா வீரியத்தோடு இருக்கிறது. தொற்று குறைந்திருந்தாலும் மக்கள் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். கொரோனா இறப்பு பூஜ்ஜிய நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது." என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 14:17 (IST) 12 Mar 2022
    தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உட்பட 14 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:16 (IST) 12 Mar 2022
    ஆபாசத்தை தூண்டும் குதிரை வால் சடைக்கு தடை...!

    ஜப்பானில் உள்ள பள்ளிகள், மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

    இது போன்ற வினோதமான விதிகள் ஏற்படுத்தப்படுவது ஜப்பானில் இது முதல் முறை இல்லையென்றாலும் இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.



  • 14:15 (IST) 12 Mar 2022
    ஆபாசத்தை தூண்டும் குதிரை வால் சடைக்கு தடை...!

    ஜப்பானில் உள்ள பள்ளிகள், மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால் (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

    இது போன்ற வினோதமான விதிகள் ஏற்படுத்தப்படுவது ஜப்பானில் இது முதல் முறை இல்லையென்றாலும் இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.



  • 13:48 (IST) 12 Mar 2022
    இந்தியா Vs இலங்கை பகல்-இரவு டெஸ்ட்: டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு!

    இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி களமிறங்கியுள்ளது



  • 13:26 (IST) 12 Mar 2022
    மேற்கு இந்திய தீவு அணியை வீழ்த்திய இந்தியா

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்யில் மேற்கு இந்திய தீவுகள் அணியை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.



  • 13:26 (IST) 12 Mar 2022
    மேற்கு இந்திய தீவு அணியை வீழ்த்திய இந்தியா

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்யில் மேற்கு இந்திய தீவுகள் அணியை 115 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது.



  • 13:18 (IST) 12 Mar 2022
    பொதுத் தேர்வு - திருத்தம் செய்ய கடைசி நாள்

    10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களின் விவரங்கள் குறித்து திருத்தங்கள் செய்ய இன்று கடைசி நாளாகும். தேர்வுத் துறையின் இணையதளத்தை பயன்படுத்தி உரிய திருத்தங்களை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • 12:38 (IST) 12 Mar 2022
    பி.எஃப் மீதான வட்டி 8.10%ஆக குறைப்பு

    2021-22 ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பிஎஃப் மீதான வட்டி 8.50 சதவீதத்தில் இருந்து 8.10ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



  • 12:36 (IST) 12 Mar 2022
    பி.எஃப் மீதான வட்டி 8.10%ஆக குறைப்பு

    2021-22 ம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பிஎஃப் மீதான வட்டி 8.50 சதவீதத்தில் இருந்து 8.10ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.



  • 12:26 (IST) 12 Mar 2022
    'எல்லாம் என்னால்தான் என்ற எண்ணம் எனக்கில்லை' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    முதலமைச்சர் நற்காலியில் அமர்ந்திருப்பதால் என்னால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்று எண்ணவில்லை. அனைவரும் மக்களுக்கு உயிராய், உணர்வாய் இருந்து வருகிறோம். சாதி மோதல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை -சமூக பிரச்சினை என ஆட்சியர்கள், காவல்துறை, வன அலுவலர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.



  • 11:22 (IST) 12 Mar 2022
    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்டு கான்வென்ட்டில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • 11:15 (IST) 12 Mar 2022
    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை வரவேற்ற முதல்வர்

    உக்ரைனில் இருந்து சென்னை அழைத்துவரப்பட்ட மாணவர்களை, விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து, தமிழ்நாடு மாணவர்களை பத்திரமாக மீட்டதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.



  • 11:05 (IST) 12 Mar 2022
    தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை!

    தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழக்கவில்லை. ஆனாலும்’ சீனாவின் மீண்டும் ஊரடங்கு என்பதை மனதில் முன்னிறுத்தி மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!



  • 11:04 (IST) 12 Mar 2022
    தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று திறப்பு!

    குஜராத் மாநிலத்தில்’ தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.



  • 11:04 (IST) 12 Mar 2022
    ஜெய்சங்கருக்கு’ நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

    உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்களை மீட்க உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு’ ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.



  • 10:59 (IST) 12 Mar 2022
    முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

    மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின், 3வது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.



  • 10:53 (IST) 12 Mar 2022
    ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ்!

    சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான ஜெயக்குமாரை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர்.



  • 10:52 (IST) 12 Mar 2022
    ஜெயக்குமாரை சந்தித்த ஓபிஎஸ்!

    சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான ஜெயக்குமாரை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்தனர்.



  • 10:52 (IST) 12 Mar 2022
    முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

    மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின், 3வது நாளாக இன்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.



  • 10:04 (IST) 12 Mar 2022
    உக்ரைனில் மாணவர்கள் பல சங்கடங்களை அனுபவித்தனர்.. திருச்சி சிவா!

    உக்ரைனில் மாணவர்கள் பல சங்கடங்களை அனுபவித்து உள்ளனர். மொழி பிரச்சனைகளை மாணவர்கள் சந்தித்தனர். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்தோம். தாயுள்ளத்தோடு முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையால் மாணவர்கள் தமிழகம் திரும்பினர் என எம்பி திருச்சி சிவா செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.



  • 10:03 (IST) 12 Mar 2022
    உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை வரவேற்ற முதல்வர்!

    உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்களின் கடைசி குழு சென்னை வந்தடைந்தனர். அவர்களை, முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்!

    தமிழக அரசின் சிறப்பு மீட்புக்குழு, மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின்!



  • 10:00 (IST) 12 Mar 2022
    இந்தியாவில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,614 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. வைரஸ் பாதிப்பால்’நேற்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 09:21 (IST) 12 Mar 2022
    மகளிர் உலகக் கோப்பை.. இந்திய கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை!

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியையும் சேர்த்து மொத்தம் 24 போட்டிகளில் இந்தியாவை உலகக் கோப்பையில் வழிநடத்தியுள்ளார். இதன்மூலம்’ ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு அணியை அதிகமுறை வழிநடத்திய கேப்டன் என்ற சாதனையை மிதாலி படைத்துள்ளார்.



  • 09:19 (IST) 12 Mar 2022
    ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

    ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்கும் நடைமுறைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



  • 09:18 (IST) 12 Mar 2022
    மாவட்ட ஆட்சியர்களுக்கு’ முதல்வர் அறிவுறுத்தல்!

    பட்டியல் பிரிவினர், பழங்குடிகள், மாற்றுத் திறனாளிகள் தேவைகளை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.



  • 08:37 (IST) 12 Mar 2022
    அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும், இன்று மக்கள் நீதிமன்றம்!

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும், இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த’நிலையில் மக்கள் நீதிமன்றங்கள் இன்று தொடங்குகிறது.



  • 08:37 (IST) 12 Mar 2022
    மார்ச் 28, 29-இல் தேசிய அளவில் வேலை நிறுத்தம்!

    14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய இரு நாட்களும் தேசிய அளவில் வேலை நிறுத்தம் நடந்த உள்ளதாக’ வருமான வரித்துறை மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.



  • 08:37 (IST) 12 Mar 2022
    திருச்செந்தூர் கோயிலில் தங்கத்தேர் உலா ரத்து!

    பராமரிப்பு பணி காரணமாக’ திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தங்கத்தேர் உலா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 08:36 (IST) 12 Mar 2022
    ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

    ஜம்மு காஷ்மீரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், துணை விமானி சங்கல்ப் யாதவ் உயிரிழந்தார்.



  • 08:36 (IST) 12 Mar 2022
    இந்தியா, இலங்கை மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

    இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான பகல் - இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் இன்று தொடங்குகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment