Advertisment

Tamil News Highlights: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Tamil Nadu News: தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்திகள் லைவ் அப்டேட்ஸ்

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Tamil Nadu News : தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், அதன் நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று (ஜுலை.30) மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisment

இந்த ஆலோசனையில் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா?, தளர்த்துவதா? என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது தொடர்பாக மருத்துவக்குழு பரிந்துரை வழங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை நடத்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் வந்து விசாரணை நடத்த உள்ளனர். தமிழக தங்கம் கடத்தல் சம்பவங்களுக்கும், கேரளாவில் தங்கம் கடத்தியதாக கைதான ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்த இருப்பதாக தெரிகிறது. இதனால் தற்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள பரபரப்பு போல் தமிழகத்திலும் பரபரப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.



























Highlights

    22:38 (IST)30 Jul 2020

    செவ்வாய்க் கிரகத்துக்கான Perseverance ரோவர் விண்ணில் செலுத்தப்பட்டது

    நாசா, இன்று தனது செவ்வாய்க் கிரகத்துக்கான Perseverance ரோவரை புளோரிடாவின் கேப் கனாவெரல் விமானப்படை நிலையத்திலிருந்து ((Cape Canaveral Air Force Station)) விண்ணில் செலுத்தியது. செவ்வாய்க் கிரகத்தில் பண்டைய வாழ்க்கைக்கான அறிகுறிகளைத் ஆராய்ந்து, பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்புவதை நோக்கமாக கொண்டுள்ளது.  

    கடந்த வாரம், செவ்வாய் கிரகத்திற்கு பூமியில் இருந்து இரண்டு விண்கலன்கள்  அனுப்பப்பட்டது . சீனாவின் Tianwen-1 அல்லது “Questions to Heaven” , செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்குவதை நோக்கமாகக் கொண்டது.

    ஐக்கிய அரபு எமிரேட்டின் செவ்வாய்க் கிரகத்திற்கான விண்கலம், ஜப்பானில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

    22:28 (IST)30 Jul 2020

    அகில இந்திய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இலவச சிகிச்சை

    கோவிட் நோயைக் கண்டறிதலுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் நோய் பாதித்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வசதி புதுதில்லியில் உள்ள அகில இந்திய ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் (ஏ.ஐ.ஐ.ஓ.) கோவிட் 19 சுகாதார மையத்தில் தொடங்கப் பட்டதாக ஆயுஷ் துறை அமைச்சர் திரு. ஸ்ரீபாத எஸ்ஸோ நாயக் தெரிவித்தார்.

    22:24 (IST)30 Jul 2020

    தஞ்சாவூர் மாவட்ட கோவிட்-19 விவரங்கள் (30.07.2020)

    22:22 (IST)30 Jul 2020

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதி

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தனது  வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   

    21:14 (IST)30 Jul 2020

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சென்னைக்ககுள் ஒட்டகங்கள் கொண்டு வர தடை

    சென்னையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஒட்டகங்களை பழி கொடுத்து குர்பானி அளிக்கும் நிகழ்வுக்கு  தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.  

    20:02 (IST)30 Jul 2020

    புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக- திமுக மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம்

    கழக தலைவர் மு.கஸ்டாலின் அவர்கள் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில்,  கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை - அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள “புதிய தேசியக் கொள்கை-2020”-ஐ நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.      

    19:39 (IST)30 Jul 2020

    புதிய கல்விக்கொள்கை நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று - உதயநிதி ஸ்டாலின்

    புதிய கல்விக்கொள்கை என்பதன் மூலம் மாநில உரிமைகள், சமூக நீதி போன்றவற்றின் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்தியுள்ளது மத்திய அரசு என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தார். 

    19:31 (IST)30 Jul 2020

    மொரீசியஸ் உச்சநீதிமன்ற புதிய கட்டிடத்தை இருநாடுகளின் பிரதமர்களும் திறந்து வைத்தனர்

    இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள மொரீசியஸ் உச்சநீதிமன்றத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடியும், அந்நாட்டு பிரதமர் திரு. பிரவீன் ஜெகந்நாத்-தும் காணொலி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய மொரீசியஸ் பிரதமர், கோவிட்-19 தொற்று காலத்தில் இந்தியா தங்களது நாட்டிற்கு மருந்து உள்ளிட்ட உதவிகளை செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இத்தகைய உதவி இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

    19:23 (IST)30 Jul 2020

    சென்னையில் மட்டும் இன்று 1,175 பேருக்கு கொரோனா; 18 பேர் பலி

    சென்னையில் மட்டும் இன்று 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று கொரோனாவால் 18 உயிரிழந்தனர் இதன் மூலம், இதுவரை மொத்தம் 2092 பேர் உயிரிழந்துள்ளனர்.

    19:23 (IST)30 Jul 2020

    சென்னையில் மட்டும் இன்று 1,175 பேருக்கு கொரோனா; 18 பேர் பலி

    சென்னையில் மட்டும் இன்று 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,767 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று கொரோனாவால் 18 உயிரிழந்தனர் இதன் மூலம், இதுவரை மொத்தம் 2092 பேர் உயிரிழந்துள்ளனர்.

    17:52 (IST)30 Jul 2020

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா; 97 பேர் பலி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,39978 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 97 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் என்ணிக்கை 3,838 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    16:56 (IST)30 Jul 2020

    ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

    தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை ஆன்லைன் வகுப்புக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகள் ஒளிபரப்பப்படும். முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

    16:53 (IST)30 Jul 2020

    கைப்பாவையாக இருப்பதைவிட உண்மையை பேசுகிறேன் - குஷ்பு

    நடிகை குஷ்பு ட்வீட்: புதிய கல்விக் கொள்கை 2020 குறித்த எனது நிலைப்பாடு எனது கட்சியிலிருந்து வேறுபடுகிறது. அதற்காக நான் ராகுல் காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், நான் தலையை ஆட்டும் ரோபோ அல்லது கைப்பாவையாக இருப்பதை விட உண்மையை பேசுகிறேன். எல்லாமே தலைவருக்கு உடன்படானதாக இருக்க முடியாது. ஆனால், ஒரு குடிமகனாக உங்கள் கருத்தை தைரியமாக குரல் கொடுப்பதற்கான துணிவு இருக்க வேண்டும்.

    எந்தவொரு மசோதாவும் அல்லது சட்ட வரைவிலும் உங்களுக்கு வேறுபட்ட கருத்துக்கள் இருக்கும். நான் ஜனநாயகத்தை கடுமையாக நம்பும் ஒருவர். கருத்து வேறுபாடு இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்.மதங்களால் நாம் பிரிக்கப்பட்டிருந்தாலும், எனது நாடு அனைத்து வகையான மக்களாலும், அனைத்து மத நம்பிக்கையாளர்களாலும், மத நம்பிக்கை அல்லாதவர்களாலும், ஒவ்வொரு கட்சியாலும் கட்டப்பட்டுள்ளது.

    16:52 (IST)30 Jul 2020

    நான் பாஜகவுக்கு செல்லவில்லை - குஷ்பு ட்வீட்

    புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்தது குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்து தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதில், “சங்கிகள் ரிலாக்ஸ். மகிழ்ச்சியடைய வேண்டாம். நான் பாஜகவுக்கு செல்லவில்லை. எனது கருத்து எனது கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கலாம், ஆனால், நான் எனது சொந்த சிந்தனை மனம் கொண்ட ஒரு தனிநபர். ஆமாம், # NEP2020 சில இடங்களில் குறைபாடுடையது. ஆனால், மாற்றத்தை ஒரு நேர்மறையுடன் பார்க்க முடியும் என்று நான் இன்னும் உணர்கிறேன். நேர்மறையான அம்சங்களைக் காண நான் விரும்புகிறேன், எதிர்மறையானவற்றில் வேலை செய்யுங்கள். பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை நாங்கள் வழங்க வேண்டும். எதிர்க்கட்சி என்பது நாட்டின் எதிர்காலத்திற்காக உழைப்பதாகும். நாங்கள் பணிபுரிந்த யுபிஏவில் அடல் ஜியின் வாழ்க்கையிலிருந்து நல்ல விஷயத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்.

    16:50 (IST)30 Jul 2020

    புதிய கல்விக் கொள்கைக்கு குஷ்பு வரவேற்பு; பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு

    புதிய கல்விக் கொள்கைக்கு நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்தார்.

    கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக, குஷ்பு கருத்து தெரிவித்ததால், பலரும் கட்சியில் இருந்து விமர்சனம் செய்தனர். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் நடிகை மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் இணைந்தார் விரைவில் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகைகுஷ்பு பாவம்... லூசா நீங்க என்று பதில் ட்விட் பதிவிட்டுள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கு வரவேற்பு தெரிவித்தது குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்து தொடர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    16:03 (IST)30 Jul 2020

    இறுதியாண்டு, செமஸ்டர் தேர்வு ரத்து திட்டமில்லை; உச்சநீதிமன்றத்தில் யுஜிஜி பிரமாண பத்திரம்

    பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யும் திட்டமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்தால் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

    15:18 (IST)30 Jul 2020

    கன்னியாகுமரியில் அண்ணா சிலைக்கு காவித்துணி அணிவிப்பு; துணை முதல்வர் ஒ.பி.எஸ் கண்டனம்

    துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: “கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் அமைந்துள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் திருவுருவச் சிலையை மர்மநபர்கள் அவமதிப்பு செய்தும் பீடத்தில் காவிக் கொடியும் கட்டிச் சென்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுவாழ்வில் ஈடுபட்ட மற்றும் சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களை அவமதிக்கும் வகையில், அவர்களின் சிலைகளை களங்கப்படுத்துவது, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையை சீர்குலைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கையை விரைவில் எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    15:00 (IST)30 Jul 2020

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை, நாப்கின் வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    பள்ளிகள் திறக்கப்படாத சூழலில், மாணவர்களுக்கு முட்டை, மாணவிகளுக்கு நாப்கின் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    14:56 (IST)30 Jul 2020

    உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு; எந்த முடிவும் எடுக்கவில்லை - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

    பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    14:38 (IST)30 Jul 2020

    புதிய கல்விக் கொள்கை: ஜி.டி.பி-யில் 6% கல்விக்கு ஒதுக்குவதற்கு கமல்ஹாசன் வரவேற்பு

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

    அதே போல், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.” என்று தெரிவித்துள்ளார்.

    14:02 (IST)30 Jul 2020

    பிரபல நடிகர் அனில் முரளி காலமானார்

    மலையாள நடிகர் அனில் முரளி காலமானார். அவருக்கு வயது 56.

    1993-ம் ஆண்டு வெளியான ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அனில் முரளி. நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் ஒரு சில தெலுங்கு மொழிப் படங்கள் என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

    கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவருக்கு சுமா என்ற மனைவியும், ஆதித்யா என்ற மகனும், அருந்ததி என்ற மகளும் உள்ளனர்.

    13:09 (IST)30 Jul 2020

    கல்வி நிறுவனங்களுக்கும் தடை நீட்டிப்பு

    தங்கும் வசதி கொண்ட ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு தடை நீட்டிப்பு

    அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு

    பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட தடை நீட்டிப்பு

    13:08 (IST)30 Jul 2020

    தரிசனத்திற்கு அனுமதி கிடையாது

    பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது

    தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்

    சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு

    13:08 (IST)30 Jul 2020

    தியேட்டர்களுக்கு தடை நீட்டிப்பு

    திரையரங்கு, மது கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் செயல்பட தடை நீட்டிப்பு

    விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை நீட்டிப்பு

    10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள சிறிய கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி

    13:02 (IST)30 Jul 2020

    இ-பாஸ் நடைமுறையும் தொடரும்

    ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்

    ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் - இ-பாஸ் நடைமுறையும் தொடரும்

    காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி

    13:02 (IST)30 Jul 2020

    காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை

    டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி

    உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி

    144 தடை உத்தரவு - 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்

    13:00 (IST)30 Jul 2020

    தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு

    தமிழகத்தில், ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும்,தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்

    சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி

    டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி

    12:33 (IST)30 Jul 2020

    விலைகொடுத்து வளர்ச்சியை பெறக்கூடாது

    இயற்கை வளங்களை விலைகொடுத்து வளர்ச்சியை பெறக்கூடாது

    நீர் ஆதாரங்களை பாதுகாக்க ஏன் தனி துறை அமைக்கக்கூடாது?

    4 வாரத்தில் பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    12:33 (IST)30 Jul 2020

    அண்ணா சிலைக்கு காவி கட்டி களங்கப்படுத்திய காலிகள் - வைகோ கண்டனம்

    கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில், பேரறிஞர் அண்ணா சிலைக்கு காவி துணி கட்டி களங்கப்படுத்தியுள்ளனர் சில அயோக்கியர்கள்.

    தமிழகத்தில் திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதித்து வந்த சாதி, மதவெறி பாசிசவாதிகள் தற்போது பேரறிஞர் அண்ணாவின் சிலையையும் அவமதித்துள்ளனர். இது தமிழ் அன்னையையே களங்கப்படுத்திய செயலாகும். இத்தகைய தீய போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இத்தகைய செயல்கள் மூலம் மக்கள் கவனத்தைத் திசை திருப்பி, நாசகாரத் திட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் சில அக்கறையுள்ள சக்திகள் முனைப்பாக உள்ளன.

    மேலும் மேலும் இதுபோன்ற காலித்தனமான செயலில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்து கூண்டில் ஏற்றி, தக்க தண்டனை வழங்க வேண்டும்.

    மறைந்த தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் ஈனச் செயல்களுக்கு தமிழக அரசு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

    - வைகோ

    12:29 (IST)30 Jul 2020

    6.75%ஆக குறைப்பு

    டெல்லியில் டீசல் மீதான வாட் வரி 30%ல் இருந்து 16.75%ஆக குறைப்பு

    - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

    12:14 (IST)30 Jul 2020

    மு.க.ஸ்டாலின் கண்டனம்

    கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியவர்களை கைது செய்ய வேண்டும்

    தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம்.

    தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள தனித்தன்மை இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்

    தரம் தாழ்ந்த செயல்களால் அவர்களின் எண்ணம் தரை மட்டத்திற்கும் கீழே போகிறது

    - அண்ணா சிலை அவமதிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

    12:04 (IST)30 Jul 2020

    "8ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை தேவையற்றவை; புதிய கல்விக் கொள்கை திருத்தி எழுதப்பட வேண்டும்; கோத்தாரி அறிக்கையின் ஆக்கப்பூர்வமான அம்சங்களை சேர்த்திட வேண்டும்".

    - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

    12:03 (IST)30 Jul 2020

    122 பேருக்கு கொரோனா

    புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு

    மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,293 ஆக உயர்வு

    புதுச்சேரியில் 114, காரைக்காலில் 8 பேர் என புதிதாக 122 பேருக்கு இன்று கொரோனா தொற்று

    சிகிச்சை பெறுவோர்- 1,292 குணமடைந்தோர் -1,953 உயிரிழப்பு- 48

    11:48 (IST)30 Jul 2020

    தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை

    34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை

    புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது

    - கனிமொழி எம்.பி.

    11:26 (IST)30 Jul 2020

    இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு

    மருத்துவர் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்ற நிலையில், முதல்வர் பழனிசாமி தற்போது உரையாற்றி வருகிறார்.

    அதில்,

    அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது. அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான். இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு. தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    என்று அவர் தெரிவித்துள்ளார்.

    11:24 (IST)30 Jul 2020

    மருத்துவர் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்ற நிலையில், முதல்வர் பழனிசாமி தற்போது உரையாற்றி வருகிறார்.

    அதில்,

    அனைவருக்கும் தமிழக அரசின் மூலம் இலவச முக கவசம் வழங்கப்படுகிறது

    அதிக பரிசோதனை கூடங்கள் உள்ள மாநிலம் தமிழகம் தான்

    இந்தியாவிலேயே 25,36,660 பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன

    மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது

    கொரோனா இறப்புவிகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குறைவு

    தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது

    மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    11:21 (IST)30 Jul 2020

    அடுத்த கட்ட நடவடிக்கை

    சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

    மருத்துவ நிபுணர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

    - முதல்வர் பழனிசாமி

    10:50 (IST)30 Jul 2020

    அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி

    கன்னியாகுமரி: குழித்துறை சந்திப்பில் அறிஞர் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டுள்ளது.

    அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டியது யார் என களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    10:34 (IST)30 Jul 2020

    முதல்வர் ஆலோசனை தொடக்கம்

    தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அளிக்கலாம் என்பது குறித்து மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் தனது ஆலோசனையை தொடங்கினார். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில், அதன் நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

    10:30 (IST)30 Jul 2020

    8,35,435 வழக்குகள்

    தமிழகத்தில் பொதுமுடக்க உத்தரவை மீறியதாக இதுவரை 8,35,435 வழக்குகள் பதிவாகின காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    10:18 (IST)30 Jul 2020

    நெல்லையில் 4,893

    நெல்லை மாவட்டத்தில் மேலும் 164 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 4,893ஆக உயர்ந்துள்ளது.

    10:17 (IST)30 Jul 2020

    டிஸ்சார்ஜ் - 10.20 லட்சமாக உயர்வு

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10.20 லட்சமாக உயர்வு.

    இந்தியாவில் ஒரே நாளில் 4,46,642 கொரோனா மாதிரிகள் பரிசோதனை

    - ஐசிஎம்ஆர்

    10:16 (IST)30 Jul 2020

    2 ஆயிரத்தை கடந்த கொரோனா

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2,053ஆக உயர்வு

    10:15 (IST)30 Jul 2020

    காரணமின்றி கைது செய்யக்கூடாது

    7 அல்லது அதற்கு குறைவான ஆண்டு சிறைத்தண்டனை உள்ள குற்றங்களில் காரணமின்றி கைது செய்யக்கூடாது

    அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை

    விசாரணை அதிகாரி குற்றத்தன்மையை ஆராய்ந்து கைது அவசியத்தை முதலில் எழுத்து மூலம் பதிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    10:14 (IST)30 Jul 2020

    பாதிப்பு எண்ணிக்கை 4,601 ஆக உயர்வு

    கன்னியாகுமரியில் மேலும் 167 பேருக்கு கொரோனா

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 167 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 4,601 ஆக உயர்வு

    கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு

    10:13 (IST)30 Jul 2020

    21 பேர் கொரோனாவுக்கு பலி

    சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை 21 பேர் கொரோனாவுக்கு பலி

    அரசு மருத்துவமனைகளில் 14 பேர், தனியார் மருத்துவமனைகளில் 7 பேர் உயிரிழப்பு

    10:12 (IST)30 Jul 2020

    பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,792

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்வு

    சிகிச்சை பெறுவோர் - 5,28,242 குணமடைந்தோர் - 10,20,582

    இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968

    10:12 (IST)30 Jul 2020

    199 பேருக்கு தொற்று

    வேலூரில் புதியதாக மேலும் 199 பேருக்கு தொற்று உறுதி

    * மொத்த பாதிப்பு 5,757 ஆக உயர்வு

    * இதுவரை மாவட்டத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்கள் - 4,683 பேர்

    * வேலூரில் தற்போது சிகிச்சை பெறுவோர் - 1023 பேர்

    10:10 (IST)30 Jul 2020

    குணம் அடைந்தோர் - 2470 பேர்

    தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 254 பேருக்கு கொரோனா தொற்று

    மொத்த பாதிப்பு 4722 ஆக அதிகரிப்பு

    குணம் அடைந்தோர் - 2470 பேர். சிகிச்சையில் இருப்போர் 1945 பேர்

    கொரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை - 83

    10:10 (IST)30 Jul 2020

    266 பேருக்கு கொரோனா

    மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா

    நேற்று வரை 10,618 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகரிப்பு

    நேற்று வரை 7995 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 2392 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    10:08 (IST)30 Jul 2020

    லிட்டர் ரூ.83.63

    சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.83.63-க்கும், டீசல் லிட்டர் ரூ.78.86-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள தகவலில் ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1,3,4 ஆம் தேதி வீடு தேடி சென்று ஊழியர்கள் டோக்கன் தரவேண்டும் நாள்தோறும் 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் பொருட்களை வழங்க ரேசன் ஊழியர்களுக்கு உத்தரவு. டோக்கனில் குறிப்பிடாத நேரத்தில் பொருள் வழங்கப்பட்டாது என தெரிவிக்க வேண்டும்.

    நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர் சார்பாக ஒருவர் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும்.

    நியாய விலை கடைகளுக்கு வரும் 7 ஆம் தேதி விடுமுறை அல்ல.ரேசன் கடைகளுக்கு 7ஆம் தேதிக்கு பதில் மாற்று நாளில் பின்னர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை தொகுப்பாக வழங்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

    Tamil Nadu Corona
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment