Tamil Nadu news highlights: பத்தாம் வகுப்பு தேர்வு புதிய கால அட்டவணை அறிவிப்பு

Tamil Nadu news today live updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கை பின் தொடருங்கள்.

Tamil Nadu news today live updates: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டெய்னர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சரக்குகளை கையாளும் CFS நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு வராததால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் தேவிபட்டனம் கண்டி போச்சம்மா கோவிலுக்கு படகு சவாரி இயக்கப்பட்டது. ஆற்றில் 61 பேரை ஏற்றிய படகு கச்சளூரு பகுதியில் வரும்போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. சிலர் நீந்தி கரை ஏறிய நிலையில் 11 பேர் உயிரிழந்தனர். மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக கோதாவரி ஆற்றில் தற்போது படகு சேவையை நிறுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அமித் ஷாவின் ‘ஒரே நாடு ஒரே மொழி’ கருத்துக்கு தமிழ் மக்களின் reaction :

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துக்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ள அரசியல் நாடகத்துக்கு எதிராக துப்பாக்கியிலிருந்து சீறிப்பாயும் தோட்டாவைப்போல சிறையில் இருந்து வருவீர்கள். உண்மையின் வெற்றிக்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம் என்று கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள் இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today live updates of weather, traffic, train services and airlines: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி விலை நிலவரம், பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இங்கே காணலாம்.

20:26 (IST)16 Sep 2019
பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல – ராகுல் டுவீட்

பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல  என்று காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளை குறிப்பிட்டு ராகுல் காந்தி டுவீட் செய்துள்ளார்.

🇮🇳Oriya 🇮🇳 Marathi
🇮🇳 Kannada 🇮🇳Hindi 🇮🇳Tamil
🇮🇳English 🇮🇳Gujarati
🇮🇳Bengali 🇮🇳Urdu 🇮🇳Punjabi 🇮🇳 Konkani 🇮🇳Malayalam
🇮🇳Telugu 🇮🇳Assamese
🇮🇳Bodo 🇮🇳Dogri 🇮🇳Maithili 🇮🇳Nepali 🇮🇳Sanskrit
🇮🇳Kashmiri 🇮🇳Sindhi
🇮🇳Santhali 🇮🇳Manipuri...

India’s many languages are not her weakness.
— Rahul Gandhi (@RahulGandhi) September 16, 2019

19:51 (IST)16 Sep 2019
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

செப்.30ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த ஹர்தர்ஷன் சிங் நாக்பால் என்பவர் தலைமை பதிவாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இயக்கத்தின் பெயர், முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

19:28 (IST)16 Sep 2019
இந்தி திணிப்பை எதிர்த்து 20ம் தேதி திமுக சார்பில் போராட்டம்

இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 20ம் தேதி போராட்டம் நடத்த திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

19:02 (IST)16 Sep 2019
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய தேர்வு அட்டவணை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 2020ம் ஆண்டு மார்ச் 17 ந்தேதி - ஏப்ரல் 9 ந்தேதி வரை பொதுத்தேர்வு என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், இன்று ( செப்டம்பர் 16ம் தேதி ) திருத்தப்பட்ட புது தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 13 ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18:21 (IST)16 Sep 2019
ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம்

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

5 மற்றும் 8ம்வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, ஒரே நாடு , ஒரே மொழி விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

17:55 (IST)16 Sep 2019
மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது – கமல்

எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்பதற்கு தயார். ஆனால் மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நடிகரும் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதால் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று கூறினார்.

15:38 (IST)16 Sep 2019
கட்சியே என்னுடையது தான்- புகழேந்தி

அமமுக கட்சியின் செய்தித் தொடர்பாளர் பட்டியலை இன்று தினகரன் வெளியிட்டார். அதில் பெங்களூரு புகழேந்தி பெயர் இடம்பெறவில்லை என்ற செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. செய்தியார்களிடம் பேசிய புகழேந்தி "அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; கட்சியே தனக்கு சொந்தமானது" என்று தெரிவித்தார்.

அமமுக  செய்தித்  தொடர்பாளர் பட்டியல் :

15:00 (IST)16 Sep 2019
ஃபாரூக் அப்துல்லா எஸ்.ஏ சட்டம் பாய்ந்தது.

ஃபாரூக் அப்துல்லா பி.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் குறைந்தது இரண்டு வருடமாவது அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படுவார். மேலும் அவரது வீடு துணை ஜெயிலாகாவும் அரசு அறிவித்துள்ளது. ஃபாரூக் விற்கு முன் ஷா ஃபேசல் இதற்கு முன் பி.எஸ்.ஏ சட்டத்தின் கீழ் வீட்டுக் காவல் வைக்கப்பட்டவர் என்பது குரிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் மதிமுக கட்சித் தலைவர் வைகோ ஃபாரூக் அப்துல்லா விற்காக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

14:43 (IST)16 Sep 2019
உலக ஓசோன் தினம்

உலக ஓசோன் தினம்  2019 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப் பட்டுவருகிறது.  "32 ஆண்டுகள் மற்றும் குணப்படுத்துதல்" என்ற தீமில் கொண்டாடப் பட்டு வருகிறது. அடுக்கு மண்டல ஓசோன்  லேயரில் ஓட்டையை சரி செய்வதற்காக உலக நாடுள் முழுவதும் கடந்த 32 ஆண்டுகள் போராடி வருகினறனர்.

14:35 (IST)16 Sep 2019
சென்னை மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையைப் பொறுத்த வரையில்  வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும்,  இரவில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பும் இருப்பதாக தெரிவித்தது.

14:28 (IST)16 Sep 2019
விரைவில் உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்பு ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு 'டெண்டர்' விடப்பட்டிருந்தது என்பதை நாம் அறிவோம், இந்நிலையில் , செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி-  உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்து விட்டது என்று கூறினார்.

13:39 (IST)16 Sep 2019
ஜல்லிக்கட்டு சிறிய போராட்டம், சிறிய வெற்றி; மொழிக்காக போராடத் துவங்கினால், பன்மடங்கு பெரிதாக இருக்கும் - கமல் ஹாசன்

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்தைத் தொடர்ந்து, மநீம தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “பல ராஜாக்கள் தங்கள் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானதுதான் இந்தியா. ஆனால், விட்டுக்கொடுக்க முடியாது என்று பல இந்தியர்கள் பல மாநிலங்கள் சொன்ன விஷயம் எங்கள் மொழியும் கலாச்சாரமும் என்பதுதான். 1950 இல் குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், சிறிய வெற்றி; எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால், அது அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும்

13:22 (IST)16 Sep 2019
ஜீவசமாதி அடைவதாக கூறிய சாமியார் மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம், பாசாங்கரையில், ஜீவசமாதி அடைவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதாக சாமியார் இருளப்பசாமி மகன் கண்ணாயிரம் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

13:14 (IST)16 Sep 2019
முதல்வர் பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மூலம் போடப்பட்ட ஒப்பந்தங்களை வெளியிட்ட தமிழக அரசு

முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் மூலம் போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த முழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது.

13:11 (IST)16 Sep 2019
பள்ளி காலாண்டு விடுமுறை நாட்களில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்த மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவு

மாநில திட்ட இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளி காலாண்டு விடுமுறை நாட்களில் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 2 வரை காந்திஜெயந்தி விழாவை கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதை, மாநில திட்ட இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

13:07 (IST)16 Sep 2019
புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது மக்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் - மநீம தலைவர் கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். புதிய திட்டங்களோ சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக.” என்று கூறியுள்ளார்.

12:43 (IST)16 Sep 2019
மின்சார வாகனத்திற்கு 100 சதவீதம் வரிவிலக்கு - தமிழக அரசு

முதலமைச்சர் பழனிசாமி தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

12:27 (IST)16 Sep 2019
தேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிடுவேன் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிட அனுமதி கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குலாம் நபி ஆசாத்த்தை ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களுக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “குலாம்நபி ஆசாத் உறுதியளித்துள்ளபடி, அவர் அங்கே எந்த பொதுக்கூட்டத்திலும் பேசமாட்டார். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு நேரில் சென்று பார்வையிடுவேன்” என்று கூறினார்.

12:22 (IST)16 Sep 2019
தேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிடுவேன் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிட அனுமதி கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குலாம் நபி ஆசாத்த்தை ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களுக்குச் செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “தேவை ஏற்பட்டால் நான் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பார்வையிடுவேன்” என்று கூறினார்.

12:03 (IST)16 Sep 2019
ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலையை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் வழக்கமாக செயல்பட நடவடிக்கை தேவை என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும், காஷ்மீர் தொடர்பான மனுக்கள் மீது மீண்டும் வரும் 30ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11:52 (IST)16 Sep 2019
நன்றி மறந்தவன் தமிழன் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “உலகளவில் தமிழின் பெருமையை கொண்டாடும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ஆனால், பிரதமரை கொண்டாட தமிழர்கள் மறுக்கின்றனர். நன்றி மறந்தவன் தமிழன் என்று கூறியுள்ளார்.

11:47 (IST)16 Sep 2019
அயோத்தி வழக்கு விசாரணையை நேரலை செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல்

அயோத்தி வழக்கை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மர்வு சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், நேரலை செய்வதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு உள்ளன என அறிக்கை சமர்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

11:27 (IST)16 Sep 2019
அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம்; உயர் நீதிமன்றத்தில் திமுக பிரமானப்பத்திரம் தாக்கல்

அதிமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து விபத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பத்தைத் தொடர்ந்து, அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இடையூறு ஏற்படும் வகையில் பேனர் வைக்க வேண்டாம் என கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

11:00 (IST)16 Sep 2019
ஃபரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார்? வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஃபரூக் அப்துல்லா எங்கு இருக்கிறார் என்பது பற்றி வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டது.

10:42 (IST)16 Sep 2019
ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளில் அவரது சிலைக்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

ராமசாமி படையாட்சியார் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சிவி. சண்முகம், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

10:36 (IST)16 Sep 2019
அரசியல் நாடகத்திற்கு எதிராக போராடி வெளியே வருவீர்கள் - ப.சிதம்பரத்திற்கு கார்த்தி சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து கடிதம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எழுதியுள்ள பிறந்த நாள் வாழ்த்து கடித்தத்தில், “அரசியல் நாடகத்திற்கு எதிராக போராடி வெளிவருவீர்கள்.உண்மையின் வெற்றிக்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10:29 (IST)16 Sep 2019
இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்.பி-யுமான திருமாவளவன், சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார். ஆளுநரிடம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் பதவிகளில் பிரதிநிதித்துவம் தர கோரிக்கை வைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

10:10 (IST)16 Sep 2019
டி.என்.பி.எல் கிரிக்கெட் வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார்

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து மெசேஜ் வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால், வீரர்களின் புகார் குறித்து பிசிசிஐ-ன் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை.

09:57 (IST)16 Sep 2019
குடியரசுத் தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை - மகனிடம் போலீஸார் விசாரணை

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை மீது ட்ரோன் பறக்கவிட்ட அமெரிக்காவை சேர்ந்த தந்தை - மகனை பிடித்து போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.

09:54 (IST)16 Sep 2019
அடுத்த ஐபிஎல் தொடரிலும் சி.எஸ்.கே கேப்டன் தோனிதான் - ஸ்ரீனிவாசன்

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் எஸ்.என்.ஆர். கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மைதானத்தை திறந்து வைத்து பேசிய சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன்: அடுத்த ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனியே இருப்பார் என்று தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அண்னா பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் இல்லாவிட்டால் மக்களே பேனர் கலாச்சாரத்தை ஒழிப்பார்கள் என்று கூறினார்.

Web Title:

Tamil nadu news today live updates chennai weather crime politics anti hindi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close