Advertisment

Tamil Nadu news updates : அரசு டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Petrol Diesel Rate in Chennai : இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.74க்கு விற்பனையாகிறது. டீசல் விலை ரூ. 70.81 ஆகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news  updates :  அரசு டாக்டர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் டிஸ்மிஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

Tamil Nadu news today live updates : முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் நினைவுக் கூறப்படுகிறது. அரசியல் தலைவர்கள் முத்துராமலிங்கதேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மதுரை கோரிபாளையத்தில் உள்ள தேவர் சோலைக்கு தமிழக முதல்வரும், துணை முதல்வரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடந்து வந்த மருத்துவர்கள் போராட்டம், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுபோன்ற முக்கிய செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளோக்கை பின் தொடருங்கள்.

Live Blog

Tamil Nadu news today live updates : Chennai weather, traffic, petrol diesel price, இன்று தமிழகம் மற்றும் உலக அளவில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்



























Highlights

    07:27 (IST)31 Oct 2019

    அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

    அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களில் ஈடுபட்டு  வருகின்றனர். இன்று அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் வேலையில் இருந்து நீக்கி அறிவிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். 

    22:32 (IST)30 Oct 2019

    டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக நடைபெறும். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

    20:53 (IST)30 Oct 2019

    கனமழை – நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில்  ஊட்டி, , குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

    20:07 (IST)30 Oct 2019

    மருத்துவர்கள் பணிக்கு வராவிட்டால் பணிப்பலன்கள் ரத்து – அமைச்சர் விஜயபாஸ்கர்

    மருத்துவர்கள் நாளை  பணிக்கு வராவிட்டால் பணிப்பலன்கள் ரத்து செய்யப்படும்  என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக்குபின் அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மருத்துவர்கள் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்கள் காலி என அறிவிக்கப்பட்டு, அந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். போராட்டத்தை கைவிடாவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், தேவைப்பட்டால் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். உடனடியாக மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பது என் வேண்டுகோள், மருத்துவமனை வாயிலை அடைத்து கொண்டு மருத்துவர்கள் போராட்டம் செய்வது வேதனையளிப்பதாக அவர் கூறினார்.

    19:25 (IST)30 Oct 2019

    ஊட்டி மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து

    கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம், உதகை - குன்னூர் மலை ரயில் சேவை நாளை ( அக்டோபர் 31ம் தேதி ) முதல் நவம்பர் 2ம் தேதி வரை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    19:21 (IST)30 Oct 2019

    5, 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வழிமுறைகள் வெளியீடு

    தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்தும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பிய நிலையில், இந்த தேர்வுகளுக்கு மூன்று ஆண்டுகள் விலக்குப் பெற்றிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை நடத்தும் வழிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 5, 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் படிக்கும் பள்ளியிலிருந்து முறையே 1 மற்றும் 3 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்வுகளுக்காக முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது

    17:35 (IST)30 Oct 2019

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி!

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அமரேஸ்வர் பிரதாப் சஹியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட ஏ.பி.சஹி  வரும் நவம்பர்.13 ஆம் தேதிக்குள் பதவியேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    17:23 (IST)30 Oct 2019

    நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு!

    நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவருடன் அவரது கணவர் சன்னாசியும் கைது செய்யப்பட்டார்.  ஏற்கனவே இவர்கள் மீது நெல்லை போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் சிபிசிஐடி போலீசார்  இருவரையும் கைது செய்துள்ளனர். 

    16:59 (IST)30 Oct 2019

    சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல்!

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரத்திற்கு நவ. 13 வரை நீதிமன்றக் காவல் என உத்தரவிட்டுள்ளது.  சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையினர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று  ஆஜர்படுத்தப்பட்டார். 

    16:28 (IST)30 Oct 2019

    பொதுப்பணித்துறை அதிரடி!

    தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்  என்று மாவட்ட செயற்பொறியாளர்களுக்கு, பொதுப்பணித்துறை அதிரடி  உத்தரவிட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    16:26 (IST)30 Oct 2019

    சென்னை வானிலை மையம்!

    காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    15:41 (IST)30 Oct 2019

    மருத்துவர்கள் வேலைநிறுத்த வழக்கு!

    மருத்துவர் வேலைநிறுத்தம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கே. கே ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரபை பிற்பித்துள்ளது. 

    15:25 (IST)30 Oct 2019

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு!

    ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு ப.சிதம்பரம் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். 

    15:23 (IST)30 Oct 2019

    ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு!

    ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா புகாரில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று  சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் மனு அளித்துள்ளது.  அபிராமபுரம் காவல் நிலைய வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் மேல்முறையீடு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத் தொடர்பான வழக்கு விசாரணை வரும் நவம்பர் 7 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

    14:42 (IST)30 Oct 2019

    நீட் வழக்கில் ஜாமீன்!

    நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களின் தந்தை இருவருக்கும் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர்கள் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் அல்ல  என்று நீதிபதி சுவாமிநாதன் கருத்து  தெரிவித்துள்ளார்.

    14:10 (IST)30 Oct 2019

    சுஜித் மரணத்தில் சந்தேகமா?

    ஆழ்துளை கிணற்றில் விழுந்து சுஜித் உயிரிழந்தது குறித்து வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இந்த புகாரையடுத்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.  மேலும் இதுக் குறித்த விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

    14:06 (IST)30 Oct 2019

    முகிலன் எங்கே?

    காணாமல் போன நாட்களில் முகிலன் எங்கிருந்தார்?  என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.  அது தொடர்பாக விளக்கமளித்தால் ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். 

    13:29 (IST)30 Oct 2019

    போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை - சுகாதாரத்துறை அறிவிப்பு

    சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மருத்தவர்கள் சங்கத்தோடு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மருத்தவர்களின் வேலை நிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டது என்ற தகவல் வெளியானது. ஆனால் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். தற்போது, போராட்டத்தில் ஈடுபடும் படும் மருத்துவர்கள் மீது பிரேக்கிங் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.        

    13:17 (IST)30 Oct 2019

    மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் :

    லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், குமரிக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்து வரும் நாட்களில் மேலும் வலுப்பெற விருப்பதால்  இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.    

    12:41 (IST)30 Oct 2019

    ரஷ்யா அதிபரின் ஜல்லிக்கட்டு பயணம் உண்மையில்லை - அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

    வரும் 2020ம் ஆண்டு மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவில் இந்தியா பிரதமரும், ரஷ்யா அதிபரும் கலந்துகொள்ளவிருப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வந்தது. இந்த செய்தி முற்றிலும் தவறானது , இது அதிகாரப்பூர்வ  தகவல் இல்லை என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். 

    மேலும், தமிழக பாஜக ஊடக தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும்,  ரஷ்யா அதிபரின் தமிழ்நாட்டு பயணம் முற்றிலும் தவறனாது  என்றும் தெரிவித்துள்ளார்.         

    12:29 (IST)30 Oct 2019

    நீட் ஆள்மாறாட்டம் விவகாரம் - மேலும் 2 மானவர்களுக்கு ஜாமீன்

    நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான உதித் சூர்யாவுக்கு சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் அளித்தது. உதித் சூரியாவின் தந்தை தான் உண்மையான குற்றவாளி என்றும் குறிப்பிட்டிருந்தது . இந்நிலையில், நீட் ஆள்மாறாட்ட சிக்கிய மேலும் இரண்டு மாணவர்களுக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமீன் வழங்கியிருக்கிறது. அம்மாணவர்களின் தந்தைக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்திருக்கிறது.   

    11:39 (IST)30 Oct 2019

    சுஜீத் தொடர்பாக வாட்ஸ்அப் செய்திகளை நம்ப வேண்டாம் : ராதாகிருஷ்ணன்

    முறையாக கடைபிடிக்கும் வழிமுறையின் படியே சுஜீத்தின் உடல் மீட்கப் பட்டதாகவும், வாட்ஸ்அப் ல் வரும்  அதிகாரப்பூர்வ மற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.    மனித தன்மையோடு , மனித முயற்சியால் என்ன செய்ய முடியுமோ? அந்த முயற்சியெல்லாம் சுஜீத்தை மீட்கும் பணியில்  மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார்.   

    சசுஜீத் விவகாரத்தில் இவ்வளவு கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை சந்திப்பது மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.  மேலும், கும்பகோண தீ விபத்தில் பலியான குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டது சமூகத்தில் கடும் தாக்கத்தை எற்படுத்தியது.  அதுபோன்ற பின் விளைவுகளைத் தவிர்பதற்காகவே  சுஜீத்தின் புகைப்படங்கள் வெளியிடவில்லை என்று கூறினார்.     

    10:50 (IST)30 Oct 2019

    அமைப்பு செயலாளரை நியமித்தார் தினகரன்

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக கே. சிவசண்முகத்தை அக்கட்சியின் போது செயலாளர் தினகரன் நியமித்தார். மேலும், கழக உடன்பிறப்புகள் சிவ சண்முகத்திற்க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டுவது அவசியமானது, இதனால், மத்திய அரசுஇது குறித்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் கூறிள்ளார்.      

    10:41 (IST)30 Oct 2019

    சென்னைக்கு வரும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் :

    செங்கல்பட்டு மார்க்கமாக சென்னைக்கு  வரும் அனைத்து புறநகர் மின்சார  ரயில்களும் ஆங்காங்கே   ஒரு மணி நேரத்திற்கு மேலாக  நிறுத்தப்பட்டன. காட்டாங்குளத்தூர் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட ரயில்வே சிக்னல் கோளாறு காரணமாக இந்த தாமதம்  ஏற்பட்டது.  

    10:35 (IST)30 Oct 2019

    கொடைக்கானல் அருவியில் குளிக்கத் தடை

    கொடைக்கானலில் கனமழை பெய்து வருவதால் இன்று அங்கு செயல்படும் அனைத்து பள்ளி , கல்லோரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானில் அருவியில் தண்ணீரின் வேகமும், அளவும் அதிகரித்திருப்பதால் அங்கு குளிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது        

    10:29 (IST)30 Oct 2019

    தேவர் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திமுக தலைவர் மதுரை கோரிபாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி தினம் தமிழகம் குறிப்பாக  தென்மாவட்டங்க்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.     

    10:16 (IST)30 Oct 2019

    குரு பெயர்ச்சி ஆதிமுக விற்கு சாதகமாக அமையும் - அமைச்சார்

    பால் கொள்முதல் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும் வண்ணம் ஆண்டுதோறும் பால்விலை ஏற்றப்படும்  என்று  பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் .  குருபெயர்ச்சி ஆதிமுகவுக்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்கும், இடைத் தேர்தல் வெற்றி சட்டமன்றத் தேர்தலிலும் வெளிப்படும் என்று தெரிவித்தார்.  ஈரோடு மாவட்டம் பவானியில், குருப்பெயற்சிகாக  சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், " முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மறைந்த முதல்வர் ஜெயலலித்தாவின் தம்பியாகத் தான் மக்கள் பார்க்கின்றனர்" என்றும் கூறினார்.  

    10:05 (IST)30 Oct 2019

    கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை :

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய  மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    10:02 (IST)30 Oct 2019

    மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு :

    சம்பள உயர்வு, மருத்தவர்களின் எண்ணிகையை அதிகரிப்பது போன்ற கோரிக்கைகளுக்காக தமிழக  மருத்துவர்கள் சங்கம் சார்பில் கடந்த 25ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில், சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று மருத்தவர்கள் சங்கத்தோடு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து  மருத்தவர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.         

    Tamil Nadu news today live updates : சுஜித்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், அதிமுக சார்பில் இருந்து ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18-ஆம் தேதி பதவியேற்க உள்ளார். 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார்.

     

    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment