Tamil Nadu News Today Updates: ரஜினி இனிமேல் தான் அரசியலுக்கு வரப்போகிறார் – வெங்கையா நாயுடு பேச்சு

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates: தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள், அரசியல் நிலவரங்கள், பொதுப் பிரச்னைகள், பொழுதுபோக்கு விஷயங்கள் என அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

Flash News in Tamilnadu Today  Updates : நாடாளுமன்ற தேர்தலில், அந்தமானுடன் சேர்த்து, 40 தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சித்தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, ந்தமான் தி.மு.க., அலுவலகத்தில், கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அந்தமான் மாநில செயலர், கே.ஜி.தாஸ், ‘கருணாநிதியை, தமிழின தலைவராக குறிப்பிடுகிறீர்கள்; அது தவறு. அவர் இந்தியாவின் தலைவர்’ என்றார். அது, தொண்டர்களுக்கு கிடைத்த பெருமை. அந்தமான் மாநில செயலர் குழந்தை, என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். ‘இனிமேல், தி.மு.க., – காங்கிரஸ்கூட்டணி, லோக்சபா தேர்தலில், தேனி தவிர்த்து, தமிழகம், புதுச்சேரியில், 39 இடங்களில் வென்றது என சொல்லாதீர்கள்; அந்தமானையும் சேர்த்து, 40 இடங்களில், நமக்கு வெற்றி என, சொல்லுங்கள்’ என்றார். அது, தி.மு.க.,விற்கும், அங்கு வாழும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கவிஞர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர், சிறந்த திரைக்கதையாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது திறமையை நிரூபித்த கைய்பி ஆஸ்மியின் 101வது பிறந்தநாளையொட்டி,…

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக காங்., தலைவர் சோனியா அழைப்பு விடுத்திருந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முக்கிய பெரிய கட்சிகள் பங்கேற்கவில்லை. ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோர் புறக்கணித்தனர். கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இந்தக் கூட்டத்தை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது, சோனியா தலமையிலான காங்.,குக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, rainfall, Breaking : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

20:23 (IST)14 Jan 2020
ரஜினி இனிமேல் தான் அரசியலுக்கு வரப்போகிறார் - வெங்கையா நாயுடு பேச்சு

துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு நிறைவுரை ஆற்றிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு: “முப்பது கோடி முகமுடையாள் – உயிர்மொய்ம்புறமொன்றுடையாள் – இவள்செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்சிந்தனை ஒன்றுடையாள்”என்ற பாடலை மேற்கோள் காட்டினார். பின்னர், ரஜினி இனிமேல் தான் அரசியலுக்கு வரப்போகிறார் என்று கூறினார்.

19:52 (IST)14 Jan 2020
முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் - ரஜினி பேச்சு

துக்ளக் இதழ் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினி பேச்சு: முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும். பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது என்று கூறினார்.

19:37 (IST)14 Jan 2020
துக்ளக் இதழ் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி உரை 2/2

பிரதமர் மோடி: “சோ எங்கள் எண்ணங்களில் எங்களுடன் இருக்கிறார். கடந்த ஐந்து தசாப்தங்களில் இந்த பத்திரிகை அடைந்த முன்னேற்றத்தைப் பற்றி அவர் மிகவும் பெருமைப்படுவார். சோவுக்கு ஒரு சிறப்பு பாணி பத்திரிகை உள்ளது. அவரைப் பொறுத்தவரை, மூன்று விஷயங்கள் அடிப்படை. ஒன்று உண்மைகள். உண்மைகள் மிகவும் முக்கியமானது. அவை செய்திக்கு தார்மீக வலிமையைக் கொடுக்கின்றன. இரண்டாவதாக அறிவார்ந்த வாதங்கள் இருந்தன. ஒரு கருத்தை வகுக்க விரும்பும் எந்தவொரு வாசகனும் எப்போதும் புத்திசாலித்தனமான வாதங்களைப் பாராட்டுவான். அவை தர்க்கரீதியான காரணத்தை அடிப்படையாகக் கொண்டவை. மூன்றாவது தனித்துவமானது சோ. அவர் நையாண்டியில் விரிவான கவனம் செலுத்தினார். துக்ளக்கின் முதல் பக்கம் ஒரு நையாண்டி கார்ட்டூனைக் கொண்டு சென்றது. உங்கள் கருத்தைச் சொல்லவும் மக்களைப் பயிற்றுவிக்கவும் நையாண்டி சிறந்த வழியாகும். சோ நையாண்டியின் மாஸ்டர். பெரும்பாலான அரசியல்வாதிகள் இது வார இதழ் என்றும் தினசரி இல்லை என்பதற்கு நன்றி தெரிவித்தனர்” என்று மோடி கூறினார்.

19:36 (IST)14 Jan 2020
துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி உரை 2/1

பிரதமர் மோடி தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார். “இன்று துக்ளக் பத்திரிகையின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்கிறது. உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகம் பொங்கலைக் கொண்டாடும்போது இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று கூறினார். பிரதமர் மோடி, இன்று 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள துக்ளக் பத்திரிகைக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு சோ இன்று இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

19:27 (IST)14 Jan 2020
துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடியின் பதிவுசெய்யபட்ட ஆடியோ உரை

துக்ளக் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள முடியாததால், நிகழ்ச்சியில் அவருடைய பதிவுசெய்யபட்ட ஆடியோ உரை நிகழ்த்தப்பட்டது. 

19:08 (IST)14 Jan 2020
மனதிற்கு நெருக்கமான தமிழகத்தில் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி - வெங்கையா நாயுடு

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு: நிலத்தை அன்னையாக மதித்து போற்றும் வழி வந்த நாம் இயற்கையை வணங்குவோம், வளங்களைக் காப்போம். என் மனதிற்கு நெருக்கமான தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

19:00 (IST)14 Jan 2020
ஜம்மு-காஷ்மீர்: சிஆர்பிஎஃப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் சிஆர்பிஎஃப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 2 பேர் பலியானார்கள். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் முகமது தஸ்லின், பி.என்.மூர்த்தி உயிரிழந்த நிலையில் சஞ்சய் என்ற வீரர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

18:56 (IST)14 Jan 2020
ஜம்மு-காஷ்மீர்: சிஆர்பிஎஃப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர், உதம்பூரில் சிஆர்பிஎஃப் முகாமில் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 2 பேர் பலியானார்கள். இதில் சிஆர்பிஎஃப் வீரர்கள் முகமது தஸ்லின், பி.என்.மூர்த்தி உயிரிழந்த நிலையில் சஞ்சய் என்ற வீரர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி.

18:01 (IST)14 Jan 2020
துக்ளக் இதழ் 50-ம் ஆண்டு நிறைவு விழா; துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ரஜினி பங்கேற்பு

மறைந்த பத்திரிகையாளர் சோ ஆசிரியராக இருந்து தொடங்கப்பட்ட துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கின்றனர்.

17:35 (IST)14 Jan 2020
தமிழக ஆளுநர் மாளிகையில் பொங்கல் கொண்டாட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் பொங்கல் வைத்து கொண்டாட்டினர். இந்த விழாவில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன்,பென்ஜமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

17:25 (IST)14 Jan 2020
முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஜனவரி 20ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஜனவரி 20ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது என்றும் இந்த கூட்டத்தில், தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்.

16:45 (IST)14 Jan 2020
என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆருக்கு ஆதரவாக அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியது - முக ஸ்டாலின்

தமிழகத்தில் என்.பி.ஆர் தயாரிக்க அதிமுக அரசும், முதல்வரும் ஆதரவாக இருப்பதும், என்.ஆர்.சி தயாரிக்க வழி வகுப்பதும் கண்டனத்துக்குரியது என ட்வீட் செய்துள்ளார் முக ஸ்டாலின். 

15:42 (IST)14 Jan 2020
திருமணமான பெண் இறந்தால் கணவருக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே வாரிசுரிமை

இந்து வாரிசுரிமை சட்டத்தின் படி ஒரு பெண் இறந்தால் அவருடைய சொத்துகளுக்கு கணவரும் குழந்தைகளும் மட்டுமே வாரிசுகள். அப்பெண்ணின் தாயார் சட்டப்படி அப்பெண்ணின் சொத்துகளை உரிமை கோர இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு. மணமான ஆண் இறந்தால் மட்டுமே தாயாருக்கு வாரிசுரிமை உண்டு என விளக்கம்.

15:37 (IST)14 Jan 2020
மதம் கடந்த அடையாளம் - வைரமுத்து வாழ்த்து

மதம் கடந்த ஆதி அடையாளமான தமிழர் திருநாளை கூடிக் கொண்டாடுங்கள் என்று கவிஞர் வைரமுத்து பொங்கல் தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

15:34 (IST)14 Jan 2020
உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகள் இல்லை - முதல்வர்

உள்ளாட்சி தேர்தல்களில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

14:44 (IST)14 Jan 2020
நாடாளுமன்ற வளாகத்தில் இனி சைவ உணவுகள் மட்டுமே

நாடாளுமன்ற வளாகத்தில் இயங்கி வரும் உணவு விடுதி இனி சைவ உணவுகளை மட்டுமே சமைக்கும் என்றும் முழுமையாக சைவ உணவமாக மாற இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேச்சு!

14:24 (IST)14 Jan 2020
நிர்பயா வழக்குல் தூக்கு தண்டனை மறுசீராய்வு மனுக்கள் மீண்டும் தள்ளுபடி

அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சிறுவன் விடுதலை செய்யப்பட்டான். வினய் சர்மா, முகேஷ் ,அக்சய் குமார் சிங் மற்றும் பவன் குப்தா என நான்கு பேருக்கும் 22ம் தேதி தூக்கு உறுதியாகிறது.

13:36 (IST)14 Jan 2020
காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொலை - குற்றவாளிகள் கைது

காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

13:25 (IST)14 Jan 2020
திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள்

திமுகவும் காங்கிரசும் இணைந்த கரங்கள் என்று  தமிழக காங்கிரஸ் கட்சி  தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி உடனான சந்திப்பிற்கு பிறகு டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி கூறியதாவது, இணை்ந்த கரங்கள் பிரிய வாய்ப்பில்லை. திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணியில் எவ்வித சலசலப்பும் இல்லை என்று கூறினார்.

12:53 (IST)14 Jan 2020
தமிழ் வளர்ச்சி விருதுகள் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு, ஆண்டுதோறும் வழங்கி வரும் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 

தமிழ்த்தாய் விருது - சிகாகோ தமிழ்ச்சங்கம்

கபிலர் விருது -  புலவர் வெற்றி அழகன்

உ.வே.சா. விருது - வெ.மகாதேவன்

கம்பர் விருது - முனைவர் சரஸ்வதி ராமநாதன்

சொல்லின் செல்வர் விருது - முனைவர் கவிதாசன்

மறைமலை அடிகளார் விருது - முத்துக்குமாரசாமி

முதல்வரின் கணினித்தமிழ் விருது -நாகராஜன்

அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து

மொழி பெயர்ப்பாளர் விருது - மாலன் உள்ளிட்டோருக்கு அறிவி்க்கப்பட்டுள்ளன.

12:18 (IST)14 Jan 2020
பொங்கல் பண்டிகை - ஸ்டாலின் வாழ்த்து

தமிழக மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, சாதி மத பேதமற்று தமிழினம் என்ற உன்னத உணர்வை பெறும் வகையில் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தளைக்க சமத்துவ பொங்கலை சமைப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

12:02 (IST)14 Jan 2020
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு விசாரணை நிறைவு

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 முறைகேடு விசாரணை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் 15 மணிநேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. 3 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11:26 (IST)14 Jan 2020
சோனியா - அழகிரி திடீர் சந்திப்பு

தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் அழைப்பின் பேரில் டில்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, அங்கு சோனியாவை சந்தித்துப் பேசினார்.  கூட்டணி உறவில் விரிசல் தொடர்பாக இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:52 (IST)14 Jan 2020
அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியா விஜயம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிப்ரவரி மாதத்தில் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா வருமாறு, பிரதமர் மோடி அழைப்பை ஏற்று இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10:35 (IST)14 Jan 2020
சென்னையில் புகை மூட்டம் – விமான சேவை தாமதம்

புகை மூட்டம், பனி காரணமாக சென்னையில் இருந்து மைசூரு செல்லும் ட்ரூ ஜெட், ஏர் இந்தியா விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளன.

10:06 (IST)14 Jan 2020
நிர்பயா வழக்கு - சீராய்வு மனு இன்று விசாரணை

நிர்பயா வழக்கில் மரண தண்டனைக் குற்றவாளிகள் இருவரின் சீராய்வு மனு இன்று விசாரிக்கப்பட உள்ளது. டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு நிகழ்ந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அக்‌ஷய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ஐந்து பேருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்நிலையில், குற்றவாளிகள் வினய் சர்மா மற்றும் முகேஷ் ஆகிய இருவரும், சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு, இன்று பிற்பகல் 1.45 மணிக்கு விசாரிக்கும் என்று, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

09:31 (IST)14 Jan 2020
மதுரை பஸ் ஸ்டாண்டுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை தொடர்ந்து மதுரையின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக, மக்கள் அதிகளவில் பஸ் ஸ்டாண்டுகளில் குவிந்துள்ளதால், அங்கு பெரும்பரபரப்பு நிலவி வருகிறது.

09:28 (IST)14 Jan 2020
பொங்கல் திருநாள் – முதல்வர் பழனிசாமி வாழ்த்து

தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி, மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, தமிழக மக்கள் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

09:17 (IST)14 Jan 2020
டில்லி சட்டசபை தேர்தல் : வேட்புமனு தாக்கல் துவக்கம்

டில்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. 21ம் தேதி கடைசி நாள் ஆகும்.

08:50 (IST)14 Jan 2020
8-வது அதிசயமாக படேல் சிலை

சீனாவின் தலைநகர் பீஜிங்கை தலைமையகமாக கொண்டுள்ள எஸ்.சி. ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, தனது உலக அதிசய பட்டியலில் படேல் சிலையை 8-வது அதிசயமாக இணைந்துள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, 182 மீ உயரம் கொண்ட படேல் சிலை உலகின் மிகவும் உயரமான சிலை என்பதுடன்,மிக சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. இச்சிலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 8-வது அதிசய சின்னமாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு டுவிட்டரில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

 

08:39 (IST)14 Jan 2020
பெட்ரோல் விலை சற்று குறைவு

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து11காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.65 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் ரூ.72.98 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

08:37 (IST)14 Jan 2020
சென்னையின் பல பகுதிகளில் கடும் புகைமூட்டம்

பொங்கல் பண்டிகையின் முதல்நாள் கொண்டாட்டமான போகி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையின் பலபகுதிகளில் மக்கள், அதிகாலை நேரத்திலேயே டயர் உள்ளிட்ட பழைய பொருட்களை எரிக்கத்துவங்கிவிட்டதால், பல பகுதிகளில் கடும் புகை மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமா்க, வாகனஓட்டிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

Tamil Nadu News in Tamil, Latest News in Tamilnadu Updates : சபரிமலை உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில், பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவை அறிவிக்கும்படி, நான்கு மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுத்த மாநிலங்களில், முதன்மையான மாநிலமாக தமிழகம் தேர்வாகி உள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இருந்து, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றார்.

Web Title:

Tamil nadu news today live updates tn politics pongal celebration boghi sabarmala

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close