சென்னை அருகே வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் திருட வந்ததாக நினைத்து, அவரை கற்களால் தாக்கிய பொதுமக்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
சமீப காலமாக வடமாநிலத்தவர் குறித்த சர்ச்சை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்நிலையில், சென்னை புறநகர் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த நபரை கற்களால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கட்டுமான பணிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், சென்னை தாழம்பூர் நேரு தெருவில் உள்ள ஒரு காம்பவுண்டுக்குள் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் குதித்துள்ளார்.
இதைப்பார்த்த நாய் சத்தமாக குறைக்கவும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். உள்ளாடையுடன் இருந்த அந்த நபரை, அக்கம்பக்கத்தினர் திருட வந்தவர் என்று நினைத்து, பிடிக்க முயற்சித்தனர்.
மேலும், அந்த வடமாநில நபரை அங்கிருந்த இளைஞர்கள் கட்டையால் தாக்கினர். இதனால் பலத்த காயம் ஏற்பட்டு, மூக்கு வாய் ஆகிய இடங்களில் ரத்த போக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.
பிறகு, அங்கிருந்த மக்கள் தாழம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அப்போது அங்கு வந்த போலீசார், காயங்களுடன் இருந்த நபரை மீது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில், மேற்குவங்கத்தை சேர்ந்த அந்த இளைஞர், தாழம்பூர் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தது உறுதியானது.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆறு நபர்களை காவல் துறை திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வடமாநிலத்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், தாக்குதலில் ஈடுபட்ட ஆறு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.