scorecardresearch

தமிழகத்தில் புதிய 24 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் வருகை: மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு

இந்த காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மூலம், எந்த நேரத்திலும் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் புதிய 24 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் வருகை: மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு

தமிழகத்தில் மேலும் 24 புதிய காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 34 இடங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் மேலும் 24 இடங்களில் இது போன்ற புதிய நிலையங்களை அமைக்க மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் தருமபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, கும்பகோணம், உள்ளிட்ட 24 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மூலம், எந்த நேரத்திலும் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu receives 24 new air quality monitor stations

Best of Express