கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்ல முயற்சிக்கும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
சென்னையில் இருந்து டிசம்பர் 23ஆம் தேதி முதல் (வெள்ளிக்கிழமை) 300 அரசுப் பேருந்துகளும், டிசம்பர் 24ஆம் தேதி (சனிக்கிழமை) 300 அரசுப்பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக்கு கழகம் முடிவெடுத்துள்ளதால் பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைக்கிறது.
தீபாவளி பண்டிகையின் போது, ஆம்னி பேருந்துகளில் கட்டணம் அதிகம் வைத்து போக்குவரத்தில் ஈடுபட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவை போக்குவரத்து துறையால் ஆய்வு செய்யப்பட்டு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரும் முறைகேடு செய்யாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil