ஹாய் பிரெண்ட்ஸ், கொரோனா வேகமாக பரவிகிட்டு இருக்கு, பாதுகாப்பா இருந்துகோங்க பிரெண்ட்ஸ்..
வாங்க, நாம நிகழ்ச்சிக்கு போவோம்
கடல் நீரை குடிநீராக்கி பயன்படுத்தும் திட்டத்திற்காக ராமநாதபுரம் மற்றும் திருச்செந்தூர் மாவட்டங்களில் ஆலந்தலை மற்றும் குதிரைமொழி பகுதிகளில் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.
கோடை காலம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், மக்களின் குடிநீர் தேவைக்காக இந்த ஆலைகள் பயன்படும் என்ற நோக்கில், சுமார் ரூ.1350 கோடி மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்கும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுத்திருப்பது தமிழகத்திற்கு பெரும்பின்னடைவாக கருதப்படுகிறது.
சோகம்..
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சுய ஊரடங்கால், தமிழக மின்நுகர்வு, 3,000 மெகாவாட் வரை சரிந்தது. கோடைவெயில் அதிகரிப்பால், தமிழக மின்நுகர்வு, நேற்று முன்தினம், 14 ஆயிரத்து, 519 மெகாவாட்டாக இருந்தது. 'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, நாடு முழுவதும், நேற்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால், பெரிய, சிறிய தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்டன. அதற்கேற்ப, தமிழக மின்தேவை, நேற்று காலை, 11 ஆயிரத்து, 496 மெகாவாட்டாக சரிந்தது. குறிப்பாக, 3,000 மெகாவாட் வரை சரிந்தது.
நல்ல விசயம்..
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஒரு இளைஞர் கடந்த 12ம் தேதி ஐதராபாத் வந்தார். அவருக்கு வரங்கல் ராமண்ணாபேட்டையில் மார்ச் 19ம் தேதி திருமணம் நடந்தது. மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் வரவேற்பு நிகழ்ச்சியை நிறுத்தினர். அவரை மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அங்கு அவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு புனேவில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த அவர் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருந்தாலும் அதையும் மீறி அவர் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவரின் திருமணத்திற்கு வந்த அனைவரும் பயத்தில் உள்ளனர்.
அதிர்ச்சி பேரதிர்ச்சி...
கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்ப, இயற்கையிலேயே பல கிருமி நாசினிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தினால் போதும்.வேப்பங்கொழுந்து, மஞ்சள் துாள் கலந்து துவையல் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.'படிகார நீரை, கிருமி நாசினியாக பயன்படுத்தி கை கழுவினால் போதும்; கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். வீடுகளில் வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்,'' என, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர் ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.
இயற்கை கொடை..
ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் மற்றொரு நிகழ்ச்சியில் சந்திப்போம். Bye
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.