Advertisment

Tamil Nadu News Updates : மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம், மொத்த எண்ணிக்கை 10 ஆனது

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu News Today Live Updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக எக்ஸ்க்ளூசிவ் லைவ் பிளாக்கில் காணலாம்.

Advertisment

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயும் அமலாக்கத் துறையும் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இவ்வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், சிதம்பரத்தின் சிபிஐ காவலும் இன்றுடன் நிறைவடைகிறது.

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் விலாடிவோஸ்டோக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று, 2 நாள் பயணமாக மோடி நேற்று ரஷ்யா சென்றார். சுற்றுப்பயணத்தின் 2-வது நாளான இன்று பிரதமர் மோடி, மங்கோலியா அதிபர் கால்ட்மாகின் பட்டுல்காவை சந்தித்தார்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, traffic, train services and airlines - தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.



























Highlights

    20:17 (IST)05 Sep 2019

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனதற்கு காரணமே திராவிட இயக்கம் தான் - ஸ்டாலின்

    திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறார்கள், தமிழக கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனதற்கு காரணமே திராவிட இயக்கம் தான் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    18:05 (IST)05 Sep 2019

    மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம், மொத்த எண்ணிக்கை 10 ஆனது

    தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்கிறது. ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், ஆர்.பி. உதயகுமார் மற்றும் ராஜேந்திரபாலாஜி ஆகியோர் உடன் உள்ளனர். இதுமட்டுமின்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், அமைச்சர் நிலோபர் கபில் ரஷ்யாவுக்கும், கடம்பூர் ராஜூ மொரிசியஸ் நாட்டுக்கும் சென்றுள்ளனர். பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்லாந்துக்கு சென்று விட்டு சென்னை திரும்பி விட்டார்.

    தொடர்ந்து இன்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் சிங்கப்பூர் சென்றனர். சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்ப்பதற்காக சி.வி. சண்முகம் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இதேபோல் தனிப்பட்ட பயணமாக தன் குடும்பத்தினருடன் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துபாய் வழியாக எகிப்து சென்றுள்ளார். எனவே, வெளிநாடு சென்ற தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 10 ஆனது.

    17:39 (IST)05 Sep 2019

    சிதம்பரத்திற்கு திகார் சிறை!

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிற்பித்துள்ளது.  

    16:56 (IST)05 Sep 2019

    மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்தானது 15 ஆயிரம் கன அடியில் இருந்து 26 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரம். அணையின் நீர்மட்டம் : 116.02 அடி, நீர் இருப்பு - 87.26 டி.எம்.சி. நீர் திறப்பு 18,700 கன அடி

    16:41 (IST)05 Sep 2019

    காரசார விவாதத்தில் கபில் சிபில்

    ப.சிதம்பரத்தை ஜாமீனில் அனுப்பக் கோரி வாதிடவில்லை. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டி வாதிடுகின்றேன் என்று கபில் சிபில் சி.பி.ஐ. நிதிமன்றத்தில் கபில் சிபில்

    16:29 (IST)05 Sep 2019

    ஐ.என்.எக்ஸ் வழக்கில் இன்னும் அரை மணி நேரத்தில் உத்தரவு

    சிபிஐ தரப்பு ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை மனுவின் மீதான உத்தரவு அரை மணி நேரம் கழித்து அறிவிக்கப்படும் என்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு.

    16:16 (IST)05 Sep 2019

    சிதம்பரத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் - சிபிஐ வழக்கறிஞர்

    ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகின்ற நிலையில் அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதம். சிங்கப்பூர், சுவிஸ் நாடுகளில் தான் வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளது என்றும் வாதம். நீதிமன்ற காவலுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தால் திகார் சிறைக்கு அனுப்பப்படுவார் நிதி அமைச்சர்

    16:11 (IST)05 Sep 2019

    ஐ.என்.எக்ஸ் வழக்கில் ஆஜராக தயார் - ப.சிதம்பரம்

    எனக்கு எதிராக ஒரு ஆதாரமும் இல்லாத நிலையில் எந்த ஆதாரத்தை கலைக்கப் போகின்றேன். அமலாக்கதுறையின் காவலுக்கு செல்ல தயார் என்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஆஜரான ப.சிதம்பரம் வாதம்.

    15:51 (IST)05 Sep 2019

    சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் ப.சிதம்பரம்

    ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 15 நாள் சிபிஐ காவல் முடிவடைந்த நிலையில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார் ப.சிதம்பரம். நீதிமன்றத்தில் நளினி மற்றும் கார்த்தி ஆகியோரும் வருகை

    15:28 (IST)05 Sep 2019

    விறுவிறுப்பாக நடைபெறும் ஜம்மு - காஷ்மீர் மேம்பாடுகள்

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் , ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும், லடாக் யூனியன் பிரதேசமாகவும் பிரித்து கடந்த மாதம் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் சாலை வரைபடங்கள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    15:20 (IST)05 Sep 2019

    ”ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி” ஆசிரியர் தின சிறப்பு அறிவிப்பு - செங்கோட்டையன்

    அரசு பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்தினாலும், மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பவர்கள் ஆசிரியர்கள் தான் என்று தமிழக கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனையை கூர்ந்து கவனித்து வருவதாக கூறிய அவர், முதலமைச்சரின் அனுமதிக்குப் பின்னர் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    15:05 (IST)05 Sep 2019

    பால் முத்தூட் கொலை வழக்கு : 8 பேருக்கு ஆயுள் தண்டனை ரத்து

    முத்தூட் நிறுவன அதிபர் மகன் பால் முத்தூட் கொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ நீதிமன்றம் 9 பேருக்கு ஆயுள் தண்டனையை வழங்கியது. ஆனால் கேரள உயர் நீதிமன்றம், அந்த கொலை வழக்கில் 8 பேருக்கு நேரடி தொடர்பு இல்லை என்பதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்கின்றோம் என அறிவித்துள்ளது.

    14:48 (IST)05 Sep 2019

    அரசு பள்ளியில் ஆசிரியர்களின் குழந்தைகள்

    ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் ஆசிரியர் பணி முழுமை பெறும் என புதுவை மாநில முதல்வர் நாராயண சாமி அறிவித்துள்ளார்.

    14:36 (IST)05 Sep 2019

    ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் ப.சிதம்பரம்

    2006ம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது ஏர்செல் மேக்ஸிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அதில் விதிமுறைகள் மீறப்பட்டதாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் பெறுவது தொடர்பான மனு இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் என இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ஓ.பி.ஷைனி.  வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணிக்க கூடாது என்றும் அவர்கள் இருவருக்கும் நிபந்தனை விதிக்கபப்ட்டுள்ளது.

    13:52 (IST)05 Sep 2019

    சிபிஐ கோரிக்கை நிராகரிப்பு

    ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை கருத்தில்கொள்ள வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

    13:50 (IST)05 Sep 2019

    மோட்டார் வாகனச் சட்டத்தின் புதிய விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா?

    தமிழகத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின் புதிய விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த அரசு, "செப்.1ம தேதி விதிகள் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

    13:32 (IST)05 Sep 2019

    சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது - சிபிஐ முறையீடு

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே, சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

    12:33 (IST)05 Sep 2019

    ஏன் அதிக அபராதம்? - மத்திய அமைச்சர் விளக்கம்

    அனைவரும் மோட்டார் வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. அனைவரும் விதிகளை பின்பற்றி அபராதம் என்பதே இல்லை என்ற நிலை வர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    12:31 (IST)05 Sep 2019

    விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கம் - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ

    நடிகர் விஜயின் ரசிகர்கள் பெரும்பாலானோர் அதிமுக பக்கமே உள்ளனர் என மதுரையில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டி அளித்துள்ளார்.

    11:56 (IST)05 Sep 2019

    நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி

    டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் 46 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.

    தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி, செல்வக்கண்ணன் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றனர்

    11:55 (IST)05 Sep 2019

    பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை - ஸ்டாலின்

    "பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்து கொண்டுள்ளோம். பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை, மக்கள் தான் தோற்கடித்தனர்" என திருப்பூர் நிர்வாகி இல்ல திருமண விழாவில் ஸ்டாலின் பேசியுள்ளார். 

    முன்னதாக, 'கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது' என இதே விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.

    11:52 (IST)05 Sep 2019

    முதல்வர் பழனிசாமிக்கு திமுக சார்பில் பாராட்டு விழா - மு.க.ஸ்டாலின்

    சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது? முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான். ஒப்பந்தம் போடப்பட்ட முதலீட்டை அப்படியே கொண்டு வந்தால், முதல்வர் பழனிசாமிக்கு திமுக சார்பில் பாராட்டு விழா எடுக்க தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    11:50 (IST)05 Sep 2019

    மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ தாரிகாமிக்கு டெல்லியில் சிகிச்சை

    காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ தாரிகாமியை டெல்லி அழைத்து வந்து சிகிச்சை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீதாராம் யெச்சூரி அளித்த அறிக்கை தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    11:48 (IST)05 Sep 2019

    மனுவை திரும்பப் பெற்ற சிதம்பரம்

    சிபிஐ காவல் மற்றும் கைதுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு திரும்ப பெறப்பட்டது. சிபிஐ கைதுக்கு எதிராக ஜாமின் பெற சிதம்பரம் தரப்பு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

    10:59 (IST)05 Sep 2019

    தூத்துக்குடி கனிமொழி வெற்றி - தமிழிசை வழக்கில் கனிமொழி பதிலளிக்க நோட்டீஸ்

    கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த வழக்கில், திமுக எம்.பி கனிமொழி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறைபாடான வேட்புமனுவை கனிமொழி தாக்கல் செய்ததாக மனுவில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 பணம் வழங்கப்பட்டதாகவும் மனுவில் தமிழிசை குற்றம் சாட்டியுள்ளார்.

    10:49 (IST)05 Sep 2019

    ஐ.என்.எக்ஸ். முறைகேடு புகார் வழக்கு சரியான திசையில் செல்கிறது - சுப்ரீம் கோர்ட்

    உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஐ.என்.எக்ஸ். முறைகேடு புகார் வழக்கு சரியான திசையில் செல்கிறது. ஆகையால், உச்சநீதிமன்றம் அதில் தலையிட விரும்பவில்லை. பொருளாதார வழக்குகள் சமூகத்தில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை கிடையாது. சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடையாது. அவர் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தை  சிதம்பரம் நாடலாம் என்று அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

    10:43 (IST)05 Sep 2019

    சிதம்பரத்தை கைது செய்கிறது அமலாக்கத்துறை!

    அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தற்போது சிபிஐ காவலில் இருக்கும் சிதம்பரத்தை அமலாக்கத்துறை அடுத்து கைது செய்யவிருக்கிறது. 

    10:38 (IST)05 Sep 2019

    வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாள் - அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

    வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    10:36 (IST)05 Sep 2019

    ப.சிதம்பரத்தின் வழக்கு விசாரணை தொடங்கியது

    ஐ.என்.எக்ஸ் மீடியா - அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரத்தின் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

    10:07 (IST)05 Sep 2019

    2,300 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

    சான் ஹுசே நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் ரூ2,300 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

    இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 6,500க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    10:05 (IST)05 Sep 2019

    அமமுக மாவட்ட செயலாளர்கள் நியமனம்

    தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு அமமுக மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி மாநில அமமுக செயலாளராக வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    10:03 (IST)05 Sep 2019

    Teachers Day 2019: துணை முதல்வர் ஓ.பி.எஸ். வாழ்த்து

    "மாணவர்களுக்கு கல்வியோடு நற்பண்புகளையும், சமூக சிந்தனைகளையும் கற்பித்து சிறந்த குடிமக்களாக உருவாக்கிடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்.

    09:54 (IST)05 Sep 2019

    ஸ்டாலினை புகழ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

    கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது. திருப்பூரில் வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். 

    09:51 (IST)05 Sep 2019

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், குளச்சல், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    09:44 (IST)05 Sep 2019

    பவானிசாகர் அணை நீர்மட்டம் நிலவரம்

    பவானிசாகர் அணை நீர்மட்டம் - 94.19 அடி, நீர்இருப்பு - 24.4 டிஎம்சி, நீர்வரத்து - 5,357 கனஅடி, வெளியேற்றம் - 3,650 கனஅடி

    09:41 (IST)05 Sep 2019

    நடிகை மதுமிதா புகார் - போலீசார் விசாரணை

    தனியார் தொலைக்காட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் மீது நடிகை மதுமிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை மதுமிதா, விதிமுறையை மீறியதாக கூறி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் மதுமிதா புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் நிகழ்ச்சியில் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, போட்டியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி நிறுவனமும், நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமும் தன்னைப்பற்றி தவறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் செய்யக்கூடாது என குறிப்பிட்டிருந்த அவர், நிறுவனங்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார்.

    09:38 (IST)05 Sep 2019

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,235 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.85அடி; அணையின் நீர் இருப்பு 87.00 டிஎம்சி ஆக இருக்கிறது.

    09:34 (IST)05 Sep 2019

    16 அமெரிக்க நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்

    அமெரிக்க பயணத்தில் தமிழகத்துக்கு மேலும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்தார் முதல்வர் பழனிசாமி. சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் 16 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம்.

    09:32 (IST)05 Sep 2019

    Petrol, Diesel Price Today: பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைவு

    இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்து , ஒரு லிட்டர் ரூ.74.75 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 5 காசு குறைந்து ஒரு லிட்டர் ரூ.68.89 ஆகவும் உள்ளது.

    09:31 (IST)05 Sep 2019

    Happy Teachers Day: பிரதமர் மோடி வாழ்த்து

    ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், 'சிறந்த வழிகாட்டி, தனித்துவம் மிக்க ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

    09:30 (IST)05 Sep 2019

    Teachers Day 2019: ஜனாதிபதி ராம்நாத் ஆசிரியர் தின வாழ்த்து

    இன்று ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துப்பதிவில், “மாணவர்களை நல்வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை கட்டமைக்க ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

    Tamil Nadu News Live Updates: ‘‘தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. இந்த பெயர் நீக்கம் குறித்து தொடரப்பட்ட வழக்குகளை 521 வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் விசாரிக்கின்றன. தீர்ப்பாயங்களின் இறுதி தீர்ப்பு வரும் வரை அவர்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி உடையவர்கள் தான்" என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது. இதன்படி தலைமை நீதிபதியாக அவரை நியமித்து மத்திய அரசு விரைவில் உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

    மாநிலத்தில் உள்ள பொது வினியோகத் திட்டத்திற்கு ஆபத்தை உருவாக்கும் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment