Tamil Nadu Weather Forecast: தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் ஊர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பின் படி, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil