தமிழ்நாடு காவல் துறையில் மகளிரின் 50ஆம் ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து 730 கி.மீ தூரம் மகளிர் போலீசாரின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
109 பெண் காவலர்கள் பங்கெடுத்த 730 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப் பேரணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
-
பெண் போலீஸ் சைக்கிள் பேரணி
இந்தப் பேரணி கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை (மார்ச் 27) வந்து சேர்ந்தது. இவர்களை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் வரவேற்றார்.
மேலும், பேரணியில் வந்த காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை மூலம் ஆரத்தி எடுக்கப்பட்டு, மலர் மாலை அணிவித்து பூ தூவி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்.பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“