பெட்ரோல் டீசல் விலை:
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒரு லிட்டருக்கு (பெட்ரோல்- 102.63 ரூபாய்க்கும், டீசல்- 94.24 ரூபாய்க்கும்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் வெள்ளி விலை நிலவரம்:
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,510 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.44,080 ஆக உள்ளது. 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6,027 என நிர்ணயிக்கப்பட்டு ரூ.48,216 ஆக விற்பனையாகிவருகிறது.
கிராம் வெள்ளி ரூ.75.70 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.75,700 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு 30 காசுகள் வரை சரிந்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
சென்னை பாடி மேம்பாலம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து. தீப்பிடித்து எரியும் ரப்பர் கழிவுகளால் கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்இ.
ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்கள் ஹரீஷ், மாலதியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு. ஹரீஷை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி
வேலூர், அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் உள்ள சிறார்கள் மீண்டும் ரகளை. நேற்று 6 சிறார்கள் தப்பியோடிய நிலையில், ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு 14 சிறார்கள் மீது பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளர் புகார் – போலீசார் குவிப்பு
ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் ஆல்-ரவுண்டர் ஸ்டோக்ஸ் பந்துவீசமாட்டார். ஸ்டோக்சுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் பேட்டராக மட்டுமே பயன்படுத்த உள்ளதாக பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி தெரிவித்துள்ளார். சென்னை அணி,ஸ்டோக்சை ₨16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளையடித்த விவகாரம் ஐஸ்வர்யா வீட்டு பணியாளர் ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி. 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க வேண்டும்; தனி நீதிபதியின் உத்தரவு முன்னுக்குப்பின் முரணாகவும், கட்சி விதிகளுக்கு எதிரானதாகவும் உள்ளது! என கூறி ஒபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை புலியை அதிநவீன டிரோன் கேமிராவை பயன்படுத்தி தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு குழுக்களாக பிரிந்து சிறுத்தை புலியை தேடி வரும் வனத்துறையினர்
திருவள்ளூர், பெரிய குப்பத்தில் தந்தை கண்டித்ததால் 9 வயது சிறுமி ஜன்னல் கம்பியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை – போலீசார் விசாரணை
பாதுகாக்கப்பட்ட தாது மணல்களை கண்காணிப்பது போல், ஆற்று மணல்களையும் பாதுகாக்க ஏன் நடவடிக்கை கூடாது? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
மணல் குவாரி சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு கரூர், காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகளுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை புலியை அதிநவீன டிரோன் கேமிராவை பயன்படுத்தி தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு குழுக்களாக பிரிந்து சிறுத்தை புலியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தென் மாநிலங்கள் உள்ளிட்ட இந்தியாவில் இடதுசாரி தீவிரவாதம் 77% குறைந்துள்ளது. தேசிய கொள்கை உருவாக்கி எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தீவிரவாதம் குறைந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது
ஜப்பான், ஹொக்கைடோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது
கடந்த 2020-ன் படி, இந்தியாவில் செயலிகள் மூலம் ரூ1.42 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டை விட 12 மடங்கு அதிகரித்துள்ளது என மிக எளிதாக ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் எத்தனை உள்ளது, அவற்றின் மூலம் எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்க 3 மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மார்ச் 30 வரை அவகாசம் வழங்கியிருந்த நிலையில், ஜூன் 30 வரை நீட்டித்தது மத்திய அரசு அறிவித்துள்ளது
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாள் முழுவதும் நாடாளுமன்றம் முடங்கியது. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதில் கார்ட்டூன் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்டதற்கான காரணம், யார் செய்தார்கள் என விசாரணை நடைபெற்று வருகிறது
நெல்லையில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் செய்தி தாளில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணைய ஐஜி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது
வேலூரில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்துகிறது. நேற்று 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவான நிலையில், இன்றும் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை கொளுத்தியது. அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சுட்டெரிக்கும் வெயிலால் இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது
திருப்பதி தேவஸ்தான இணையதளம் திடீரென மூடப்பட்டதால் பக்தர்கள் அவதிக்குளாகி உள்ளனர்.
தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் போன்றவை முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இணையதள பழுதை விரைவில் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என தேவஸ்தானம் தகவல்.
ராகுல்காந்தி வசித்து வரும் வீட்டை ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ராகுல்காந்தி எம்.பி., பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கிறேன் என்று மக்களவை செயலகத்தின் துணைச் செயலாளருக்கு ராகுல்காந்தி கடிதம்.
நடப்பு நிதியாண்டின், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக உயர்வு என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க ரூ.12 கோடி லஞ்சம் பெற்றதாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் அலுவலகம் கட்ட 2011-2016 காலத்தில் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, காக்னிசன்ட், எல்&டி நிறுவன அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
“இந்திய நீதிமன்றத்தில் நடைபெறும் ராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை நாங்கள் கவனித்து வருகிறோம்.
சட்டம் மூலமாக நடத்தப்படும் அரசு மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ஜனநாயகம் செயல்படவேண்டும்” என்று அமெரிக்கா வெள்ளை மாளிகை துணை செய்தித்தொடர்பாளர் பதிலளித்துள்ளார்.