Advertisment

Tamil News Today: இரவு நேரங்களில் புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Tamil Nadu News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
மதுரை வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் சென்னை அனுவ்ராத் எக்ஸ்பிரஸ்...

Tamil News Updares :

Advertisment

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

  • Jul 22, 2024 22:37 IST

    கர்நாடக சட்டசபையில் நீட் விலக்கு தீர்மானம் கொண்டுவர முடிவு

    தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகாவிலும் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் கொண்டவர முதல்வர் சித்தாராமையா தலைமையிலான மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் விவகாரத்தில் அந்தந்த மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில்,



  • Jul 22, 2024 22:31 IST

    இரவு நேரங்களில் புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

    சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் பகல் நேர புறநகர் ரயில் சேவைகள் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 02 வரை வழக்கம் போல் இயங்கும். ஆனால் இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணி வரை மட்டும் புறநகர் ரயில் சேவைகள் முன்பு அறிவித்தது போலவே இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    தாம்பரம் யார்டின் பராமரிப்பு பணியை முன்னிட்டு ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 14 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisement
  • Jul 22, 2024 20:58 IST

    நெல்லை, ஆவடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள்; 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

    தமிழகத்தில் நெல்லை, ஆவடி, சேலம், ஒசூர், கடலூர் மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது



  • Jul 22, 2024 20:27 IST

    இந்திய அணியின் இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமனம்

    இலங்கை தொடருக்கான இந்திய அணியின் இடைக்கால பந்துவீச்சு பயிற்சியாளராக சாய்ராஜ் பகுதுலே நியமனம் செய்யப்பட்டுள்ளார்



  • Jul 22, 2024 20:09 IST

    சென்னையில் பகல் நேரத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

    சென்னையில் பகல் நேரத்தில் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை முதல் ஆகஸ்ட் 2 வரை பகல் நேரத்தில் வழக்கமான கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும். இரவு 10.30 முதல் நள்ளிரவு 2.30 வரை மட்டும் முன்பு அறிவித்தது போலவே ரயில்கள் ரத்து செய்யப்படும். சனி (ஜூலை 27) மற்றும் ஞாயிறு (ஜூலை 28) மட்டும் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படும். ஆகஸ்ட் 3 முதல் 14 வரை சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் ரயில் மின்சார சேவைகள் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது



  • Jul 22, 2024 19:45 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; பிரபல ரவுடி மின்ட் ரமேஷிடம் தனிப்படை போலீசார் விசாரணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி மின்ட் ரமேஷிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 3 வழக்கறிஞர்களிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். பா.ஜ.க பிரமுகராக இருந்த மின்ட் ரமேஷ் வங்கி கணக்குகளை ஆய்வு செய்து காவல்துறை விசாரணை நடத்தியது



  • Jul 22, 2024 19:42 IST

    நெல்லை ஆட்சியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

    நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை திரும்ப பெற வலியுறுத்தி, அதிகாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊழியர் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக ஆட்சியர் மீது அனைத்து துறை அதிகாரிகளும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்



  • Jul 22, 2024 18:43 IST

    பி.டி.ஆர் கார் மீது காலணி வீசப்பட்ட வழக்கு; ரத்து செய்ய இயலாது... 12 பேர் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது காலணி வீசப்பட்ட வழக்கை ரத்து செய்ய இயலாது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மதுரையில், 2022-ம் ஆண்டு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க-வினர் சிலர் காலணியை வீசினர்; தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி பா.ஜ.க-வைச் சேர்ந்த வேங்கைமாறன் உள்ளிட்ட 12 பேர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.



  • Jul 22, 2024 18:39 IST

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் - எழும்பூர் கோர்ட் உத்தரவு

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம். மேலும், கைதான பொன்னை பாலு, ராமு என்ற வினோத், வழக்கறிஞர் அருள் ஆகியோருக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jul 22, 2024 17:51 IST

    மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை நடத்த இயலாது - தமிழக அரசு 

    மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த இயலாது; தேயிலைத் தோட்டத்தை Tantea நிர்வாகத்திற்கு வழங்குவது சாத்தியமற்றது; தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாரம்பரிய வனவாசிகள் என வரையறுக்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வனத்துறை சார்பில் வாதிடப்பட்டது.



  • Jul 22, 2024 17:31 IST

    பெயரை மாற்றம் செய்தார் ஆம்ஸ்ட்ராங் மனைவி

    படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி என்ற தனது பெயரை இனி திருமதி ஆம்ஸ்ட்ராங் பி.ஏ.பி.எல் என்று பயன்படுத்த உள்ளார். பொற்கொடு என்ற பெயரை அலுவல் ரீதியாக இனி பயன்படுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.



  • Jul 22, 2024 17:26 IST

    தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் - ராஜ்யசபாவில் தி.மு.க எம்.பி வில்சன் வலியுறுத்தல் 

    ராஜ்யசபாவில் தி.மு.க எம்.பி வில்சன் பேச்சு: “ரூ.63,246 கோடியில் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட விரிவாக்கத்துக்கு 2020-ல் உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார். மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்த செலவில் 50 சதவீதத்தை ஒப்புக்கொண்டபடி மத்திய அரசு ரூ.31,623 கோடியை ஒதுக்க வேண்டும். கோவை, மதுரை மற்றும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு பல மாதங்களக நிலுவையில் உள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட 2 இயற்கை பேரிடர்களால் ரூ. 37,907 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது; சென்னை, தூத்துக்குடி வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு இதுவரை ரூ. 276 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இடைக்கால நிவாரணமாக ரூ. 3,000 கோடியையாவது உடனடியாக ஒதுக்க வேண்டும்” என்று வலியுறுத்திப் பேசினார்.



  • Jul 22, 2024 16:49 IST

    சென்னையில் மின்சார ரயில்கள் சேவை குறைப்பு; கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு

    நாளை முதல் ஆகஸ்ட் 14 வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை ஒட்டி, கூடுதல் பேருந்துகளை இயக்கும் மாநகர் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
    அதன்படி, பல்லாவரம் - கூடுவாஞ்சேரி வழித்தடத்தில் 60 பேருந்துகள் மூலமாக 571 நடைகள் தற்போது இயக்கப்பட உள்ளன.
    அதேபோல், பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு, கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கு சிற்றுந்து சேவை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 22, 2024 16:16 IST

    வழக்கு எப்போது முடியும்? கடவுளுக்குதான் தெரியும்; செந்தில் பாலாஜி தரப்பு

    சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “வழக்கில் என்ன விசாரிக்கிறார்கள்; எப்போது முடியும் என்பது கடவுளுக்குதான் தெரியும். அவர் இதய அறுவை சிகிச்சை வேறு செய்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என வாதிட்டார்.



  • Jul 22, 2024 16:08 IST

    குமரியில் படகு சவாரி ரத்து

    முக்கடலும் சங்கமிக்கும் நாட்டின் தென்கோடி எல்லையான கன்னியாகுமரியில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் படகு சவாரி சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கடற்கரையோரம் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.



  • Jul 22, 2024 16:07 IST

    திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இன்று கடல் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.



  • Jul 22, 2024 15:52 IST

    கோவையில் கண்காணிப்பு தீவிரம்

    கேரளத்தில் மலப்புரத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் நேற்று நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் கோவையில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    கோவிட் வைரஸ் பெருந்தொற்றை விட நிபா வைரஸ் பாதிப்பு கடினமானதாக கருதப்படுகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைத்தோரின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது.



  • Jul 22, 2024 15:52 IST

    பிரசாத் பட பாடலை வெளியிடும் விஜய்

    பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது.
    சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர். படம், ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.



  • Jul 22, 2024 15:52 IST

    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் புதிய தலைவர் தேர்வு


     
    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில துணை தலைவராக இளமான் சேகர், பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • Jul 22, 2024 15:51 IST

    தமிழ்நாடு பகுஜன் சமாஜ் புதிய தலைவர் தேர்வு; ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு முக்கிய பொறுப்பு


    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாநில துணை தலைவராக இளமான் சேகர், பொருளாளராக கமலவேல் செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • Jul 22, 2024 15:51 IST

    தாம்பரத்தில் நாளை முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து

    சென்னையை அடுத்த தாம்பரத்தில் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகளுக்காக நாளை முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    எந்தெந்த ரயில்கள் ரத்து? அவற்றுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஆகியவற்றின் விவரங்களை தென்னக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
    அதன்படி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு சேவை காலை 9.30, 9.56, 10.56, 11.40 மற்றும் நண்பகல் 12.20, 12.40 மற்றும் இரவு 10.40 மணிக்கு ரத்து செய்யப்படுகிறது.



  • Jul 22, 2024 14:49 IST

    செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

    வேலைக்கு பணம் பொற்றதாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கை வரும் 24ம் தேதி 3 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்



  • Jul 22, 2024 14:49 IST

    தமாகா பதவியை ராஜினாமா செய்தது குறித்து யுயுவராஜா விளக்கம்

    அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக பதவியை ராஜினாமா செய்தேன். தொடர்ந்து கட்சியின் வளர்ச்சிக்காக ஜி.கே.வாசன் தலைமையின் கீழ் பயணிப்பேன்.

    கட்சிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எடுக்கும் முடிவுக்கு முன் மாதிரியாக இந்த ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளேன். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது.

    - தமாகா இளைஞரணி மாநிலத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து யுவராஜா விளக்கம்



  • Jul 22, 2024 14:37 IST

    வெள்ள சேதத்துக்கு ரூ.3000 கோடியை உடனடியாக ஒதுக்க வில்சன் வலியுறுத்தல்

    சென்னை, தூத்துக்குடி வெள்ள சேதத்துக்கு இதுவரை ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.  இடைக்கால நிவாரணமாக ரூ.3000 கோடியையாவது மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்

    -திமுக எம்.பி. வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தல்



  • Jul 22, 2024 14:25 IST

    மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

    நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% முதல் 7% வரை வளர்ச்சியடையும் என கணிப்பு

    நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 4.5% ஆக இருக்கும்

    நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே 997 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானத்துறை 15% வளர்ந்து பயணிகளை கையாளுவதிலும் இரட்டிப்பு வளர்ச்சியை கண்டுள்ளது.

    13 தலைப்புகளின் கீழ் மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்



  • Jul 22, 2024 14:19 IST

    வேங்கைவயல் வழக்கு: அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு

    வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை,  அடுத்த வாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.



  • Jul 22, 2024 14:17 IST

    பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி  ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார் ஜோ பைடன். இதையடுத்து பைடனின் பிரசார செயலகம், கமலா பிரசார செயலகம் என பெயர் மாற்றப்பட்டது. 
    "நீதிமன்றத்தால் குற்றவாளி என தண்டிக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்பா? வழக்கறிஞர் கமலா ஹாரிஸா? " என கேள்வி எழுப்பி பிரசாரத்தை தொடங்கினார் கமலா ஹாரிஸ்.



  • Jul 22, 2024 13:55 IST

    கருத்துக்கேட்பு கூட்டத்தில் வாக்குவாதம்

    தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில், சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள், மினி பேருந்து உரிமையாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை வரவழைத்து இரு தரப்பினரையும் அதிகாரிகள் சமாதானம் செய்தனர்



  • Jul 22, 2024 13:47 IST

    மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    2026 பேரவை தேர்தலை எதிர்கொள்வது, கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.



  • Jul 22, 2024 13:12 IST

    55 மின்சார ரயில்கள் ரத்து

    ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து



  • Jul 22, 2024 13:00 IST

    ராகுல்- தர்மேந்திர பிரதான் காரசார விவாதம்

    நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது, நாட்டில் என்ன நடக்கிறது என்பது குறித்து லட்சக்கணக்கான மாணவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

    இந்தியத் தேர்வு நடைமுறைகள் ஒரு மோசடி என்ற முடிவுக்கு இந்திய மாணவர்கள் வந்துள்ளனர்.

    பணம் இருந்தால் இந்திய தேர்வு நடைமுறையை வாங்க முடியும் என்பது தான் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    தேர்வு முறைகேடுகளை தடுக்க அமைப்பு ரீதியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது தான் எங்களுடைய கேள்வி- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 

    2 முறை உச்சநீதிமன்றம் சென்று, 2 முறையும் பொதுவான நுழைவு தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

     உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் நீட் தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் தேர்வு நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இப்படி பேசுவது துரதிருஷ்டவசமானது.

    போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது- மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்



  • Jul 22, 2024 12:53 IST

    நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் - கலாநிதி வீராசாமி

    தமிழகத்தில் நீட் தேர்வால் அனிதா உட்பட பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு மசோதா நிறைவேற்றி உள்ளது,

    நீட் தேர்வை ரத்து செய்யும் எந்த திட்டமும் இல்லை என மத்திய அரசு பதில் அளித்துள்ளது - தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி



  • Jul 22, 2024 12:51 IST

    த.ம.கா இளைஞர் அணித் தலைவர் ராஜினாமா

    தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் யுவராஜா



  • Jul 22, 2024 12:38 IST

    2 இடங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உறுதி: தலைமை நீதிபதி அமர்வு 

    நீட் வினாத்தாள் நாடு முழுவதும் கசிந்ததா? - தலைமை நீதிபதி

    நீட் தேர்வு வினாத்தாள் நாடு முழுவதும் கசிந்ததா? ஹசாரிபாக், பாட்னா ஆகிய இடங்களில் வினாத்தாள் கசிந்தது உறுதியாகி உள்ளது. தரவுகள் அடிப்படையில் 2 இடங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உறுதி - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்  அமர்வு 



  • Jul 22, 2024 12:04 IST

    70 முறை பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு: மாணிக்கம் தாகூர்

    7 ஆண்டுகளில் 70 முறை பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு 

    வினாத்தாள் கசிவுகள் நடைபெறுவதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?- காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

    70 முறை வினாத்தாள் கசிவு நடைபெற்றது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை

    பாட்னா மற்றும் அதனை  சுற்றியுள்ள ஒரு சில மையங்களில் மட்டுமே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்



  • Jul 22, 2024 11:55 IST

    மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்

    மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம். இன்று தொடங்கியுள்ள கூட்டத்தொடர், ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது

    நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 



  • Jul 22, 2024 11:35 IST

    வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை

    நாகர்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை, ரூ.12 லட்சம் கொள்ளை

    ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானியான பகவதியப்பன் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

    நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் திருட்டு

    மனைவியை அவரது தாய் வீட்டில் விட்டுவிட்டு, திரும்பி வந்து பார்த்த போது அதிர்ச்சி

    மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வடசேரி போலீசார் சோதனை



  • Jul 22, 2024 11:34 IST

    ஆர்எஸ்எஸ் அமைப்பில் மத்திய அரசு பணியாளர்கள்: தடை நீக்கம்

    மத்திய அரசு பணியாளர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கையில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மத்திய அரசு.

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கையில் மத்திய அரசு பணியாளர்கள் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மத்திய அரசு



  • Jul 22, 2024 11:15 IST

    நீட் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்

    நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

    நீட் தேர்வின் ஒவ்வொரு நடைமுறை செயல்பாடுகளிலும் முறைகேடுகள் உள்ளன. முறைகேடுகள் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன.

    வினாத்தாள் கசிவு என்பது அவை வங்கி லாக்கர்களுக்கு அனுப்பப்பட்டதற்கு முன்பே நிகழ்ந்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை



  • Jul 22, 2024 09:55 IST

    செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேஎற்றம்

    மூச்சுத் திணறல் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளற்றம்  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேசிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மூச்சு திணறல், மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இசிஜி பரிசோதனை



  • Jul 22, 2024 09:54 IST

    தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்

    போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டதாக தகவல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல் தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வி ஆண்டில் 433 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி



  • Jul 22, 2024 08:38 IST

    பொறியியல் மாணவர் கலந்தாய்வு இன்று தொடக்கம்

    அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லுாரிகளில், பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.



  • Jul 22, 2024 08:32 IST

    கமலா ஹாரிஸை வீழ்த்துவது எளிது டொனால்ட் ட்ரம்ப்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



  • Jul 22, 2024 08:23 IST

    கோவை பீளமேடு அருகே ஆம்னிபேருந்து வந்த பொழுது அதிகாலை தீப்பிடித்தது

    பயணிகள் அனைவரும் வாகனத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில் தீ பேருந்து முழுவதும் பரவியதில் பேருந்து முழுமையாக எரிந்து சேதம் அடைந்தது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை



  • Jul 22, 2024 08:23 IST

    மணல் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற போது சிறுகனூர் அருகே விபத்து நள்ளிரவில் விபத்து - திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு மணல் லாரி மீது மோதியதில் அரசுப் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதம் விபத்தில் சிக்கிய 2 வாகனங்களும் கிரேன் மூலம் மீட்டு அப்புறப்படுத்திய போலீசார்



  • Jul 22, 2024 08:22 IST

    கனமழை - நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

    உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு



  • Jul 22, 2024 08:16 IST

    மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கூடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் 3 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை



  • Jul 22, 2024 08:14 IST

    ஜோ பைடன் விலகல் : அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு

     அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் தெரிவித்தார்.



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment