Tamil Nadu News Updates: அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 7.66 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,785 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6.03 கோடியாகவும், பலி எண்ணிக்கை 8.58 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.
டெட்ரோஸ் அதானோம் எச்சரிக்கை
டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும் லேசானது என வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. முந்தைய கொரோனா வகைகளைப் போலவே ஒமிக்ரானும் மக்களை கொல்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதானோம் எச்சரித்துள்ளார்.
பெட்ரோல்,டீசல் அப்டேட்
65ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
விரைவில் மருத்துவ கலந்தாய்வு
மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. எனவே, மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா அப்டேட்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 984 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தற்போது மொத்தமாக 30 ஆயிரத்து 817 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மொத்த ஒமிக்ரான் பாதிப்பு 185 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோரில் 6 பேர் வெளிமாநிலத்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தகக்து.
முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கான 27% இடஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்றத்தில் போராடி உறுதி செய்யுதன்னதாக திமுக எம்பி வில்சன் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார். மேலும தேசம் முழுவதுமுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து, சமூகநீதியைக் காக்கும் மகத்தான போரை, முதலமைச்சர் தலைமையேற்று வழிநடத்துவதாக கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுததப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மற்றும் கல்லூரிகள், உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட உள்ள நிலையில், திரையரங்குகள், உணவகங்களில் 50% இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கை அமல்படுத்தியதூக மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய பாதிப்பு 8,981 ஆக இருந்த நிலையில் இன்று 10 ஆயிரத்தை கடந்தது
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு கால பூஜைகள் தற்போது நடந்து வருகிறது. இதற்காக தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் மண்டல, மற்றும் மகரவிளக்கு காலத்தில் தேவசம்போர்டின் மொத்த வருமானம் தற்போது,100 கோடி ரூபாயை கடந்துள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவக்கம்- முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை தொட்டு வரும் நிலையில, டெல்லியில் இன்று மேலும் 20,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கொரோனாவுக்கு 48,178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வைப்பாற்றில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.
நடிகர் சிலம்பரசனுக்கு 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்க உள்ளதாக வேல்ஸ் பல்கலைகழகம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 11ஆம் தேதி சிம்புவுக்கு 'கவுரவ டாக்டர் ' பட்டம் வழங்கப்பட உள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு சென்னையில் நாளை 16 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் தேவையின்றி வெளியே சுற்றினால் வழக்குப்பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் உச்சத்தை தொட்டு வரும் நிலையில, கேரளாவில் மேலும் 5,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு 31,098 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
வாணியம்பாடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தொடக்க உரையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசு கொண்டு வந்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை மாநில ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காதது மாநில அரசின் உரிமையையும், சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் கேள்விக்குறியாக்குவதாக தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கான நாளை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அழைப்பு பத்திரிக்கை உள்ளிட்டவற்றை காண்பித்தால் அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், மணிப்பூரில் பிப்.27ஆம் தேதி முதல் கட்ட தேர்தல், மார்ச் 3ஆம் தேதி 2ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10ல் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் பிப்ரவரி 14ல் இரண்டாம் கட்ட தேர்தலும், 20ல் மூன்றாம் கட்ட தேர்தலும் நடைபெறும். மேலும், பிப்.23ஆம் தேதி 4ஆம் கட்ட தேர்தல், பிப்.27ஆம் தேதி 5ஆம் கட்ட தேர்தல், மார்ச் 3ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 5 மாநிலங்களிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் உரிமைகள் பற்றியும், எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
தேர்தலை காரணம் காட்டி, மதுவோ அல்லது பணமோ அன்பளிப்பாக வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
ஆன்லைன் மூலமாக வேட்புமனு தாக்கல் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது என்றும், 80 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்
கெராோனா, ஒமிக்ரான் பரவும் சூழலில் தேர்தல் நடத்துவது மிகவும் சவாலானது. கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தேர்தல் நடத்தப்படும். பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்துவதுதான் தேர்தல் ஆணையத்தின் முதல் முன்னுரிமை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கோவை ஆகிய 8 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தது சட்ட நடவடிக்கை தானே தவிர, அதில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று, உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையின்போது தமிழக அரசு பதிலளித்தது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தேதி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள், கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் தொகுப்பு விநியோகத்தின்போது ஏதேனும் தவறு அல்லது முறைகேடு நடந்தால், 180059935430 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஏற்கெனவே 22 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 52 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் பைகளை கொண்டு வந்து பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம். பைகள் இல்லாமல் பரிசுத் தொகுப்பை வாங்கும் பயனாளிகளுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரவுடி சி.டி.மணியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து, சி.டி.மணியின் தந்தை பார்த்தசாரதி தொடர்ந்த வழக்கில் காவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமரின் பஞ்சாப் பயணத்தின்போது, பாதுகாப்பு மீறல் நடந்ததாக குற்றம் சாட்டுவது, இது ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ? என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்குடன், மாநில காங்கிரஸ் அரசை கலைக்க, மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளால், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பைகள் தைக்கும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் மக்கள் பைகள் இன்றி பரிசு தொகுப்புகளை பெற்றுக் கொள்ளலாம். பைகள் இன்றி தொகுப்பு வாங்கும் மக்களுக்கு தனியே டோக்கன் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு யூனிட் ஆற்று மணல் விலை ரூ.1,000 என நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. வேண்டியவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து மணல் பெறலாம். முறைகேடுகளை தடுக்கும் வகையில் ஆற்று மணல் விற்பனை, 24 மணி நேரமும் சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.
நாளை முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 63 சார்பதிவளார் அலுவலகங்களில் நேற்று முதல் ஆதார் எண் மற்றும் கருவிழி ரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தவறானவர் ஒருவர், போலியாக ஆள் மாறாட்டம் செய்து பத்திரப் பதிவு செய்ய முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் ரயில்களில் 2 டோஸ் செலுத்தியவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக்வசம் அணியாவதற்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை மறுநாள் முதல் தற்காலிகமாக நிறுத்தப்ப்பட உள்ளது. பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும் . இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு. கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 10,11, மற்றும் 12 தேதிகளில் நடைபெற இருந்த கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார்
இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு விலக்கு பெற சட்ட ரீதியாக நடவடிக்கை வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் வகையில் உள்ளது. நீட் தேர்வு அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்தை சீரழிப்பதாகவும் உள்ளது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் இருப்பது சட்டமன்ற மாண்பை சிதைக்கும் செயல் என்று அமைச்சர் பேச்சு
மாநில அரசு நிதியில் இருந்து நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. பள்ளிக்கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது நீட் தேர்வு என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு
நீட் விலக்கு தொடர்பாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களும் நீட் தேர்வுக்கு எதிராக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா 3-ம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தேவை இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து பயணிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட், உ.பி., பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறுவது குறித்தும், தேர்தல் தேதிகள் குறித்தும் இன்று பிற்பகல் 03.30 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
நீட் தேர்வு ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
பாஜக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நீட் விலக்கு தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளார்
தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில உரிமையும், சட்டமன்றத்தின் அதிகாரமும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. திமுக சார்பில் துரைமுருகன், அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விசிக சார்பில் சிந்தனைச் செல்வன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் பங்கேற்பு
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி, அவரது உறவினர், நீதிமன்ற ஊழியர்கள் 7 பேர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.128 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,492க்கும், சவரன் ரூ.35,936-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 40 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 285 பேர் உயிரிழந்துள்ளதார். தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 9.28 ஆக உள்ளது. தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 ஆக உள்ளது. அதே போல், ஒமிக்ரான் பாதிப்பு 3,071 ஆக அதிகரித்துள்ளது.
வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.