Advertisment

Tamil News Highlights: போர் காரணமாக காசாவிற்கு நிறுத்தப்பட்ட குடிநீரை மீண்டும் விநியோகிக்க இஸ்ரேல் அரசு ஒப்புதல்

இன்று நடைபெறும் செய்திகளை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளுங்கள்.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
di

News updates

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

 பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.  

Tamil News Updates

இஸ்ரேல் தாக்குதலில் 2540 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம், மோதலின் 9-வது நாளில் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியதில் இருந்து குறைந்தது 2,450 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 9,200 பேர் காயமடைந்ததாகவும் கூறியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் கைது

ஆட்டோ டிரைவரை தாக்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் செயலாளர் முத்துக்குமாரை போலீசார் கைதுசெய்தனர்.

எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் சவுமியாவை சந்தித்து இஸ்ரோ தலைவர் ஆறுதல்

மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் சவுமியாவை சந்தித்து இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் ஆறுதல் கூறினார்

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

ஹரியானா, ஃபரிதாபாத்தில் மாலை 4.08 மணிக்கு 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தாக்கம் காரணமாக டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது

இஸ்ரேல் போர்; 24 தமிழர்கள் மீட்பு

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், 24 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 24 தமிழர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்

தோழமை கட்சியையே விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை - திருநாவுக்கரசர்

தமிழ்நாட்டிலேயே பெரிய கட்சி தி.மு.க.தான். தி.மு.க.,வை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. தோழமை கட்சியையே விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை என புதுக்கோட்டையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்

கன்னியாகுமரியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து

கனமழையால் கன்னியாகுமரி தோப்புவிளை பகுதியில் ராட்சத பாறை உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ராட்சத பாறை பெயர்ந்து விழுந்து வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை

'லியோ' டிக்கெட் ரூ.450-க்கு விற்பனை

கோவை கே ஜி சினிமாஸ் திரையரங்கில் "காம்போ பேக்"-காக ரூ.450-க்கு லியோ திரைப்பட டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்களும் பொதுமக்களும் உணவு பொருட்கள், குளிர்பானங்களுடன் காம்போவாக வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

விஜய்யை கண்டு திமுக பயப்படுக்கிறது - கடம்பூர் ராஜூ  

நடிகர் விஜய்யை கண்டு பயப்படுக்கிறது திமுக. நடிகர்கள் இடையே அரசு பாரபட்சம் பார்க்க கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் பாரபட்சமாக நடக்கவில்லை.  சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த பின் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது சரியல்ல. திரைத்துறை தற்போது முடங்கியுள்ளதாக திரைதுறையினர் கூறுகின்றனர்- கடம்பூர் ராஜூ  

வட காசா மக்களுக்கு இஸ்ரோல் கடைசி எச்சரிக்கை

காசா நேரப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் வெளியேற இஸ்ரேல் கடைசி எச்சரிக்கை. வட காசா மக்கள் வெளியேற பாதுகாப்பான பாதை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படை

14 மாவட்டங்களில் கனமழை 

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

விடாமுயற்சி பட கலை இயக்குனர் மிலன் மரணம்

விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் மரணம். வேலாயுதம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு படங்களில் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார் அஜர்பைஜான் நாட்டில் நடந்த படப்பிடிப்பின்போது மிலன் மாரடைப்பால் உயிரிழந்தார். 

வாடகை வாகனங்கள் வேலை நிறுத்தம்

சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் வாடகை வாகனங்கள் வேலை நிறுத்தம். டூ வீலர் டாக்சிகளை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை

தி.மலை விபத்து- ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

திருவண்ணாமலை, செங்கம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி

5 கிராம் குட்கா வைத்திருந்தாலும் நடவடிக்கை

போதை பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த சென்னை காவல்துறை தீவிரம். கையில் 5 கிராம் குட்கா வைத்திருந்தால் கூட நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு. குட்கா வாங்கிய இடம் வரை கூண்டோடு சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவு

கஞ்சாவை தொடர்ந்து குட்கா, பான் மசாலா, கூல் லிப் போன்றவற்றை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை. பள்ளி, கல்லூரிகள் அருகே நடைபெறும் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த போலீசாருக்கு உத்தரவு

குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை காலை வணக்க கூட்டத்தில்  குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி ஏற்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.  இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை 

வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்

நுக்பா பிரிவின் தளபதி பலி 

நுக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா, வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்

குமரியில் வீடுகளில் சூழ்ந்த மழைநீர்

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை. கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட
ஏலாக்கரை, பாலாமடத்தில் வீடுகளில் மழைநீர். 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் தவிப்பு

அண்ணா பல்கலை. யில் அப்துல்கலாம் சிலை திறப்பு 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.21.95 லட்சம் மதிப்பீட்டில் 7 அடி உயர அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச தி.மு.கவுக்கு தகுதி இல்லை

மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச தி.மு.கவுக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் தங்களது கட்சியை வளர்ப்பதை விட திமுகவை  வளர்ப்பதில் குறிக்கோளாக உள்ளது- தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்  அண்ணாமலை

7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, கார் மீது லாரி மோதி பயங்கர விபத்து 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.21.95 லட்சம் மதிப்பீட்டில் 7 அடி உயர அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் வரும்19ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் 

3 மாநிலங்கள்: காங்கிரஸ்  கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு

 சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியீடு . மிசோரம், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கு நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல்.

அமெரிக்கா அனுப்பிய 2வது விமானம் தாங்கி போர்க்கப்பல்

இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு உதவும் விதமாக அமெரிக்கா 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது.

 அமெரிக்க அதிபர் பாலஸ்தீனிய அதிபர் மஹமவுத் அப்பாஸ் தொலைபேசியில் உரையாடல்

அமெரிக்க அதிபர் பைடனுடன், பாலஸ்தீனிய அதிபர் மஹமவுத் அப்பாஸ் தொலைபேசியில் உரையாடல். காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களைத் திறப்பது, மருந்துகள், தண்ணீர், மின்சாரம், எரிபொருளை காசாவிற்குள் அனுமதிப்பது குறித்து வலியுறுத்தல்.

இஸ்ரேல் - காசா விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு: ரஷ்யா கோரிக்கை

இஸ்ரேல் - காசா விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கோரிக்கை. பொதுமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு ரஷ்யா கண்டனம்

ஆபரேஷன் அஜய் : 274 இந்தியர்கள் டெல்லி வருகை 

ஆபரேஷன் அஜய் - இஸ்ரேலில் இருந்து 274 இந்தியர்களுடன் டெல்லி வந்த 4வது விமானம் . இஸ்ரேல் போர் காரணமாக ஆபரேஷன் அஜய் மூலம் நாடு திரும்பும் இந்தியர்கள்.

 சுங்கத்துறை தேர்வில் மோசடி: வாக்குமூலம்

ரயிலில் வந்த போது அரியானாவை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் கொடுத்த ஐடியாவின் பேரில் மோசடியை அரங்கேற்றினோம். பிடிபட்ட வடமாநிலத்தை சேர்ந்த 28 பேரும். போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம்.

சைக்கிள் பந்தயம்: உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்

 கானாத்துர் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை சைக்கிள் பந்தயம். விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார். 4 பிரிவாக நடைபெறும் பந்தயத்தில். 1125 பேர் பங்கேற்பு

 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர். மயிலாடுதுறை, நாகை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் விடிய விடிய மழை 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்த மழை. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவில் கனமழை.

 இந்திய அணி: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து.  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

 தரைவழி படையெடுப்பு - இஸ்ரேல் தயார்

காசா மீதான தரைவழி படையெடுப்புக்கு இஸ்ரேல் தயார். படையினரை நேரில் சந்தித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. படையெடுப்புக்கு தங்களது படை தயாராக இருப்பதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நெதன்யாகு பதிவு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment