கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் இன்று பதவியேற்க உள்ளனர். பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி. ₹2000 நோட்டுகள் நிறுத்தம் குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சனம்
”2016 நவம்பரில் செய்த மிகப்பெரிய பிழையை, கொஞ்சம் கொஞ்சமா சமாளிக்க பாக்குறாங்க” செப்டம்பர் 30ம் தேதி முதல் ₹2,000 நோட்டுகளின் புழக்கத்தை குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது குறித்து, ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து!
கிருஷ்ணகிரி மாணவன் க்ரித்தி வர்மாவுக்கு கைகளை பொருத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு இரு கைகளை இழந்த மாணவன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை நம்பிக்கை ஒளியென மின்னிடும் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பல கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும் – முதல்வர்
பயனாளர்களுக்கு ₨2,000 நோட்டுகளை வழங்க வேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ள ரிசர்வ் வங்கி மே 23ம் தேதி முதல் ஒரே நேரத்தில் ₨20 ஆயிரம் வரை மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
ஐ.பி.எஸ் மற்றும் காவல் உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு ஆவடி மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம், திருப்பத்தூர் எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் நியமனம் நாகை எஸ்.பி.யாக ஹர்ஷ் சிங், ஈரோடு எஸ்.பி.யாக ஜவஹர், நாமக்கல் எஸ்.பி.யாக ராஜேஷ் கண்ணன், வேலூர் எஸ்.பி.யாக மணிவண்ணன் நியமனம் செங்கல்பட்டு எஸ்.பி.யாக சாய் பிரநீத், திருப்பூர் எஸ்.பி.யாக சாமிநாதன், விழுப்புரம் எஸ்.பி.யாக சஷாங்க் சாய் நியமனம்
அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம் என்பதை மாணவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர்…!” – பொதுத்தேர்வு முடிவுகள், அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுகிறது, ஆனால் அது தொடர்ந்து செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், செப்டம்பர் 30, 2023 வரை ரூ.2,000 நோட்டுகளுக்கு டெபாசிட் மற்றும் மாற்றும் வசதியை வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா, வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமர் முல்சந்தனி உள்ளிட்டோரின் சொத்துகள் முடக்கம். மும்பை, சேவா விகாஸ் கூட்டுறவு வங்கியில் ரூ. 429 கோடி பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை. புனேவில் உள்ள 47 அசையா சொத்துகளும், ₨122.35 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கம்
ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி ஹிரோஷிமாவில், புலம்பெயர் இந்தியர்களுடன் உரையாடினார்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தண்டனை கைதி முருகன் மீது பெண் சிறைக் கைதி ஒருவரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக வழக்குப் பதியப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. போதிய சாட்சியங்கள் இல்லை எனக் கூறி அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகின. இந்தப் பொதுத்தேர்வில் 90.94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் தேர்ச்சி சதவீதம் 0.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ் பாடத்தில் 9 பேர் 100க்கு 100 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
ஓபிஎஸ் அணி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், அதனை தடுக்க தொண்டர்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இன்று வெளியான 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 9 பேர் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இன்று அதிகாலை 10ஆம் வகுப்பு மதிப்பெணணும், மதியம் 11ஆம் மதிப்பெணணும் வெளியானனது.
2022-23 ஆம் ஆண்டிற்கான PNBயின் நிகர லாபம் 27 சதவீதம் சரிந்து ரூ.2,507 கோடியாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.3,457 கோடியாக இருந்தது.
ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுபாஷ் மஹரியா பாஜகவில் இணைந்தார்.
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் அறிவியல் ஆய்வு நடத்த நீதிமன்றம் யோசனை கூறிய நிலையில், மத்திய-மாநில அரசுகள் அறிவியல் ஆய்வை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன.
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகி, புயலாக வலுப்பெற்ற மோக்கா புயல் தாக்குதலில் மியான்மரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்: “ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் வெற்றிக்குக் காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சமூகநலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தேன்.தொடர்ந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் எனக்கு மனவேதனை அளித்தது.… pic.twitter.com/rktosSFlrj
— M.K.Stalin (@mkstalin) May 19, 2023
நடிகர் சூர்யா ட்வீட்: “ஜல்லிக்கட்டு நம் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மாநில அரசுக்கு எனது வாழ்த்துகள்; ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலைவணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்: “10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை பெற்றோரு ஊக்கப்படுத்த வேண்டும்; தேர்ச்சி அடையாத 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 முதல் ஜூலை 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: “நான் பொது நிகழ்வில் சரியாகத்தான் பேசுகிறேன். ஆனால், அதை எடிட் செய்து வெளியிடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழாவில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. மம்தா சார்பாக திரிணாமூல் காங்கிரஸ் மக்களவைக் குழு துணை தலைவர் ககோலிகோஷ் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை, தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி தொடங்கியது; 5 நாட்கள் நடைபெறவுள்ள கண்காட்சியில் கண்கவரும் மலர் அலங்காரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலிடெகினிக் கல்லூரிகளில் சேர நாளை (மே 19) முதல் விண்ணப்பிக்கலாம்; சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ்: “80,000க்கும் மேலான மாணவர்கள் அரசு பள்ளியில் தற்போது சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் இல்லை, பெருமையின் அடையாளம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு மாதம் முன்னதாகவே நடைபெற உள்ளது.
“பாலிடெக்னிக் படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்” – உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
பாஜக குழுவினர் வரும் 21ஆம் தேதி ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி மகளிர் அணி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தும்”, என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு.
ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமித்துள்ளார்.
கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
“அனைவருக்கும் எதிர்காலம் சிறந்து புதிய உச்சங்களை தொட எனது வாழ்த்துக்கள்” – ஈ.பி.எஸ்.,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 28ம் தேதி அமெரிக்கா பயணம்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். மேலும் அமெரிக்க வாழ் இந்தியர்களைச் சந்தித்தும் உரையாடவுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பிரசாந்த் குமார் மிஷ்ரா, கே.வி. விஸ்வதான் ஆகியோர் பதவியேற்பு.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டார்.
வெளியிட்டுள்ள பொதுத்தேர்வில் 91.39% மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். இதில், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.66% என்றும், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.16% என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தேவநாதன் பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டார கிராமமக்கள் 14-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
“இந்த இடத்தில் குப்பைக்கிடங்கு அமைத்தால் தூக்கில் தான் தூங்கவேண்டும்”, என்பதை உணர்த்தும் விதமாக தூக்கு போட்டு நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரென்ஹைட் தாண்டியுள்ளது.
வேலூர்: 107.54 F
கரூர் பரமத்தி: 106.70 F
திருத்தணி: 103.28 F
திருப்பத்தூர்: 102.56 F
திருச்சி: 102.38 F
மதுரை: 102.20 F
ஈரோடு: 101.84 F
சேலம்: 101.48 F
பாளையங்கோட்டை: 101.30 F
சென்னை: 101.12 F
நாகப்பட்டினம்: 100.40 F
நாமக்கல்: 100.40 F
தஞ்சாவூர்: 100.40 F