Advertisment

Tamil News Live Updates: மத்தியில் இருக்கும் ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும் : நிதீஷ் குமார்

Tamil Nadu News, Tamil News, Asia Cup 2023, Aditya l1, INDIA alliance Meeting– 1 September 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nithishkumar

பீகார் முதல்வர் நித்தீஷ்குமார்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

அதானி குழுமத்தின் முறைகேடுகள்- ராகுல்காந்தி பேட்டி

அதானி குழுமத்தின் முறைகேடுகள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பிரதமருக்கும், அதானிக்கும் இருக்கும் தொடர்பை 2 பிரபல பத்திரிகைகள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மத்திய அரசு சாதகமாக உள்ளது.

அதானி குழுமம் குறித்து, விசாரணை நடத்திய செபி நற்சான்று கொடுக்கிறது; ஆனால் இதில் பெரிய தவறு இருக்கிறது. அதானி குழுமம் மீதான புகாரை சிபிஐ, அமலாக்கத்துறை ஏன் விசாரிக்கவில்லை.

அதானி குழும முதலீடு குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். அதானி குழும முதலீடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும்- மும்பையில் ராகுல்காந்தி பேட்டி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 16:58 (IST) 01 Sep 2023
    மத்தியில் இருக்கும் ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும் : நிதீஷ் குமார்

    இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட்டு வருகிறது" "மத்தியில் இருக்கும் ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும்" - நிதீஷ் குமார்



  • 16:53 (IST) 01 Sep 2023
    அறநிலையத்துறை திட்டவட்டம்

    பழனி முருகன் கோவிலுக்குள் செல்போன், கேமரா பொருத்திய கருவிகளுக்கு விதிக்கபட்ட தடை அக்.1 முதல் அமல் தடையை மீறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை திட்டவட்டம்



  • 16:02 (IST) 01 Sep 2023
    ஆதித்யா L1-க்கு பிறகு, அடுத்த இலக்கு ககன்யான் திட்டம் : இஸ்ரோ தலைவர் சோமநாத்

    ஆதித்யா L1-க்கு பிறகு, எங்களின் அடுத்த இலக்கு ககன்யான் திட்டம். இதன் பணிகள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும்" -சோமநாத், இஸ்ரோ தலைவர்



  • 16:01 (IST) 01 Sep 2023
    கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை ஏலம் விடும் பணி தொடக்கம்

    சென்னை மாநகர சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் பணிகளை மாநகராட்சி இன்று தொடங்கியது. உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வாகனங்களை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. கள ஆய்வில் 1308 வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது



  • 16:00 (IST) 01 Sep 2023
    இஸ்ரோ தலைவர் சோமநாத் திருப்பதியில் சாமி தரிசனம்

    ஆதித்யா L1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள செங்காலம்மா பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தார் இஸ்ரோ தலைவர் சோமநாத்! நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது ஆதித்யா L1 விண்கலம்!



  • 15:59 (IST) 01 Sep 2023
    நித்தியானந்தாவுக்கு ராம் நகர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு

    நித்யானந்தா விவகாரத்தில் கர்நாடக சிஐடி போலீசாரிடம் கூடுதல் விவரங்களை கேட்டது இன்டர்போல் போலீஸ். பாலியல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு ராம் நகர் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு



  • 15:58 (IST) 01 Sep 2023
    பிரபல மலையாள நடிகை அபர்ணா வீட்டில் தற்கொலை

    பிரபல மலையாள நடிகை அபர்ணா வீட்டில் தற்கொலை மலையாளத்தில் கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர்



  • 15:58 (IST) 01 Sep 2023
    தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி பேட்டி

    சீமானுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சீமான் சொல்வது போல தேர்தலுக்கும், புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை - தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி



  • 14:50 (IST) 01 Sep 2023
    நடிகை விஜயலட்சுமி சீமான் மீது புகார்: மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்!

    திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜரானார் நடிகை விஜயலட்சுமி. சீமான் மீது புகார் கூறியது குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய முடிவு. தன்னை நீதிமன்றம் செல்ல விடாமல் சீமான் தடுத்துவிட்டதாக விஜயலட்சுமி புகார் கொடுத்து இருந்தார்.



  • 14:47 (IST) 01 Sep 2023
    இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் ஸ்டாலின்!

    'இந்தியா' கூட்டணிக்கான 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ், சரத் பவார், என்.சி.பி, மு.க.ஸ்டாலின், தி.மு.க, அபிஷேக் பானர்ஜி, டி.எம்.சி, சஞ்சய் ராவத், சிவசேனா, தேஜஸ்வி யாதவ், ஆர்.ஜே.டி, லல்லன் சிங், ஜே.டி.யு, ராகவ் சத்தா, ஆம் ஆத்மி, ஹேமந்த் சோரன், ஜே.எம்.எம், ஜாதவ் அலிகான், எஸ்.பி, டி.ராஜா, சி.பி.ஐ, உமர் அப்துல்லா, என்.சி மெகபூபா முப்தி, பி.டி.பி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருப்பது குறிப்பிடக்கது.



  • 14:34 (IST) 01 Sep 2023
    காவிரி விவகாரம்: தமிழ்நாடு அரசு முறையீடு!

    காவிரி வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.

    உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன், தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் முகுல் ரோத்தகி, உமாபதி ஆகியோர் முறையீடு செய்தனர்.

    காவிரி வழக்கு இன்றைய தினம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், தமிழ்நாடு அரசு முறையீடு செய்துள்ளது.



  • 14:27 (IST) 01 Sep 2023
    முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றம்!

    ஆதிதிராவிடர் நல விடுதிகளில் பணிபுரியும் 98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள், முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றம். முழுநேர துப்புரவு பணியாளர்களாக மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் நிர்ணயித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

    தருமபுரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

    "சிறப்பு காலமுறை ஊதியம் நிலை-2 ரூ.4100, 12500 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை". 98 தூய்மை பணியாளர்களை முழு நேர தூய்மை பணியாளர்களாக மாற்றிய தமிழ்நாடு அரசு, இதற்காக ரூ.39, 91,344 நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.



  • 14:14 (IST) 01 Sep 2023
    15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சி, நாமக்கல், கரூர், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.



  • 14:07 (IST) 01 Sep 2023
    ஜெயிலர் வெற்றி- ரஜினிக்கு பரிசாக வந்த BMW X7 கார்!

    ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் ரூ. 1.50 கோடி மதிப்புள்ள BMW X7 காரை பரிசாக அளித்தார்.



  • 14:05 (IST) 01 Sep 2023
    காவலாளி துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம்!

    சென்னை சேத்துப்பட்டில், ஏ.டி.எம் மைய காவலாளி துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமானார்.

    சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை 7வது அவென்யூவில் ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்பும் கம்பெனியில் சம்பவம். பணியில் இருந்த ராணாசிங், தனது டபுள் பேரல் துப்பாக்கியை சுத்தம் செய்தபோது, தவறுதலாக அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்தது



  • 13:43 (IST) 01 Sep 2023
    அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் இ.பி.எஸ் கேவியட் மனு தாக்கல்!

    அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 12:49 (IST) 01 Sep 2023
    சந்திரயான் - 3 வெற்றி குறித்த கட்டுரை அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை

    சந்திரயான் - 3 வெற்றி குறித்த கட்டுரை அடுத்த கல்வியாண்டில் பாடத்திட்டங்களில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் இது தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள உயர் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்



  • 12:10 (IST) 01 Sep 2023
    என் மீதான புகார் குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்

    தேர்தல் நேரத்தில் என் பணிகளை முடக்கும் வகையில் வீண் பழி சுமத்தப்படுகிறது என் மீதான புகார் குறித்து விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்து சீமான் விளக்கம்



  • 11:28 (IST) 01 Sep 2023
    கவுதம சிகாமணிக்கு எதிராக வழக்கு: சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

    அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்ட வழக்கு. சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு 2-வது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைப்பு செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, கவுதம சிகாமணிக்கு எதிராக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது



  • 10:46 (IST) 01 Sep 2023
    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 10:43 (IST) 01 Sep 2023
    மாஜிஸ்திரேட் முன்பு விஜய லட்சுமியை ஆஜர்

    திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு விஜய லட்சுமியை ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வர உள்ளனர்.



  • 10:43 (IST) 01 Sep 2023
    சவரனுக்கு ரூ. 80 குறைந்த தங்கம் விலை

    சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.44,280-க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.5,535-க்கும் விற்பனையாகிறது.



  • 10:02 (IST) 01 Sep 2023
    2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கு மாற்றம்

    தமிழ்நாடு தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல் இருவரும் மத்திய அரசுப்பணிக்கு செல்கின்றனர்.

    மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சக செயலாளராக கிருஷ்ணனும், தொலைத்தொடர்புத்துறை செயலாளராக நீரஜ் மிட்டலும் நியமனம்



  • 10:01 (IST) 01 Sep 2023
    இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக குகேஷ் அறிவிப்பு

    சர்வதேச பட்டியலில் குகேஷ் 8வது இடம், விஸ்வநாதன் ஆனந்த் 9வது இடம், பிரக்ஞானந்தா 19வது இடத்தில் உள்ளனர்.



  • 10:01 (IST) 01 Sep 2023
    விஜய லட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்த முடிவு

    சீமான் மீதான புகாரில் விஜய லட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நேற்று 8 மணி நேரம் நடந்த விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜய லட்சுமி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விஜய லட்சுமி அளித்த புகாரில் 2011ம் ஆண்டு ஏற்கனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது



  • 10:00 (IST) 01 Sep 2023
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் செப்.4ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 10:00 (IST) 01 Sep 2023
    திரௌபதி முர்மு ஒப்புதல்

    டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயரை, பிரதமர் அருங்காட்சியகம் என மாற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.



  • 10:00 (IST) 01 Sep 2023
    இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராக ஜெய வர்மா சின்ஹா நியமனம்

    இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் ஜெய வர்மா சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே துறையின் 105 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைமை பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை



  • 09:01 (IST) 01 Sep 2023
    தக்காளி விலை கடும் சரிவு: கிலோ ரூ.20க்கும் விற்பனை

    சென்னை கோயம்பேட்டில் தக்காளி மொத்த விலையில் ரூ.10-க்கும், சில்லறை விலையில் ரூ.20க்கும் விற்பனையாகிறது.

    கடந்த மாதம் கிலோ ரூ.200க்கு விற்பனையான நிலையில், தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது.



  • 08:16 (IST) 01 Sep 2023
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 8, 500 கன அடியாக அதிகரித்துள்ளது.



  • 08:14 (IST) 01 Sep 2023
    சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமல்

    தமிழ்நாடு முழுவதும் உள்ள திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உட்பட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    5- ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.



  • 08:08 (IST) 01 Sep 2023
    வணிக சிலிண்டர் விலை குறைவு

    வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ. 200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் ரூ. 157.50 பைசா குறைந்துள்ளது.

    19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1,852.50-யில் இருந்து ரூ. 1,695க்கு விற்பனையாகிறது



  • 08:00 (IST) 01 Sep 2023
    ஆதித்யா எல்-1 கவுன்டவுன் இன்று தொடக்கம்

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவுவதற்கான கவுன்டவுன் இன்று தொடங்குகிறது



  • 07:59 (IST) 01 Sep 2023
    இந்தியா கூட்டணி 2-வது நாளாக மும்பையில் இன்று ஆலோசனை

    மும்பையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் 2-வது நாள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

    மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் நாள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் இலச்சினை வெளியிடப்பட உள்ளது.



  • 07:59 (IST) 01 Sep 2023
    பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர் மோடி

    உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவையும் அவரது குடும்பத்தினரையும் பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    இந்த சந்திப்பு குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக உள்ளது. என்னையும், எனது பெற்றோரையும் ஊக்கப்படுத்திய பிரதமருக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.



  • 07:58 (IST) 01 Sep 2023
    நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா, விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு

    விக்ரம் லேண்டரின் “RAMBHA LP” அறிவியல் ஆய்வு கருவியின் ஆய்வு முடிவுகளை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பது உறுதி செய்துள்ளதாகவும், ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.



Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment