Advertisment

Tamil News Highlights: காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 20 August 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SC

உச்ச நீதிமன்றம்

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 456-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியா- அயர்லாந்து டி20

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

அயர்லாந்து, டெப்லினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:18 (IST) 20 Aug 2023
    இ.பி.எஸ் என்ன புரட்சி செய்தார்? மனோஜ் பாண்டியன் கேள்வி

    புரட்சி என்றால் அது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மட்டும் தான். புரட்சி தமிழர் பட்டம் வழங்கும் அளவுக்கு இ.பி.எஸ் என்ன புரட்சி செய்தார்? என ஓ.பி.எஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 20:39 (IST) 20 Aug 2023
    நீட் தடுப்பு சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை - ஸ்டாலின்

    நீட் தடுப்பு சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மேலும் ஒரு உறுதியை தந்துள்ளது. என உண்ணாவிரத போராட்டத்தை சிறப்பாக நடத்தியதாக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்



  • 20:11 (IST) 20 Aug 2023
    ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    சென்னை, வேப்பேரியில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துவங்கியது



  • 19:57 (IST) 20 Aug 2023
    அ.தி.மு.க மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றம்

    மதுரை அ.தி.மு.க மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக்க தீர்மானம், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் வழிக்கல்வி கொண்டு வர தீர்மானம். புதுச்சேரியை மாநிலமாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல், திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



  • 19:27 (IST) 20 Aug 2023
    எடப்பாடிக்கு புதிய பட்டம்

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க பொன்விழா எழுச்சி மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சி தமிழர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது



  • 19:27 (IST) 20 Aug 2023
    எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.,வை அழிக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி

    மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான். தொடங்கிய ஆறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அதிமுக தான். எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என எடப்பாடி பழனிசாமி பேச்சு



  • 18:47 (IST) 20 Aug 2023
    மகளிர் கால்பந்து உலகக்கோப்பை - ஸ்பெயின் சாம்பியன்

    முதல் முறையாக மகளிர் கால்பந்து உலகக்கோப்பையை வசப்படுத்தி ஸ்பெயின் வரலாறு படைத்தது. பரபரப்பான இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது



  • 18:44 (IST) 20 Aug 2023
    நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க உண்ணாவிரத போராட்டம் நிறைவு

    நீட் தேர்வுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டம் நிறைவு



  • 18:10 (IST) 20 Aug 2023
    திமுக போராட்டத்துக்கு ஆதி தமிழர் பேரவை ஆதரவு

    திருநெல்வேலியில் ஒண்டி வீரன் சிலைக்கு ஆதித் தமிழர் பேரவையினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதியமான், “ஒண்டி வீரன் சிலை அமைய கருணாநிதி முக்கிய காரணமாக இருந்தார்.

    நீட் தேர்வினால் பல்வேறு மாணவர்கள் மரணித்துள்ளனர். ஆகவே அந்தத் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கிறோம்” என்றார்.



  • 18:01 (IST) 20 Aug 2023
    நீட் ரத்து செய்யப்படும்- தயாநிதி

    “வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை போல.. நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற் நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில், மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் பேசினார்.



  • 17:22 (IST) 20 Aug 2023
    தற்கொலை அல்ல; கொலை: நீட் எதிர்ப்பு போராட்டத்தில் உதயநிதி

    நீட் தேர்வுக்கு எதிராக நடந்தது தற்கொலை அல்ல, கொலை என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 17:12 (IST) 20 Aug 2023
    அதிமுக மாநாடு: சிறப்பு மலரை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி!

    அதிமுக மாநாட்டின் சிறப்பு மலரை வெளியிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

    தொடர்ந்து, அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



  • 17:02 (IST) 20 Aug 2023
    அனுமன் கோவிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

    அயோத்தியில் உள்ள ஹனுமன் ஹார்கி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார்.



  • 16:18 (IST) 20 Aug 2023
    நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கண் கலங்கிய உதயநிதி

    நீட் தேர்வுக்கு எதிராக திமுக இன்று போராட்டம் நடத்திவருகிறார். அப்போது மாணவி அனிதாவின் பெயரை கேட்ட அந்த நொடி மேடையிலேயே அமைச்சர் உதயநிதி கண்கலங்கினார்.



  • 15:58 (IST) 20 Aug 2023
    அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு

    நடிகர் ரஜினிகாந்த் அகிலேஷ் யாதவ்வை இன்று சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், “9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அகிலேஷ் யாதவுடன் நட்பு ஏற்பட்டது ; நாங்கள் செல்போனில் பேசிக்கொள்வோம்; 5 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்தபோது அவர் இங்கு இல்லை; அதனால் இப்போது அவரை சந்தித்தேன்” என்றார்.



  • 15:48 (IST) 20 Aug 2023
    திருப்பதி தரிசன டிக்கெட் வெளியீடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக, நவம்பர் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதளபாத பத்மாராதனை சேவைகளுக்கான ஆன்லைன் நேற்று காலை 10 மணி முதல் 21-ந் தேதி காலை 10 மணி வரை பதிவு செய்யலாம்.



  • 15:39 (IST) 20 Aug 2023
    ஆக.23ல் நிலவில் தரையிறக்கும் விக்ரம் லேண்டர்

    ஆகஸ்ட் 23ம் தேதி (புதன்கிழமை) மாலை நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குகிறது.

    இந்த நிலையில் தற்போது, விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

    நிலவை நெருங்கும் வகையில் 2வது முறையாக சுற்றுப்பாதை உயரம் 25KM x 134KM என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.



  • 15:38 (IST) 20 Aug 2023
    ஆக.23ல் நிலவில் தரையிறக்கும் விக்ரம் லேண்டர்

    ஆகஸ்ட் 23ம் தேதி (புதன்கிழமை) மாலை நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குகிறது.

    இந்த நிலையில் தற்போது, விக்ரம் லேண்டரின் இறுதி வேக குறைப்பு வெற்றிகரமாக நடைபெற்றது.

    நிலவை நெருங்கும் வகையில் 2வது முறையாக சுற்றுப்பாதை உயரம் 25KM x 134KM என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.



  • 15:03 (IST) 20 Aug 2023
    ரஷ்ய விண்கலம் லூனா 25 திட்டம் தோல்வி

    நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா லூனா 25 என்ற செயற்கைக் கோளை 47 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணில் செலுத்தியது.

    இந்த செயற்கைகோள் நிலவில் விழுந்து நொறுங்கியதால் திட்டம் தோல்வியில் முடிந்தது.



  • 14:51 (IST) 20 Aug 2023
    மாணவர்களின் நம்பிக்கையை குலைக்கும் உண்ணாவிரதம் - தமிழிசை சௌந்தரராஜன்

    தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்: “உண்ணாவிரதம் என்ற பெயரில் மாணவர்களின் நம்பிக்கையை தி.மு.க-வினர் குலைக்கின்றனர். நீட் தேர்வையும் மாணவர்களையும் வைத்து அரசு ஆதாயம் தேட பார்க்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.



  • 14:00 (IST) 20 Aug 2023
    அ.தி.மு.க மாநாட்டுக்கு பல கோடி செலவு பண்ணி ஆட்கள திரட்ட பாக்குறாங்க - டி.டி.வி தினகரன்

    அ.தி.மு.க மாநாடு குறித்து டிடிவி தினகரன்: “அ.தி.மு.க மாநாட்டுக்கு பல கோடி செலவு பண்ணி ஆட்கள திரட்ட பாக்குறாங்க; ஆனா, வெறும் வண்டிதான் வரும் ஆட்கள் வரப்போறதில்ல” என்று விமர்சித்துள்ளார்.



  • 12:54 (IST) 20 Aug 2023
    ரஜினியை சந்தித்தது குறித்து சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் எக்ஸ் பதிவு

    நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து உ.பி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தனது எக்ஸ்பக்கத்தில், “இதயங்கள் சந்தித்த பொழுது தழுவிக் கொண்டன. மைசூரில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது ரஜினிகாந்தை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.



  • 11:52 (IST) 20 Aug 2023
    நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டியது ஜனாதிபதிதான் - ஸ்டாலின்

    திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு: “நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டியது குடியரசுத் தலைவர்தான். அதிகாரமே இல்லை என்றாலும் மசோதாவை அனுமதிக்க மாட்டேன் என்றார் ஆளுநர். நீட்-க்கு எதிராக கொண்டுவந்த தீர்மானத்தை அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. நீட் தேர்வால் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராகும் கனவு பறிக்கப்படுகிறது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று கூறினார்.



  • 11:52 (IST) 20 Aug 2023
    சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு

    உத்தரப் பிரதேசம் முன்னாள் முதலமைச்சர் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.



  • 11:46 (IST) 20 Aug 2023
    உண்ணாவிரதப் போராட்டம்: நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் முகமூடி அணிந்து பங்கேற்ற தி.மு.க-வினர்

    நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தி.மு.க நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில், தி.மு.க-வினர் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் முகமூடி அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.



  • 11:41 (IST) 20 Aug 2023
    ராஜீவ் காந்தி பிறந்தநாளில் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய காங். தலைவர்கள்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின்

    பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



  • 11:15 (IST) 20 Aug 2023
    ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராக இருந்து வருகிறது தி.மு.க - ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு: “அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தையும் திமுக ஆதரித்தது. ஆளுநரின் போக்கைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடக்கிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே தி.மு.க இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.



  • 11:00 (IST) 20 Aug 2023
    ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்

    லடாக் விபத்தில் ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். துயர்மிகு இந்த நேரத்தில் என் எண்ணங்கள் உயர்நீத்த வீரர்களின் குடும்பங்களுடன் உள்ளது.

    விபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்- ஆளுநர் ஆர்.என்.ரவி



  • 10:49 (IST) 20 Aug 2023
    மாணவர்கள் உயிரிழப்பு - மத்திய அரசுக்கு கவலையில்லை

    நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்கள் பற்றி மத்திய அரசுக்கு கவலையில்லை. ஆதிக்ககாரர்களால் அமல்படுத்தப்பட்ட நீர் தேர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் இது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வால் மருத்துவராகும் வாய்ப்பை இழந்துள்ளனர். தி.மு.க உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு



  • 10:16 (IST) 20 Aug 2023
    விழுப்புரம் திமுக போராட்டம் - பொன்முடி பங்கேற்பு

    விழுப்புரம், நகராட்சி திடலில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்

    உண்ணாவிரத போராட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பு



  • 09:57 (IST) 20 Aug 2023
    மத்திய ஆட்சியை ஒழித்துவிடும் - அமைச்சர் துரைமுருகன்

    "நீட் தேர்வினால் பலர் விடும் சாபம் மத்திய ஆட்சியை ஒழித்துவிடும்" - அமைச்சர் துரைமுருகன்



  • 09:57 (IST) 20 Aug 2023
    நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரத போராட்டம்

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்

    சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு



  • 09:56 (IST) 20 Aug 2023
    இ.பி.எஸ்-க்கு செங்கோல் வழங்கிய தொண்டர்கள்

    எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் வழங்கிய தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியிடம், 5.5 அடி வெள்ளி வேல் வழங்கிய அதிமுக தொண்டர்கள்



  • 09:23 (IST) 20 Aug 2023
    எஸ்.எஸ்.சி தேர்வு அட்டவணை வெளியீடு

    2023ம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)

    தேர்வுகள் குறித்து மேலும் விவரங்கள் பெற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான, https://ssc.nic.in என்ற முகவரியை பயன்படுத்தலாம்.



  • 09:13 (IST) 20 Aug 2023
    அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு தொடங்கியது

    மதுரையில் பிரமாண்டமாக தொடங்கியது அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு

    51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றினார் எடப்பாடி பழனிசாமி

    ஈபிஎஸ் கொடியேற்றியபோது ஹெலிகாப்டர்கள் மூலம் தூவப்பட்ட 600 கிலோ மலர்கள்

    கருப்பு - வெள்ளை - சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன



  • 09:11 (IST) 20 Aug 2023
    ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங். தலைவர்கள் மரியாதை

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை.

    லடாக்கில் பைக் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி பாங்காங் லேக்கில் வைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி படத்திற்கு மலர் தூவி மரியாதை.



  • 08:34 (IST) 20 Aug 2023
    மாநாடு திடலுக்குப் புறப்பட்டார் இ.பி.எஸ்

    மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாடு

    மாநாடு திடலுக்குப் புறப்பட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி



  • 08:19 (IST) 20 Aug 2023
    அதிமுக மாநாடு - லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு

    மதுரை வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது அதிமுக எழுச்சி மாநாடு

    தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்



  • 08:12 (IST) 20 Aug 2023
    சந்திரயான் 3: இறுதி கட்ட வேகக்குறைப்பு வெற்றி

    வெற்றிப்பயணத்தின் இறுதி கட்டத்தில் சந்திரயான் - 3

    சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதி கட்ட வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றி

    சந்திர சுற்றுப்பாதையில் 25x134 கி.மீ. தூரத்தில் உள்ளது - இஸ்ரோ அறிவிப்பு

    வரும் புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவில் தரையிறங்கும் பணி தொடங்கும் என எதிர்பார்ப்பு



  • 08:11 (IST) 20 Aug 2023
    ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர் தூவ ஏற்பாடு

    மதுரை வலையங்குளத்தில் அதிமுக எழுச்சி மாநாடு. 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றுகிறார்.

    அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு. 60 ஏக்கர் பரப்பளவில் அதிமுக மாநாடு திடல் அமைப்பு.

    இ.பி.எஸ் கொடி ஏற்றும் போது 10 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ மலர் தூவ ஏற்பாடு.



  • 08:06 (IST) 20 Aug 2023
    14 தாசில்தார்கள் இட மாற்றம்

    நாமக்கல்லில் 14 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட 14 தாசில்தார்கள் மாற்றம்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment