பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63, காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
28,000 கடந்தது
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 28,000 கடந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் குளிர்
சென்னையில் கடும் குளிர், பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்பட்டது.
பிரதமர் மோடி குறித்த கருத்துகளுக்கு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ராகுல் காந்திக்கு மக்களவைத் தலைமைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
திருச்சி, என்.ஐ.டி. கல்லூரி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த ஆராய்ச்சி மாணவர் மரணமடைந்துள்ளார். கேரளாவை சேர்ந்த பாபு தாமஸ்(37), நீந்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்
SA20 லீக்கில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ப்ரெடோரியா கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் வெற்றி பெற்றது.
மகளிர் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் பிஸ்மா அரை சதம் அடித்தார்.
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் கட்டும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என திரிபுரா தேர்தல் பிரசாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்
திருவாரூர், மேப்பலம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் கிடைக்கிறதா? என சோதனை நடைபெற்றது. 6 வருடங்களாக கிணறு முடியிருந்த நிலையில், ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் மீண்டும் சோதனை நடத்திய நிலையில், பணிகளை நிறுத்துமாறு, விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் பா.ஜ.க தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் கைது செய்யப்பட்டுள்ளார். ஒய் பிரிவு பாதுகாப்பில் இருக்கும் நிலையில் திட்டமில்லாத பயணத்தை மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்
மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு ஏதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை 4-க்கு வந்த, கர்நாடக மாநிலம் கேவியன் தொட்டியைச் சேர்ந்த சந்தோஷ், நாமக்கல்லைச் சேர்ந்த கோகுல் இருவரின் பைகளில் சோதனை செய்தபோது, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
நாட்டின் எல்லையோர கிராமங்கள் வளர்ச்சி பெறுவதை பார்த்து காங்கிரஸிற்கு பயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் பாஜக கிராமங்களில் சாலைகள், தகவல் வளர்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் நகான் என்ற பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
மேகாலயாவில் வெற்றி பெறும்பட்சத்தில் 200 யூனிட் இலவச மின்சாரமும், ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டரும் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் புத்தக நிலையத்தை திறந்து வைத்துப் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன், “நாம் உருவாக்கியது தான் அரசியல், மக்களுக்கானதுதான் அரசியல். என்னுடைய அரசியல் எதிரி சாதி தான். அரசியலில் இருந்து சாதியை நீக்க வேண்டும்” என்று கூறினார்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலியாக, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர், தீவிர வாகன சோதனை செய்ய டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
மாநில எல்லைகள், சுங்க சாவடிகள் மற்றும் வாகன தணிக்கை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபடும் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்றை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே புத்துகோவில் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு கடையில், இறுதி ஊர்வலத்துக்கு பட்டாசு வாங்கியபோது பட்டாசு வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பட்டாசு கடை உரிமையாளர் மற்றும் 5 வயது சிறுவன் என 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து புத்துகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலூர் மாநகராட்சி தேர்தல் முன் விரோதத்தால், பாமக பிரமுகரை, முன்னாள் பாமக பிரமுகர், இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம், வேலூரில் அரங்கேறியுள்ளது. சித்தேரி பகுதியை சேர்ந்த பாமக பிரமுகரான பிரகாஷுக்கும், அண்மையில் பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் பாமக தரப்பில் போட்டியிட பிரகாஷூக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதால், ராமகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்ததால், இருவக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தொரப்பாடியில் இருந்து சாலையில் நடந்து சென்ற பிரகாஷை, பின் தொடர்ந்த ராமகிருஷ்ணன் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரகாஷின் உடலை கைப்பற்றிய போலீசார், கொலை வழக்கில் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆளுநர் ரவி பேச்சு: “அண்ணல் அம்பேத்கர் மிகச் சிறந்த தேசியவாதி, சமூகநீதி, சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்து சிந்தித்தவர்; பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்தவர் அம்பேத்கர். உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ்; மோடி @20 மற்றும் அம்பேத்கர் & மோடி என்ற 2 புத்தகங்களும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது பெருமைக்குரியது.” என்று கூறினார்.
பிரதமர் மோடி குறித்த புத்தகங்களை வெளியிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: “இதுவரை அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமெ எப்சி வந்துள்ளனர். பட்டியலின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் 7% பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர். சமூகநீதி பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால், நடப்பது அதற்கு மாறாக உள்ளது. குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது உள்ளிட்ட செயல்கள் இன்றும் தொடர்கின்றன. கோயிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது உள்ளிட்ட சம்பவங்களும் இன்றும் தொடர்கின்றன.” என்று பேசியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 16ம் தேதி டெல்லி மேயர் தேர்தலுக்கு துணைநிலை ஆளுநர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை முதல் வரும் 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். இம்முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என சபரிமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு தேர்தல் பிரசாரத்துக்கு பின் கும்பகோணம் திரும்பியபோது சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கார் கிருஷ்ணராயபுரம் அருகே விபத்தில் சிக்கியது. யாருக்கும் காயமில்லை.
திருவண்ணாமலையில் ஒரே இரவில் நான்கு ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும், அருகே உள்ள திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏடிஎம்களில் ரூ. 75 லட்சம் கொள்ளை போன சம்பவத்தில், ஆந்திர பதிவெண் கொண்ட காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக போலீசாரின் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
நான் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை; ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன் – திருப்பூரில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி
பாஜகவும், அதிமுகவும் கூட்டணியில் இருக்கிறதா என்ற முடிவுக்கு வரட்டும் கைலாசா மாதிரியான நாட்டை மட்டுமே ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனால் பங்கு பிரித்து கொள்ள முடியும் – அமைச்சர் செந்தில் பாலாஜி
அரசியலமைப்பு சட்டப்படி கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்’- ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்
மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன் நாகாலாந்து ஆளுநராக மாற்றம். சத்தீஸ்கர் ஆளுநர் சுஸ்ஸ்ரீ அனுசுயா மணிப்பூர் ஆளுநராக மாற்றம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தீவிர வாகன தணிக்கை. வாகன தணிக்கையில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள். வில்லரசம்பட்டி, வீரப்பன்சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட 15 இடங்களில் தீவிர வாகன சோதனை
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-ல் நேற்று இரவு, மிஷினை உடைத்து ரூ. 20 லட்சத்திற்கும் மேல் பணம் கொள்ளை. கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்ததால், இயந்திரம் முற்றிலும் எரிந்து நாசம்.
ஈரோட்டில் பிப். 19 மற்றும் 20ம் தேதிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்: அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து 2 நாட்கள் வாக்கு சேகரிக்கிறார்
இலங்கை – தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் இரு நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். இலங்கை சென்று திரும்பிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி
காரும் லாரியும் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள வெங்கானூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து . லாரியின் பின்னால் கார் மோதியதில் இரண்டு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு