Advertisment

Tamil news today : பா.ம.க போராட்டம்: என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்

Tamil Nadu News, Tamil News: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
NLC

என்.எல்.சி

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுண்ணாமலையின் பாதயாத்திரை களாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பழம்பெரும் படத்தொகுப்பாளர் விட்டல் காலமானார்

பழம்பெரும் திரைப்பட படத்தொகுப்பாளர் ஆர்.விட்டல்(91) மாரடைப்பால் காலமானார். படிக்காதவன், சர்வர் சுந்தரம், விக்ரம் உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர். மேலும் 5 படங்களை இயக்கியும், 3 படங்களை தயாரித்தும் உள்ளார்.

நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2132 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 105 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீரிருப்பு 370 மில்லியன் கன அடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:51 (IST) 27 Jul 2023
    பா.ஜ.க அண்ணாமலை பாதயாத்திரை; அ.தி.மு.க பங்கேற்பு

    ராமேஸ்வரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தொடங்க உள்ள பாதயாத்திரை நிகழ்ச்ச்சியில் அ.தி.மு.க சார்பில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்கிறார்.

    ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிகழ்ச்சியில், பங்கேற்ற கூட்டணி கட்சிகளுக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்த நிலையில், அ.தி.மு.க பங்கேற்கிறது.



  • 21:48 (IST) 27 Jul 2023
    கோயிலின் வருமானத்தை பொறுத்தே ஊதிய நிர்ணயம் - இந்து அறநிலையத்துறை

    ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு நிறுவனம்; அந்த கோயிலின் வருமானத்தை பொறுத்தே ஊதியம் நிர்ணயம்; அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் ஓரே ஊதியம் வழங்க முடியாது; கோயில்களின் நிதி சிக்கல்களை தீர்க்க கோயில் பணியாளர் நல நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத்துறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.



  • 20:52 (IST) 27 Jul 2023
    தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் - தி.மு.க எம்.பி கோரிக்கை

    தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.



  • 20:14 (IST) 27 Jul 2023
    ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்று

    நடிகர் ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்று அளிக்கப்பட்டுள்ளது.

    நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி

    ரஜினியின் 'ஜெயிலர்' படம் வெளியாகிறது.



  • 20:12 (IST) 27 Jul 2023
    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழக அரசு தொடர்ந்து முயற்சி - மா. சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்: “நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, தமிழக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது; தமிழக அரசின் நடவடிக்கை உயிர்ப்போடுதான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



  • 20:10 (IST) 27 Jul 2023
    ஓ.பி.எஸ் உடன் இணைந்து பயணிப்போம் - டி.டி.வி தினகரன்

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்: “2024 மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் டிசம்பரில் தெரிவிப்போம்; வரும் காலங்களில் ஓ.பி.எஸ் உடன் இணைந்து பயணிப்போம். பா.ஜ.க கூட்டணியில் அ.ம.மு.க இல்லை. அதனால், அழைப்பு அனுப்பவில்லை” என்று கூறினார்.



  • 19:42 (IST) 27 Jul 2023
    மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 8 பேர் குழந்தையுடன் தமிழகத்தில் தஞ்சம்

    மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 8 பேர் குழந்தையுடன் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் உதவிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • 19:13 (IST) 27 Jul 2023
    மணிப்பூர் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு

    மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்று, வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 18:52 (IST) 27 Jul 2023
    மாலத்தீவில் ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் மாலத்தீவு சென்றுள்ளார். இது தொடர்பான காணொலிக் காட்சிகள் வைரலாகிவருகின்றன. ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.



  • 18:45 (IST) 27 Jul 2023
    அமலாக்கத்துறை இயக்குநர் பணி நீட்டிப்பு: இதுதான் கடைசி.. உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி

    எஸ்.கே.மிஸ்ரா தவிர ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அதிகாரிகளும் திறமை அற்றவர்களா? அவர் இல்லாமல் துறை செயல்படாதா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.

    வரும் 31ம் தேதியுடன் எஸ்.கே.மிஸ்ராவின் பணிக்காலம் முடிய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு அனுமதி கோரியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 15க்கு மேல் அமலாக்கத்துறை இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 18:44 (IST) 27 Jul 2023
    அப்துல் கலாமுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

    கனவுகள் காண சொன்ன அக்னி சிறகு நாயகர்,தமிழகத்தின் தென்கோடியில் கிராமத்தில் பிறந்து,விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியா உலகின் உச்சத்திற்கு செல்ல காரணமான பிதாமகன்,கல்வியின் முக்கியத்துவத்தை இளைஞர்களுக்கு உணர்த்தி அவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்திட்ட பாரத ரத்னா டாக்டர்.அப்துல்கலாம் ஐயா நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.



  • 18:41 (IST) 27 Jul 2023
    மத்திய அமைச்சரை சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்

    தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்றும், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்தார்.



  • 18:33 (IST) 27 Jul 2023
    நவீன் பட்நாயக்குக்கு ஹாக்கி போட்டி அழைப்பிதழ்

    சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டிக்கான அழைப்பிதழை, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிடம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணைய உறுப்பினர் மேகநாத ரெட்டி வழங்கினார்.



  • 18:20 (IST) 27 Jul 2023
    என்எல்சி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்கிறது

    விளைநிலத்தில் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்எல்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது

    காவல்துறை துணையுடன் மக்களை முடக்கி அவர்களை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது என்எல்சி

    நிலம் அளித்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்றவில்லை

    முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

    விவசாயிகளின் கோரிக்கையான மறு சீரமைப்பு, மற்றும் மறுகுடி அமர்வு, சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு, வீட்டிற்கு ஒருவர் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.



  • 18:20 (IST) 27 Jul 2023
    என்எல்சி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்கிறது

    விளைநிலத்தில் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்எல்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது

    காவல்துறை துணையுடன் மக்களை முடக்கி அவர்களை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது என்எல்சி

    நிலம் அளித்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்றவில்லை

    முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு கண்டனம்.

    விவசாயிகளின் கோரிக்கையான மறு சீரமைப்பு, மற்றும் மறுகுடி அமர்வு, சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு, வீட்டிற்கு ஒருவர் நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.



  • 17:47 (IST) 27 Jul 2023
    மேற்கிந்திய தீவுகள் குறித்து கபில்தேவ் கருத்து

    வெஸ்ட் இண்டீஸ் இல்லாத உலகக்கோப்பையை கற்பனை செய்ய முடியவில்லை என கவலை தெரிவித்துள்ள கபில்தேவ், அந்த அணி விரைவில் மீண்டெழும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



  • 17:39 (IST) 27 Jul 2023
    பாஜக மீது ராகுல் விமர்சனம்

    “பதவியை பெறுவதற்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதுவேண்டுமானாலும் செய்யும். பதவிக்காக மணிப்பூரை மட்டுமல்ல, இந்த உலகத்தையும் அழிப்பார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதே இல்லை" என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.



  • 17:14 (IST) 27 Jul 2023
    செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.



  • 17:12 (IST) 27 Jul 2023
    மது போதையில் லாரி ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ.20000 அபராதம் விதிப்பு

    கன்னியாகுமரி: வில்லுக்குறியிலிருந்து தோட்டியோடு வரை ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல், குடிபோதையில் டாரஸ் லாரியை  ஓட்டி வந்த ஓட்டுநர் முருகனுக்கு ₹20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இவர் மீது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், அவசர வாகனங்களுக்கு வழிவிட மறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



  • 16:48 (IST) 27 Jul 2023
    அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு

    அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்



  • 16:47 (IST) 27 Jul 2023
    அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு

    அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு செப்டம்பர் 15ம் தேதி வரை பதவி நீட்டிப்பு. பதிவு நீட்டிப்பு கேட்டு மேலும் மனு தாக்கல் செய்யக்கூடாது செப்டம்பர் 15ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் அவர் இயக்குனராக நீடிக்க கூடாது - உச்சநீதிமன்றம்



  • 16:10 (IST) 27 Jul 2023
    கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

    கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த அடையாறு மகளிர் போலீசார்.

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஹரிபத்மன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு



  • 16:08 (IST) 27 Jul 2023
    எம்.பிக்களை சந்திக்கும் பிரதமர் மோடி : ஜூலை 31-முதல் தொடக்கம்

    தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து எம்.பி.க்களையும் சந்திக்கிறார் பிரதமர் மோடி. ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 10 வரை மாநில வாரியாக எம்.பி.க்களை சந்திக்கிறார். தமிழ்நாட்டை சேர்ந்த என்.டி.ஏ கூட்டணி எம்.பி.க்களை ஆகஸ்ட் 2ல் சந்திக்கிறார்



  • 16:07 (IST) 27 Jul 2023
    தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

    சங்கரன்கோவில் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வரும் நிலையில், உடைப்பை உடனடியாக சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • 16:06 (IST) 27 Jul 2023
    அமலாக்கத்துறை இயக்குநர் பணி நீட்டிப்பு விவகாரம்

    அமலாக்கத்துறை இயக்குநர் பணி நீட்டிப்பு விவகாரம் - ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் எஸ்.கே.மிஸ்ரா தவிர ஒட்டுமொத்த அமலாக்கத்துறை அதிகாரிகளும் திறமை அற்றவர்களா? அவர் இல்லாமல் துறை செயல்படாதா? - நீதிபதிகள் கேள்வி வரும் 31ம் தேதியுடன் எஸ்.கே.மிஸ்ராவின் பணிக்காலம் முடிய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் பணி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரியது ஒன்றிய அரசு



  • 15:23 (IST) 27 Jul 2023
    அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு

    நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு குடிசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவருக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு



  • 14:56 (IST) 27 Jul 2023
    மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    மாநிலங்களவையில் இருந்து இன்றும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

    மல்லிகார்ஜுன கார்கேவை பேசவிடாமல், ஆளுங்கட்சி எம்.பி.க்கள் இடையூறு செய்ததாக கூறி வெளிநடப்பு



  • 14:45 (IST) 27 Jul 2023
    அல்லேரி மலையில் ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர்

    அல்லேரி மலையில் ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர்

    பாம்பு கடித்து பலியான சங்கரின் குடும்பத்துக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது

    அல்லேரி மலை வாழ் மக்களுக்கு குடியிருப்புகள் கட்ட

    ஏற்கனவே ரூ. 5.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நிதி தேவைப்படும்

    புதிய ஆம்புலன்ஸ் விரைவில் மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் - ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்



  • 14:18 (IST) 27 Jul 2023
    ஒருநாள் தொடரில் இருந்து சிராஜ் விலகல்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் விலகல்

    காயம் காரணமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிராஜ் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது



  • 14:12 (IST) 27 Jul 2023
    வரும் 29-ம் தேதி மணிப்பூர் செல்கிறது இந்தியா கூட்டணி

    வன்முறையால் உருக்குலைந்துள்ள மணிப்பூர் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அம்மாநிலத்திற்கு நேரில் செல்கிறது இந்தியா கூட்டணி.

    எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணி வரும் 29,30 தேதிகளில் மணிப்பூர் செல்கிறது



  • 13:56 (IST) 27 Jul 2023
    மின்கம்பம் சரிந்து விழுந்து ஜூடோ தேசிய வீரர் காயம்

    மதுரையில் மின்கம்பம் சரிந்து விழுந்து ஜூடோ தேசிய வீரர் காயம்

    பழுதடைந்த மின் கம்பத்தை மின் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்து கொண்டிருந்த போது விபத்து

    மின்கம்பம் சரிந்து விழுந்ததில், நடந்து சென்ற ஜூடோ தேசிய வீரர் விக்னேஸ்வரனின் காலில் காயம்

    ஜூடோ வீரர் விக்னேஸ்வரன் வரும் 5, 6ஆம் தேதி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க இருந்தார்

    ஜூடோ வீரரின் தாய் அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை



  • 13:55 (IST) 27 Jul 2023
    7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்



  • 13:41 (IST) 27 Jul 2023
    செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது

    திருப்பதி அருகே செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது

    14 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் கார் பறிமுதல்



  • 13:40 (IST) 27 Jul 2023
    என்.எல்.சி. விவகாரம்- பாமக நாளை முற்றுகை போராட்டம்

    என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக நாளை பாமக சார்பில் முற்றுகை போராட்டம்

    விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் போராட்டம்

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை நெய்வேலியில் முற்றுகை போராட்டம்



  • 13:40 (IST) 27 Jul 2023
    என்.எல்.சி.யால் நிலத்தடி நீர்மட்டம் 800 அடிக்கு போய்விட்டது

    என்.எல்.சி.யால் நிலத்தடி நீர்மட்டம் 8 அடியில் இருந்து 800 அடிக்கு போய்விட்டது.

    நிலம் வழங்கியவர்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் வேலை வழங்கவில்லை.

    தமிழகத்தின் மின் தேவையில் என்.எல்.சி.யின் பங்கு மிகக் குறைவு

    மின்சாரம் தயாரிக்க எத்தனையோ வழிகள் உள்ளன, ஆனால் உணவுக்கு நிலம் முக்கியம்- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்



  • 12:56 (IST) 27 Jul 2023
    மாநிலங்களவை ஒத்திவைப்பு

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.



  • 12:56 (IST) 27 Jul 2023
    பாமக அறிவிப்பு

    விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து நாளை என்எல்சி முற்றுகை; என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாளை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் போராட்டம் நடத்தப்படும்- பாமக அறிவிப்பு



  • 12:10 (IST) 27 Jul 2023
    அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது

    சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5% உள்ள ஒதுக்கீடுக்கு இன்று நேரடி கலந்தாய்வு தொடங்கியது.



  • 12:09 (IST) 27 Jul 2023
    தக்காளி விலை மீண்டும் உயர்வு

    சென்னையில் தக்காளி விலை ரூ.30 அதிகரித்து இன்று கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் 1,200 டன் தேவையுள்ள நிலையில் 400 டன் தக்காளி மட்டுமே சந்தைக்கு வந்ததால் விலை உயர்வு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.



  • 12:04 (IST) 27 Jul 2023
    எடப்பாடி பழனிசாமி பேட்டி

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 4ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது



  • 12:04 (IST) 27 Jul 2023
    6 ஆண்டுகளுக்கு பின் 119.96 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை

    உழவர்கள் நலனுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல் விற்பனையாளர்களாகவும் மாற வேண்டும்.

    வேளாண் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. ஏற்கனவே ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

    தற்போது மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது

    47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு உற்பத்தியில் சாதனை; 6 ஆண்டுகளுக்கு பின் 119.96 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை- 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!



  • 11:57 (IST) 27 Jul 2023
    காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பால் காவிரி ஆற்றில் நீர் வரத்து உயர்ந்துள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 16,500 கன அடியாக அதிகரித்துள்ளது.



  • 11:27 (IST) 27 Jul 2023
    குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு

    குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெறுவதற்கான கடைசி நாள், ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



  • 11:25 (IST) 27 Jul 2023
    எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி-யின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசு, இழப்பீட்டு குறித்து பேச்சுவார்த்தை முழுமையடையாத நிலையில் நிலத்தை கையகப்படுத்துவதா? தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்



  • 11:25 (IST) 27 Jul 2023
    அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

    சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய, 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்..



  • 11:25 (IST) 27 Jul 2023
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

    மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.



  • 10:37 (IST) 27 Jul 2023
    திராவிட மாடல் ஆட்சி முறை இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது

    திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பயனளிக்கிறது திராவிட மாடல் ஆட்சி முறை இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்



  • 10:36 (IST) 27 Jul 2023
    பாஜக ஆட்சி நீடித்தால், பல மாநிலங்கள் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளது

    பாஜக ஆட்சி நீடித்தால், பல மாநிலங்கள் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளது பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி கழகத் தலைவராகப் பொறுப்பேற்ற நாள் இன்று வரும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி நாடு முழுவதும் வெற்றி பெற பாடுபட வேண்டும் - முதலவர் ஸ்டாலின்



  • 10:36 (IST) 27 Jul 2023
    நிலங்களைக் கையகப்படுத்திய என்எல்சி நிர்வாகம் - 2ம் கட்ட சுரங்க விரிவாக்கப் பணி

    நிலங்களைக் கையகப்படுத்திய என்எல்சி நிர்வாகம் - 2ம் கட்ட சுரங்க விரிவாக்கப் பணி விளை நிலங்கள் அழிப்பு-வாய்க்கால் வெட்டும் பணியை துவங்கிய நெய்வேலி என்எல்சி நிர்வாகம் மக்கள் கடும் எதிர்ப்பு - பாமக சார்பில் நேற்று சாலை மறியல் - போராட்டக்காரர்கள் கைது இன்று 2வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி - பாதுகாப்புப் பணியில் 400 காவல் துறையினர்



  • 09:27 (IST) 27 Jul 2023
    தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைப்பு

    தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்திவைப்பு உள்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவு இல்லை என்பதால் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் அண்ணா பல்கலை. திட்டம்



  • 09:25 (IST) 27 Jul 2023
    மக்களவையில் திமுக நோட்டீஸ்

    தமிழக ஆளுநரை திரும்பப் பெறும் விவகாரம் - மக்களவையில் திமுக நோட்டீஸ் "மக்களவையின் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்" திமுக எம்.பி டி.ஆர்.பாலு



  • 08:37 (IST) 27 Jul 2023
    மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு தொடங்கியது

    மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு தொடங்கியது . சிறப்பு கலந்தாய்வுக்காக காலையிலேயே குவிந்த அரசு பள்ளி மாணவர்கள்



  • 08:36 (IST) 27 Jul 2023
    செந்தில் பாலாஜி மனைவி மேல்முறையீடு மனு – இன்று மீண்டும் விசாரணை

    செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு - இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணை வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்



  • 08:25 (IST) 27 Jul 2023
    கடலூரில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது

    என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம்பவம் - கடலூரில் 17 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு கல்வீச்சு சம்பவத்தால், கிராமப்புறங்களுக்கு இரவுநேர பேருந்து சேவை நிறுத்தப்பட்டன பேருந்துகள் அனைத்தும் பணிமனைக்கு திரும்பிய நிலையில், காலையில் இருந்து சேவை தொடங்கியது



  • 08:19 (IST) 27 Jul 2023
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17,000 கன அடியாக உயர்வு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17,000 கன அடியாக உயர்வு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் படிப்படியாக உயர்வு



  • 08:19 (IST) 27 Jul 2023
    தக்காளி விலை மீண்டும் ஏற்றம்

    சென்னை, கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ. 140க்கு விற்பனை நேற்று ரூ. 110க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ரூ. 30 உயர்வு 1,100 டன் தேவைப்படும் நிலையில் 400 டன் வந்துள்ளதால் விலையேற்றம் .



  • 08:17 (IST) 27 Jul 2023
    வேளாண் சங்கமம் 2023 - திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் ஸ்டாலி

    வேளாண் சங்கமம் 2023 - திருச்சியில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் . மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குகிறார்



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment