Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil News Latest Updates
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கை அபார வெற்றி
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்களையும், தீக்சனா மற்றும் மதுஷன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்த 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புதிய மன்னர் சார்லஸ்
செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில், பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக பிரகடனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகாராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறவுள்ளார். அவருக்கு தற்போது 73 வயதாகிறது. இன்று மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் மூன்றாம் சார்லஸ் 54 நாடுகள் அடங்கிய காமன் வெல்த் நாடுகளின் தலைவராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
பொறியியல் படிப்பு: பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று (செப்.10)தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் உள்ள தனியார் பள்ளியில், வித்யா பாரதி தமிழ்நாடு என்ற அமைப்பு சார்பில், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவது குறித்த கருத்தரங்கு நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், பங்கேற்று சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவில் தாய்மொழி வழிக் கல்வி இல்லை. நாம் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு வருகிறோம். எனவே, அவரவர் தாய் மொழியில் கல்வி கற்பது நல்லது. அதன் மூலம் இந்தியாவின் அறிவு களஞ்சியத்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள வி.கே.சசிகலா மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஜாக்டோ – ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் நீங்கள் தனி தீவு கிடையாது : நானும் உங்களில் ஒருவன். நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன் என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 70 ஆண்டுகால மாற்றத்தின் நிலையான அடையாளம் ராணி எலிசபெத் என்று கூறியுள்ளார்.
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இரங்கல் ராணி எலிசபெத்தின் மறைவுக்கு இந்திய மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தில் 53 கி.மீ., தூரத்தை கடந்த ராகுல்காந்தி தமிழகத்தில் தனது நடைபயணத்தை நிறைவு செய்துள்ளார்.தொடர்ந்து நாளை கேரள எல்லையில் தனது பயணத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி
திரிபுரா முன்னாள் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப்-ஐ மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் ஆக பாஜக அறிவித்துள்ளது.
மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மாணிக் சஹா, முதலமைச்சரான நிலையில், காலியான எம்.பி. இடத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்துக்கு முன்னாள் முதல்வருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில், இன்ஸ்டாகிராமில் பழகிய இளைஞருக்கு, வீட்டில் இருந்து 60 பவுன் தங்க நகைகளை திருடிக்கொடுத்த 16 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரைக்கு மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் வாழ்த்து தெரவித்துள்ளார்.
அந்த வாழ்த்தில் நாட்டுக்கு நல்ல பலனை தரும் என்று நம்புவதாக எனத் தெரிவித்துள்ளார்.
மணப்பாறை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 43 மூட்டை குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக, பால முருகன் என்பவர் கைது செய்யப்பட்டார். கைதானவரின் வங்கிக் கணக்கை முடக்க நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளில், மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 14 பேர் நீரில் மூழ்கியும், மற்ற 5 பேர் மின்சாரம் பாய்ந்தும் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாடு வளர்ச்சியை நோக்கிய சரியான பாதையில் செல்கிறது; 2028இல் சீனாவை விட, இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் இருப்பார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது நாட்டிற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என காஞ்சிபுரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வலையொளி (யூடியூப்) தளத்தில் பார்வைகளை அதிகரிக்க பொய்யான தகவல்களை முகப்பில் (தமப்னெயில்) வைத்த 22 வயதான ஜனார்தனன் என்ற ஐ.டி., ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கிளாரென்சக்ஸ் கிங் ஆஃப் ஆர்ம்ஸ் லண்டனின் ராயல் எக்ஸ்சேஞ்சில் இரண்டாவது அதிகாரப்பூர்வ பிரகடனத்தைப் படித்தார். அவர் அறிவித்தபடி, 'கடவுள் ராஜாவைக் காப்பாற்றினார்' என்று கூறினார், மேலும் ட்ரம்பெட்டரஸ் அரச வணக்கம் முழங்கினர். இது லண்டனில் நடந்த கடைசி விழாவாகும்.
பொது மக்கள் முன்பு பிரிட்டன் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். 41 பீரங்கி குண்டுகள் முழங்க புதிய மன்னர் சார்லஸ்-க்கு மரியாதை செலுத்தப்பட்டது
அந்தரங்க சபையில், மன்னர் சார்லஸ் தனது பிரகடனத்தை அறிவித்தார். பின்னர் உறுதிமொழியை வாசித்து கையொப்பமிட்டார்.
எனது தாயாரின் வழியில் சட்டப்படி எனது கடமைகளை ஆற்றுவேன். அரச குடும்பத்தின் பாரம்பரியங்களை காப்பாற்றுவேன். ஸ்காட்லாந்தில் உள்ள தேவாலயத்தின் பாதுகாப்பை நிலைநிறுத்த உறுமொழி ஏற்கிறேன் என பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்
அந்தரங்க சபையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மறைவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை அடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மாணவர்களுக்கு நீட் பயிற்சியை தமிழ்நாடு அரசு அளிப்பதில்லை. நீட் வேண்டாமென திமுக அரசு சொன்னாலும், நீட் தேர்வு கட்டாயம் இருக்கும் – அண்ணாமலை
கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்கக் கூடாது – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கருத்து
கோயில், அனைத்து பக்தர்களுக்கும் பொதுவான வழிபாட்டுத் தலமாகும் – நீதிமன்றம்
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவை ஒட்டி வி.கே.சசிகலாவின் சுற்றுப்பயணத்தில் மாற்றம்.
சேலம், ஈரோடு மாவட்டங்களில் நாளை மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் வரும் 12 மற்றும் 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு மொத்தம் 1,56,278 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தொழில்நுட்ப கல்வி ஆணையர் அலுவலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 23,321 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன – அமைச்சர் பொன்முடி
அரசு பள்ளி மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதற்காகவே முதல்வர் நீட் தேர்வு வேண்டாம் என்கிறார் – அமைச்சர் பொன்முடி
பாரதியாரின் நினைவுநாளான நாளை 'மகாகவி நாள்' என கடைபிடிக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நமது நாட்டின் விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவோம். சாதனைகளை நாம் கொண்டாடும் போது, அறிவியல் நமது சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறும்.
மத்திய, மாநில அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அவதூறு வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அமைச்சராக இருந்த வேலுமணி குறித்து 2020ஆம் ஆண்டு கோவையில் பேசியது தொடர்பாக அவதூறு வழக்கு
சென்னை, நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜாவை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா வீடு திரும்பிய நிலையில், நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்திப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 5,554 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் 48,850 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் 11ம் தேதி முதல் 25ம் தேதி வரை பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
ராணுவப் பணி செய்த முதல் அரண்மனைப் பெண்- வைரமுத்து அஞ்சலி
எழுபது ஆண்டுகள்அரசாண்ட முதல் அரசி17 பிரதமர்கள் கண்டமுதல் மகாராணிராஜ குடும்பத்தின்முதல் பொறி நெறியாளர்ராணுவப் பணி செய்தமுதல் அரண்மனைப் பெண்அரசி எனில் தானே எனஉலகை உணரவைத்தமுதல் ராணிஉங்களோடு கை குலுக்கியதுஎன் உள்ளங்கைப் பெருமைஉங்கள் புகழைக்காலம் சுமந்து செல்லும் pic.twitter.com/thHHB30MmW
— வைரமுத்து (@Vairamuthu) September 10, 2022
தமிழகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், புதிய மின்கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், புதிய மின்கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில், சேருவதற்கு https://adm.tanuvas.ac.in இணையதளம் வாயிலாக வரும் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி சுற்று போட்டிகள் சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் நடைபெறுகிறது.
ராகுல் காந்தி, கன்னியாகுமரி, முளகுமூடு பகுதியிலிருந்து 4வது நாள் நடை பயணத்தை தொடங்கினார்.