Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்!
வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
ஓரிசா பாலு மரணம்: மு.க. ஸ்டாலின் இரங்கல்
தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலுவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவராவார்.
கருணாநிதிக்கு பின்னர் இவர்தான் என் வழிகாட்டி: மு.க. ஸ்டாலின்
தி.க.வும் தி.மு.க.வும் உணவும் உயிரும் போல; தி.க.வும் தி.மு.க.வும் இரட்டை குழல் துப்பாக்கி போன்றது என அண்ணா கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிறகு வீரமணி தான் எனக்கு கொள்கை வழிகாட்டி என தஞ்சாவூரில் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து, “மிசா காலத்தில் எனக்கு தைரியம் கொடுத்தவர் கி.வீரமணி” எனவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சேப்பாக்கத்தில் உலகக் கோப்பை போட்டி: இந்த தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம்
சென்னை சேப்பாக்கத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அக்டோபர் 8, 13, 18, 23, மற்றும் 27ம் தேதிகளில் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது!
தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மரணம்
தமிழ் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 60. ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடல் பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்.
அரசின் தலைமை சரியில்லை; தி.மு.க அரசு மீது இ.பி.எஸ் கடும் தாக்கு
கோவையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி: “அரசின் தலைமை சரியில்லை; தலைமை சரியாக இருந்திருந்தால் காவல்துறையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்காது; ஒட்டுமொத்த தி.மு.க அரசே சமூக வலைதளங்களில் எடுத்துச் சொன்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.” என்று கூறினார்.
லியோ இசை வெளியீட்டு விழா ரத்து குறித்து ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானதற்கும், காவல்துறைக்கும் சம்பந்தம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்கவே தனித்து போட்டியிடுகிறோம் - இ.பி.எஸ் பேட்டி
கோவையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி: “காவிரியில் இருந்து நீர் தர வேண்டும் என தமிழ்நாடு பா.ஜ.க கூறுகிறது. ஆனால், தண்ணீர தரக்கூடாது என கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க சொல்கிறது. இதுதான் தேசிய அரசியல், அதற்காகத்தான் ஒரு முடிவை எடுத்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்கவே தனித்து போட்டியிடுகிறோம்.” என்று கூறினார்.
யாருக்கு யார் போட்டி என்பது மக்களவைத் தேர்தலின்போது தெரியும் - இ.பி.எஸ் பேட்டி
தமிழகத்தில் தி.மு.க - பா.ஜ.க இடையேதான் போட்டி என அண்ணாமலை கூறிய நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி: “பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை முன்வைக்காமலேயே தேர்தலை சந்திக்கின்றனர். அண்ணாமலை சொல்வது அவரது கருத்து; வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற கருத்துகளைக் கூறி வருகிறார் அண்ணாமலை” என்று கூறினார்.
என்.டி.ஏ-வில் 2 தொகுதிகளைக் கேட்க உள்ளோம் - ஐ.ஜே.கே தலைவர் பாரி வேந்தர்
திருச்சியில் ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் பேட்டி: “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சிக்கு 2 தொகுதிகளை கேட்க உள்ளோம். பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளைக் கேட்க உள்ளோம்” என்று கூறினார்.
ரோகிணி திரையரங்கம்: ரூ. 10 லட்சம் இழப்பு
லியோ பட டிரைலர் திரையிடலின் போது, சென்னை ரோகிணி திரையரங்கில் 400 இருக்கைகள் சேதம் ஒட்டுமொத்தமாக ₨10 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரோகிணி திரையரங்கம் வருத்தம் காவல்துறையிலும் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் திரையரங்க நிர்வாகம் தகவல்
இந்தியா 100 பதக்கங்கள்
ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்கள் வெல்லப்போவது உறுதியானது
அமைதிக்கான நோபல் பரிசு, ஈரான் நாட்டை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
2023ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, ஈரான் நாட்டை சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடி பல முறை சிறை சென்றுள்ள நர்கீஸ் முகமதி, தற்போதும் சிறையில்தான் உள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
இ.பி.எஸ்-ஐ தொடர்புபடுத்தி கருத்து தெரிவிக்க தடை நீட்டிப்பு
முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக வழங்கிய தங்க கவசத்தை பொருளாளர் சீனிவாசனிடம் வழங்கக்கோரி வழக்கு. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு குறித்து பதிலளிக்க 2 வாரம் அவகாசம் அளிக்க கோரிக்கை. கோரிக்கையை மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு. அதிமுக பொருளாளர் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் உத்தரவு.
பொதுக்குழு வழக்கு: ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழு வழக்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
ஊராட்சி செயலருக்கு நிபந்தனை முன்ஜாமின்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
கிராம சபை கூட்டத்தின் போது கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் தங்கப்பாண்டியனுக்கு முன்ஜாமின்
விவசாயி அம்மையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊராட்சி செயலராருக்கு முன்ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு
தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை; எனவே முன்ஜாமின் வழங்கப்படுகிறது - நீதிபதி
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை
சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வி செயலாளர் உடன் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை
ஆளுநர் தேவையற்ற அரசியல் பேசி வருகிறார்-உதயநிதி
ஆளுநர் ஆர்.என்.ரவி தேவையற்ற அரசியல் பேசி வருகிறார். மக்கள் ஏற்க மாட்டார்கள். தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதே தற்போதைய போட்டி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சேகர்பாபு, உதயநிதி மீது கோ வாரண்டோ வழக்கு
அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. ராசாவுக்கு எதிராக கோ வாரண்டோ வழக்கு. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய நிலையில், கிஷோர்குமார் என்பவர் வழக்கு.
அமைச்சரின் பேச்சுக்கு ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அரசியல் காரணத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த முடியாது - அமைச்சர் உதயநிதி தரப்பு
ஆதாரங்கள் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் சேகர்பாபு தரப்பு. வழக்கு விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
திருச்செந்தூர் கோயிலில் குழந்தை கடத்தல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பெற்றோரிடம் நட்பாக பேசி ஒன்றரை வயது குழந்தையை கடத்தி சென்ற பெண்மணி. ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக கூறி குழந்தை கடத்தல் - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பி உரசி 2 பேர் பலி
திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழப்பு. யானைபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, மின்கம்பி உரசியதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
மாநில கல்விக் கொள்கை அறிக்கை தயார்
மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை தயார். முதல்வரிடம் அளிக்க நேரம் கேட்டது மாநில கல்விக் கொள்கை குழு. ஒரு சில நாட்களில் முதல்வரிடம் அறிக்கை அளிக்க வாய்ப்பு. 2024-25 கல்வியாண்டில் மாநில கல்விக் கொள்கை அமலுக்கு வரும்
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள்
சேலம்: அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் புழுக்கள் புகார் அளித்த மாணவிகளை தண்டித்த தலைமை ஆசிரியர். கோட்டை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாகவும், கழிவறைகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாகவும் புகார் அளித்த மாணவிகளை முட்டிப் போட வைத்து தண்டித்த பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி. தலைமை ஆசிரியரின் செயலை கண்டித்து 200க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்
திருச்சி புறப்பட்டார் ஸ்டாலின்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு இன்று இரவே முதலமைச்சர் சென்னை திரும்ப உள்ளார். முதல்வருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உடன் சென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், 97 ரன்கள் இலக்கை 9.2 ஓவர்களில் எட்டி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை
வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக நீடிக்கும்- ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்
வருமான வரித்துறையினர் சோதனை
திமுக எம்.பி. ஜெகத்ரட்கனுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 300 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
மும்பையில் ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து
மும்பையின் குர்கான் மேற்கில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறார்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர்.
குர்கான் மேற்கில் உள்ள ஆசாத் மைதானம் அருகே உள்ள ஜெய் பவானி கட்டிடத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த ஆறு பேரில் ஒரு ஆண், மூன்று பெண்கள் மற்றும் இரண்டு சிறுமிகளும் அடங்குவர்.
ஆசிய விளையாட்டு போட்டி- இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி
முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
97 ரன்கள் எடுத்தால், இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்
மழைக்கு வாய்ப்பு
விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
ஆசிய விளையாட்டு போட்டி
வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.