Advertisment

Tamil news Today: கொரட்டூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் நில அதிர்வு: மக்கள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம்

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 28 July 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai

Chennai

சென்னை கொரட்டூர் பகுதியில் காவல்நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பீதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 433-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ,94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:34 (IST) 28 Jul 2023
    31 ஆண்டுகளுக்கு பின் இணையும் பாரதிராஜா - இளையராஜா

    இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிக்கும் மார்கழி திங்கள் படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். இதன் மூலம் 31 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிராஜா இளையராஜா இருவரும் இணைய உள்ளனர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குகிறார் என்து குறிப்பித்தக்கது



  • 21:11 (IST) 28 Jul 2023
    ஜாமினில் வெளிவந்தவர் மீண்டும் கைது

    திருச்சி, மன்னார்புரம் எல்ஃபின் நிதி நிறுவனம் பணம் இரட்டிப்பாக தருவதாக மோசடி செய்த விவகாரம் தொடர்பான நிபந்தனை ஜாமினில் உள்ள விசிக பிரமுகர் ரமேஷ்குமார் காரைக்காலைச் சேர்ந்த மூதாட்டியிடம் ₨6 கோடி மோசடி செய்த புகாரில் காரைக்கால் தனிப்படை போலீசார் திருச்சியில் மீண்டும் கைது செய்துள்ளனர்.



  • 20:42 (IST) 28 Jul 2023
    தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன் : அமித் ஷா

    அண்ணாமலை யாத்திரை தமிழ் மொழியை உலகறிய செய்வதற்கான யாத்திரை" "2024 தேர்தல் வெற்றிக்கான அடையாளமாக கைகளை உயர்த்துங்கள்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு



  • 20:41 (IST) 28 Jul 2023
    முதல்வர் ஸ்டாலினுக்கு 'சிறந்த மனிதருக்கான விருது

    ஆசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 2023ம் ஆண்டுக்காக "சிறந்த மனிதருக்கான விருது" 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தியதை பாராட்டும் வகையில் விருது வழங்கப்பட்டுள்ளது முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதை வழங்கினார் ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பரத் சிங் சௌகான்



  • 19:35 (IST) 28 Jul 2023
    கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் மாலை 6 மணி முதல் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு



  • 19:33 (IST) 28 Jul 2023
    பாதயாத்திரை தொடக்க விழா - அண்ணாமலை பேச்சு

    "2024ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் 400 எம்.பி.க்கள் நாடாளுமன்றம் செல்வார்கள்" "இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் வந்துள்ளன" "தமிழ் மொழியை பிரதமர் மோடி தொடர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார்"



  • 19:01 (IST) 28 Jul 2023
    அண்ணாமலை யாத்திரை: விஜயகாந்த் வாழ்த்து

    அண்ணாமலை யாத்திரை வெற்றி பெற விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து ட்விட்டரில் அவர், “மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் திரு. சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 18:48 (IST) 28 Jul 2023
    நீதிபதி மனதை தைத்தது, அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயத்தை எட்ட வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்

    நெய்வேலி விவகாரத்தில் நீதிபதி மனதை தொட்ட விஷயங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயத்தை தொட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் ட்விட்டரில் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர், “இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட

    உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த

    உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி!

    என்.எல்.சி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, நிலத்தை கைப்பற்றுவதற்காக வயலில் விளைந்து நின்ற பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அழித்த என்.எல்.சி நிறுவனத்திற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.

    ‘’ நெல் பயிரிடப்பட்டிருந்த வயல்களில் எந்திரங்களை இறக்கி பயிர்களை அழித்ததை ஏற்க முடியாது. வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் வாழ்ந்த பூமியில் இப்படி நடப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பயிர்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்ட போது எனக்கு அழுகை வந்தது. பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை இரு மாதங்கள் என்.எல்.சியால் பொறுத்துக் கொள்ள முடியாதா?

    வயல்களை எல்லாம் அழித்து மீத்தேன்,நிலக்கரி எடுத்தால் அதனால் ஏற்படும் வெற்றிடத்தை எதைக் கொண்டு நிரப்பப் போகிறோம். நமது தலைமுறையிலேயே நாம் பஞ்சத்தை பார்க்கப் போகிறோம். அரிசிக்கும், காய்கறிகளுக்கும் மக்கள் அடித்துக் கொள்ளப் போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம். என்.எல்.சி நிறுவனம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை. நிலக்கரி அவர்களுக்கு பயன்படாது. இது தான் எனது கருத்து” என்று கூறியுள்ளார்.

    நீதியரசர் தண்டபாணியின் கருத்துகள் உண்மையானவை. என்.எல்.சியால் பயிர்கள் அழிக்கப்பட்ட சிக்கலில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை நீதியரசர் அப்படியே வழிமொழிந்திருகிறார். பயிர்கள், சுற்றுச்சூழல், உணவுப் பாதுகாப்பு குறித்த அக்கறையுடன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்த நீதிபதி அவர்களுக்கு நான் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீதிபதியின் மனதை தைத்த நிகழ்வுகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் இதயங்களையும் தொட வேண்டும். பயிர்களை அழிப்பதும் நிலத்தை பறிப்பதும் பாவம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கானத் திறனை பகுத்தறிவு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 18:44 (IST) 28 Jul 2023
    நெய்வேலி என்.எல்.சி. போராட்டம்: அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு

    நெய்வேலி என்.எல்.சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து, பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • 18:38 (IST) 28 Jul 2023
    அண்ணாமலை யாத்திரை தொடக்கம்

    ராமேஸ்வரத்தில் நடைபெறும் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்துத் தொடங்கிவக்கி வைக்கிறார்

    இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    'என் மண் என் மக்கள்' எனும் பெயரில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் யாத்திரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின்போது, 168 நாள்களில் 1,700 கி.மீ. நடைபயணம், 900 கி.மீ. வாகன பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.



  • 18:17 (IST) 28 Jul 2023
    நீங்கள் கோட்சேவின் வாரிசுகள் என்று அறிவிக்கத் தயாரா? பாஜகவுக்கு கி. வீரமணி கேள்வி

    ‘‘நாங்கள் திராவிடத்தின் வாரிசுகள் - நீங்கள் கோட்சேவின் வாரிசுகள் என்று அறிவிக்கத் தயாரா?’’ என்ற முதலமைச்சரின் கேள்விக்கு பாஜக பதில் அளிக்குமா? என கி. வீரமணி காட்டமாக கேள்வியெழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



  • 17:59 (IST) 28 Jul 2023
    அன்புமணியை விடுதலை செய்ய வைகோ வேண்டுகோள்: பரபரப்பு அறிக்கை

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், “நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், மூன்று நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க சுமார் 36,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி, அனல் மின் நிலையங்கள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறது.

    நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என வாக்குறுதி கொடுத்து, இதுவரை அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப் படாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் மீண்டும் 19,000 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த என்.எல்.சி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் “ நிலம் எடுப்பு செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன” என்று கூறி உள்ளார்.

    ஆனால் எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்திற்கு 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றால், 2013 ஆம் ஆண்டு புதிய நிலமெடுப்புச் சட்டப்படி அந்த நிலத்தை மீண்டும் நில உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை கடலூர் மாவட்ட ஆட்சியர் உணரவில்லையா?

    10 ஆண்டுகள் பொறுத்த நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு, விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை அறுவடை செய்யும் வரை 10 நாட்கள் பொறுக்க முடியாதா?

    நிலம் எடுப்பில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டதில் மிகக் கடுமையான பாரபட்சம் நடந்திருக்கிறது. சட்டப்படி இழப்பீடு நிர்ணயம் செய்தால் விவசாயிகளுக்கு மறுவாழ்வு - மறுகுடியமர்வு பணிகளை முறையாக செய்திட வேண்டும்.

    பாதிக்கப்பட்ட மக்களிடம் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நெய்வேலியில் பொது மக்கள் போராட்டத்தின் போது காவல் துறை தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்டுள்ள பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.



  • 17:47 (IST) 28 Jul 2023
    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: அர்ச்சகர் பயிற்சி சங்கம் வரவேற்பு

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அவர்களின் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தீர்ப்பை இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தமிழ்நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது.



  • 17:35 (IST) 28 Jul 2023
    அதிகாரிகள் மீது தாக்குதல் - ஜாமின் ரத்து

    கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் ஜாமின், முன்ஜாமின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

    ஜாமின், முன் ஜாமின் பெற்ற அனைவரும் 3 நாள்களில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த வழக்கை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்கவும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 17:14 (IST) 28 Jul 2023
    அன்புமணி ராமதாஸ் கைது: கடலூரில் பேருந்து சேவை துண்டிப்பு

    கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு, அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பாமகவின் NLC முற்றுகை போராட்டம் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து, போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:49 (IST) 28 Jul 2023
    வேலூரின் பிரபல ரவுடி வசூர் ராஜா கைது

    வேலூர், பெருமுகையில் மாவட்ட எஸ்பி தலைமையிலான தனிப்படை போலீசார் பிரபல ரவுடி வசூர் ராஜாவை கைது செய்தனர். 15 வழக்குகளில் வாரண்ட் உள்ள நிலையில், வசூர் ராஜாவை எஸ்பி தலைமையிலான தனிப்படை கைது செய்துள்ளது. கொலை, கொள்ளை, ஆட் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் ரவுடி வசூர் ராஜா மீது நிலுவையில் உள்ளது



  • 16:33 (IST) 28 Jul 2023
    போராட்டம் தொடரும் - ராமதாஸ் அறிக்கை

    மண்ணையும், மக்களையும் காப்பதற்காகவும் பாமக-வின் போராட்டம் தொடரும். இறுதி வெற்றி கிடைக்கும் வரை அறவழியில் போராட்டம் தொடரும். என்எல்சி-க்கு எதிராக அறவழியில் போராடிய பாமகவினர் மீது தடியடி நடத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்



  • 16:17 (IST) 28 Jul 2023
    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் வாதம்

    குற்றவழக்கில் தண்டிக்கப்பட்டால் தவிர ஒருவர் அமைச்சராக நீடிப்பதற்கு எந்த தகுதி இழப்பும் இல்லை. குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்பட்டவர்கள் அமைச்சராக நீடிக்க சட்ட விதிகள் தடை செய்யவில்லை என உச்ச நீதிமன்றமே கூறியதுள்ளது என செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது குறித்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது



  • 15:55 (IST) 28 Jul 2023
    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - இந்தியா தோல்வி

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர், காலிறுதியில் இந்திய வீரர் பிரணாய், போராடி தோல்வியடைந்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சன், 19-21, 21-18, 21-8 செட் கணக்கில் வெற்றி பெற்றதால், இந்திய வீரர் பிரணாய், தொடரில் இருந்து வெளியேறினார்



  • 15:37 (IST) 28 Jul 2023
    ராமேஸ்வரம் செல்கிறேன் - அமித்ஷா ட்வீட்

    தமிழக பாஜக நடத்தும் பாதயாத்திரையை தொடங்கி வைக்க இன்று ராமேஸ்வரம் செல்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்



  • 15:22 (IST) 28 Jul 2023
    என்.எல்.சி போராட்டம்; நெய்வேலி புறப்பட்டார் டி.ஜி.பி சங்கர் ஜிவால்

    என்.எல்.சி போராட்டம் காரணமாக டி.ஜி.பி சங்கர் ஜிவால் நெய்வேலி புறப்பட்டார். போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர் என டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்



  • 14:49 (IST) 28 Jul 2023
    பாமக போராட்டம்

    போர்க்களம் போல் காட்சியளிக்கும் என்எல்சி நுழைவு வாயில்; வடக்கு மண்டல ஐஜி கண்ணன் சம்பவ இடத்தில் ஆய்வு



  • 14:01 (IST) 28 Jul 2023
    போலீசார் வாகனம் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு

    போலீஸ் வாகனம் மீது தாக்குதல் காவல்துறையின் தடுப்புகளை மீறி என்.எல்.சி.க்குள் நுழைய பாமகவினர் முயற்சி போலீசார் வாகனம் மீது கல்வீசி தாக்கியதால் பரபரப்பு



  • 13:30 (IST) 28 Jul 2023
    பாமக தலைவர் அன்புமணி தலைமையில் என்எல்சியை முற்றுகையிடும் போராட்டம்

    பாமக தலைவர் அன்புமணி தலைமையில் என்எல்சியை முற்றுகையிடும் போராட்டம் என்எல்சி வாயில் நோக்கி புறப்பட்ட பாமகவினர் போலீசார் இடையே தள்ளுமுள்ளு என்எல்சிக்குள் நுழைய முயலும் பாமகவினரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் காவல்துறை



  • 13:01 (IST) 28 Jul 2023
    மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு

    மக்களவை பகல் 12 மணிக்கு தொடங்கிய நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

    மாநிலங்களவை ஏற்கனவே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது; இனி இரு அவைகளும் வரும் 31ம் தேதி கூடும்!



  • 12:52 (IST) 28 Jul 2023
    சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

    மனு தள்ளுபடி செய்ததை எதிர்த்து சுப்பிரமணிய குருக்கள் மேல்முறையீடு!



  • 12:41 (IST) 28 Jul 2023
    இது தமிழ்நாட்டின் பிரச்னை- அன்புமணி ராமதாஸ்

    5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை; என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்னை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்னை; இது நமது உரிமைக்கான பிரச்னை;

    விவசாய பட்ஜெட் ஒருபக்கம், ஒரு பக்கம் விவசாய நிலம் பிடுங்கப்படுகிறது; நிச்சயம் இதனை விடமாட்டேன்”- கடலூரில் என்எல்சிக்கு எதிரான முற்றுகை போராட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேச்சு



  • 12:31 (IST) 28 Jul 2023
    அன்புமணி தலைமையில் போராட்டம்

    அன்புமணி தலைமையில் நெய்வேலி என்எல்சியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    2 நாட்களாக மேல் வளையமாதேவி கிராமத்தில் நடைபெற்ற என்எல்சி பணிகள் இன்று நிறுத்தம்



  • 12:27 (IST) 28 Jul 2023
    ஆகஸ்ட் 9ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

    சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 9ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • 12:27 (IST) 28 Jul 2023
    டாஸ்மாக் கடைகளை திறக்க தடை

    என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முற்றுகைப் போராட்டம் நடக்க உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 12:04 (IST) 28 Jul 2023
    ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

    ஆசிரியர்கள் சரியாக பாடம் எடுப்பதில்லை என ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்; இந்தியாவிலேயே கற்பித்தல் துறையில் நல்ல மனித வளம் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான்-ஆளுநருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்



  • 12:02 (IST) 28 Jul 2023
    தங்கம் விலை

    இன்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ரூ. 44, 400 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5, 550 ரூபாயாக விற்பனையாகிறது.



  • 11:58 (IST) 28 Jul 2023
    கொடநாடு கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

    கொடநாடு கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவு

    இடைக்கால விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்



  • 11:33 (IST) 28 Jul 2023
    அண்ணாமலை அழைப்பை புறக்கணித்தது தேமுதிக

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை புறக்கணித்தது தேமுதிக புறக்கணித்தது.

    நடைபயண தொடக்க விழாவில் தேமுதிக பொருளாளர் பிரமலதா பங்கேற்கவில்லை என அக்கட்சி அறிவிப்பு.



  • 11:32 (IST) 28 Jul 2023
    மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்காததை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம்

    மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு: இனி வரும் 31ம் தேதி காலை அவை மீண்டும் கூடும்



  • 11:30 (IST) 28 Jul 2023
    மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற கூட்டத்தொடரின் இன்றைய அலுவல்கள் தொடங்கின.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்காததை கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் முழக்கம்; மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு



  • 10:43 (IST) 28 Jul 2023
    வேலம்மாள் பாட்டி மறைவு - முதல்வர் இரங்கல்

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் அரசு வழங்கிய நிவாரணத் தொகையை பெற்றுபோது மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் நம்மிடையே நிலைத்திருப்பார் -ஸ்டாலின்



  • 10:24 (IST) 28 Jul 2023
    சென்னையில் ஜி-20 நாடுகளின் அமைச்சர்கள் மாநாடு

    சென்னையில் ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை குறித்த அமைச்சர்கள் மாநாடு

    பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிப்பு

    பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது என்பது நமது அடிப்படை கடமை

    இயற்கை நமக்கு வழங்குவதைப் போல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும் - பிரதமர் மோடி

    டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரை



  • 09:37 (IST) 28 Jul 2023
    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20,000 கன அடியாக அதிகரிப்பு

    பரிசல் இயக்கவும் குளிக்கவும் தடை விதித்தது, மாவட்ட நிர்வாகம்

    நேற்று வரை 17,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 20,000 கனஅடியாக உயர்வு

    நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பு



  • 08:59 (IST) 28 Jul 2023
    பாமக போராட்டம் - 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

    என்.எல்.சியின் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு

    நெய்வேலியில் பாமக சார்பில் இன்று முற்றுகை போராட்டம் . அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டம்

    முன்னெச்சரிக்கையாக 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

    என்எல்சி சுரங்கம், அனல்மின் நிலையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு



  • 08:41 (IST) 28 Jul 2023
    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறப்பு

    காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

    கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment