Advertisment

Tamil News Updates: இன்று விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3

Tamil Nadu News, Tamil News Chennai Rains, Tomato Price Today, Maaveeran Movie– 13 July 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan-3 mission

Chandrayaan-3 mission

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்கலத்தை சுமந்து செல்லும் 'எல்.வி.எம்.3 எம்-4' ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன.

Advertisment

விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1. 05 மணிக்கு துல்லியமாக தொடங்கியது.

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil news updates

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:50 (IST) 13 Jul 2023
    சென்னையில் கனமழை

    சென்னை சுற்றுவட்டார பகுதிகளான நுங்கம்பாக்கம், நந்தனம், கோட்டூர்புரம், அண்ணாசாலை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை. புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை



  • 21:53 (IST) 13 Jul 2023
    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான பரிசுத் தொகை - ஐசிசி அசத்தல் அறிவிப்பு!

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் இனி ஆண்கள் பெண்கள் என இரு அணிகளுக்கும் ஒரே சமமான பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாலின சமத்துவத்தை நோக்கிய ஒரு முக்கிய நகர்வு என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ட்விட் செய்துள்ளார்.



  • 21:23 (IST) 13 Jul 2023
    செக் குடியரசு நாட்டின் ’மார்கெட்டா வாண்ட்ரோசோவா’

    விம்பிள்டன் மகளிர் இறுதிப்போட்டியில் செக் குடியரசு நாட்டின் ’மார்கெட்டா வாண்ட்ரோசோவா’ 60 ஆண்டு கால விம்பிள்டன் வரலாற்றில் முதல் நிலை அல்லாத வீராங்கனையாக பட்டம் வென்று சாதித்துள்ளார்



  • 21:22 (IST) 13 Jul 2023
    பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலரை கடனாக வழங்கியது சர்வதேச நிதியம்

    பாகிஸ்தானுக்கு 1.2 பில்லியன் டாலரை கடனாக வழங்கியது சர்வதேச நிதியம். கடனில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலரை கடனாக வழங்க ஓப்புதல் தெரிவித்த இருந்த நிலையில் முதல் தவணையை 1.2 பில்லியன் டாலரை வழங்கியது IMF



  • 21:21 (IST) 13 Jul 2023
    காமராஜர் பிறந்தநாளில் பயிலகம் தொடங்கும் நடிகர் விஜய்!

    முன்னாள் முதல்வர் காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான ஜூலை 15-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தளபதி விஜய் பயிலகம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • 20:31 (IST) 13 Jul 2023
    காங்கிரஸ் கட்சியின் பழனிநாடார் வெற்றி

    தென்காசி சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுகவின் செல்வ மோகன்தாஸை விட 368 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சியின் பழனிநாடார் வெற்றி பெற்றுள்ளார்



  • 19:46 (IST) 13 Jul 2023
    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 19:43 (IST) 13 Jul 2023
    கிரிஸ்டோபர் நோலன் திரைப்படம் சிறப்பு காட்சி

    கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள Oppenheimer திரைப்படத்தின் சிறப்புக் காட்சி லண்டனில் நடைபெற்றது உலகம் முழுவதும் ஜூலை 21-ம் தேதி ரிலீஸ் ஆகிறது 'Oppenheimer' திரைப்படம்



  • 19:04 (IST) 13 Jul 2023
    நெல்லையில் 65 அடி உயர திமுக கொடிகம்பம்

    திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் 65 அடி உயர திமுக கொடிகம்பம் இன்று நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆ. ராசா கலந்துகொண்டு கொடியேற்றினார்.

    மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன் கான் தலைமை தாங்கினார். மேயர் சரவணன், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.



  • 18:57 (IST) 13 Jul 2023
    மேயர்களுக்கு ₹30,000 மதிப்பூதியம்: மு.க. ஸ்டாலின் உத்தரவு

    மேயர்களுக்கு ₹30,000 மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி துணை மேயர்களுக்கு ரூ.15 ஆயிரமும், உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட உள்ளது.



  • 18:32 (IST) 13 Jul 2023
    முதல்வர் முகவரி துறை : மு.க. ஸ்டாலின் பெருமிதம்

    மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும். திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 18:31 (IST) 13 Jul 2023
    முதல்வர் முகவரி துறை : மு.க. ஸ்டாலின் பெருமிதம்

    மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும். திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



  • 18:04 (IST) 13 Jul 2023
    சென்னை: கலைஞர் உரிமைத் தொகை முகாம்

    சென்னையில் ஜூலை 24ம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாம் தொடங்குகிறது என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.



  • 17:32 (IST) 13 Jul 2023
    பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

    பிரான்ஸின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி நாளை பங்கேற்கிறார். தலைநகர் பாரீஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடர்ந்து பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.



  • 17:18 (IST) 13 Jul 2023
    மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித் தொகை உயர்வு

    1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ₹2,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ₹14.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



  • 16:55 (IST) 13 Jul 2023
    அரசுப் பள்ளிகளில் படித்து நிறைய பேர் பெரிய பெரிய பதவிக்கு போயிருக்காங்க - சாலமன் பாப்பையா

    மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளித்த பேராசிரியர் சாலமன் பாப்பையா பேட்டி: அரசுப் பள்ளிகளில் படித்து நிறைய பேர் பெரிய பெரிய பதவிக்கு போயிருக்காங்க என்று கூறினார்.



  • 16:54 (IST) 13 Jul 2023
    முன்னாள் போலீஸ் கமிஷனர் ரவி பெயரில் போலி ஃபேஸ்புக் பக்கம்; போலீசில் புகார்

    முன்னாள் காவல் ஆணையர் ரவி பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். “சமூக வலைதளங்களில் பண பரிவர்த்தனை தொடர்பாக வரும் எந்த ஒரு குறுஞ்செய்தியையும் நம்ப கூடாது” என தாம்பரம் முன்னாள் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.



  • 16:26 (IST) 13 Jul 2023
    பொது சிவில் சட்டம்: முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்துக்கு ஸ்டாலின் கடிதம்

    பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன் வைக்கிறது. சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளுக்குச் சவால் விடுவதாக பொது சிவில் சட்டம் உள்ளது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளது. ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் இடத்துக்கு இடம் வேறுபட்டுள்ளன. மக்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் பொது சிவில் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவது சாத்தியமில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 16:16 (IST) 13 Jul 2023
    பொது சிவில் சட்டம்: முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்துக்கு ஸ்டாலின் கடிதம்

    பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி சட்ட ஆணையத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “பொது சிவில் சட்டம் ஒரு கடுமையான அச்சுறுத்தலை முன் வைக்கிறது. சமூகத்தின் பல்வேறு கட்டமைப்புகளுக்குச் சவால் விடுவதாக பொது சிவில் சட்டம் உள்ளது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக பொது சிவில் சட்டம் உள்ளது. ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் இடத்துக்கு இடம் வேறுபட்டுள்ளன. மக்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் பொது சிவில் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவது சாத்தியமில்லை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 15:51 (IST) 13 Jul 2023
    விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க சார்பில் வரும் 20-ம் தேதி ஆர்பாட்டம் - இ.பி.எஸ் அறிவிப்பு

    விலைவாசி உயர்வை கண்டித்து, அதிமுக சார்பில் வரும் 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 20-ம் தேதி அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



  • 15:49 (IST) 13 Jul 2023
    ஆசிரியர் நியமன விவகாரம்; பள்ளிக்கல்வித் துறை முன்னாள் செயலர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

    முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமன விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கு தொடரப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை முன்னாள் செயலாளர் பிரதீப் யாதவ், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா ஐ.ஏ.எஸ் நாளை ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

    நீதிமன்ற உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை என எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அதிகாரிகள் இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:46 (IST) 13 Jul 2023
    தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உதயநிதி ட்வீட்

    அமைச்சர் உதயநிதி ட்வீட்: “விலைவாசி உயர்வு நாடெங்கும் மக்களை அச்சுறுத்தியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பெட்ரோல் விலையோடு போட்டிப்போடும் தக்காளி விலை, கியாஸ் விலையை நெருங்கும் வரை வேடிக்கை பார்க்காமல், ஒன்றிய அரசு உடனே தலையிட்டு உணவுப் பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுக்குக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.



  • 15:30 (IST) 13 Jul 2023
    நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

    மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது. நெக்ஸ்ட் தேர்வை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.



  • 15:25 (IST) 13 Jul 2023
    நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

    மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு எடுக்கும் வரை நெக்ஸ்ட் தேர்வு நடைபெறாது. நெக்ஸ்ட் தேர்வை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.



  • 14:53 (IST) 13 Jul 2023
    1580 ஸ்கார்பியோ கிளாசிக் வாகனம் வழங்கிய மஹிந்திரா நிறுவனம்!

    மஹிந்திரா நிறுவனம் இந்தியா ராணுவத்திடம் இருந்து 1580 ஸ்கார்பியோ கிளாசிக் வாகனங்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.



  • 14:35 (IST) 13 Jul 2023
    முகவரி திட்டம்: முதல்வர் பேச்சு!

    உங்கள் தொகுதியில் முதல்வரின் முகவரி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மக்களுக்கு அதிக அளவில் முதல்வரின் முகவரி துறையின் சேவை தேவைப்படுகிறது.

    வாரந்தோறும் கட்டாயம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுதாரர்களிடம் தொடர்பு கொண்டு மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். விரைவான தீர்வு மட்டும் அல்லாமல் சரியான தீர்வு காண்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டால் தான் அரசு முறையாக பணியாற்றியதாக கருதப்படும்.

    மக்களின் அன்றாட தேவைகள், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். அரசின் சேவைகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். காவல்துறையில் பெறப்படும் மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.



  • 14:32 (IST) 13 Jul 2023
    26 ரஃபேல் போர் விமானம்

    பிரான்சிடம் இருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பாதுகாப்புத்துறை கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய கப்பல்படைக்கு ஸ்கோபின் வகையைச் சேர்ந்த மேலும் 3 நீர்மூழ்கி கப்பல்களை வாங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.



  • 14:24 (IST) 13 Jul 2023
    அரியலூர் சோழர் பாசன திட்டம்: 5 லட்சம் பேரிடம் கையெழுத்து!

    அரியலூர் சோழர் பாசன திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.



  • 14:21 (IST) 13 Jul 2023
    10 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

    சென்னை போரூரில் சாலை ஓரத்தில் மின் இணைப்பு கேபிள் புதைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட 10 அடி பள்ளத்தில் தடுப்புகளை உடைத்துக்கொண்டு கார் கவிழ்ந்தது.

    ஓட்டுநர் காயமடைந்த நிலையில் கிரேன் உதவியுடன் கார் பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டது



  • 14:17 (IST) 13 Jul 2023
    தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு - வானிலை ஆய்வு மையம்!

    தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:13 (IST) 13 Jul 2023
    தயார் நிலையில் சந்திரயான்-3 விண்கலம்!

    சந்திரயான்-3 விண்கலம் நிலவை ஆராய விண்ணில் பாய தயாராகியுள்ளது. விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியது



  • 13:37 (IST) 13 Jul 2023
    டெல்லியில் வெள்ளம் - பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிறு வரை விடுமுறை: கெஜ்ரிவால் அறிவிப்பு!

    டெல்லியில் கனமழை பெய்த நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள யமுனை நதி நிரம்பி வழிந்து வருகிறது. தலைநகரின் முக்கிய பகுதிகளில் இருந்து வாகனங்கள் திருப்பி விடப்பட்டதால், பல பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையில், பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை என்றும், அரசு அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் எனவும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.



  • 13:32 (IST) 13 Jul 2023
    வி.ஏ.ஓ -மீதான வழக்கு ரத்து

    சிவகங்கை, கழனிவாசல் கிராம நிர்வாக அலுவலர் மீதான இலவச வேட்டி, சேலை மோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அரசின் இலவச வேட்டி, சேலைக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாரே பொறுப்பு என்று கூறி வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:55 (IST) 13 Jul 2023
    மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் நாளை ஆலோசனை

    மாநிலங்களில் இருக்கக் கூடிய சுகாதாரக் கட்டமைப்புகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்துகிறார்.



  • 12:43 (IST) 13 Jul 2023
    செங்கல்பட்டு: கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை

    செங்கல்பட்டு அருகே கடன் பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை செய்துக் கொண்டனர். வங்கி, மகளிர் சுய உதவி குழுவில் பெற்ற கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்த தம்பதி தற்கொலை செய்துக் கொண்டனர். கணவன் தூக்கிட்டும், மனைவி அதிகப்படியான நீரிழிவு மாத்திரையை உட்கொண்டும் தற்கொலை செய்த நிலையில், கருத்தோவியன்- மஞ்சுளா உடலை கைப்பற்றி கூடுவாஞ்சேரி போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்



  • 12:13 (IST) 13 Jul 2023
    ஆந்திராவில் தக்காளி விவசாயி கொலை

    ஆந்திராவின் போடிமல்லாடினா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜசேகர் ரெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். விவசாயியை கைகால்களை கட்டி தூக்கி சென்று மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். 20 நாட்களில் 30 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்ததால் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது



  • 12:01 (IST) 13 Jul 2023
    சமூக நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதி திறந்து வைத்தார் ஸ்டாலின்

    சமூக நலத்துறை சார்பில் சென்னை கூடுவாஞ்சேரி, திருச்சியில் ரூ.13.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேலும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.1559 கோடி மதிப்பில் 4.o தொழில்நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்



  • 11:52 (IST) 13 Jul 2023
    சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 18 மாணவிகள் காயம்

    சிவகங்கை அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 18 மாணவிகள் காயம் அடைந்தனர். கீழடி அருங்காட்சியகத்தை பார்ப்பதற்காக பி.எட் மாணவிகள் கல்லூரி பேருந்தில் சென்ற போது நாட்டரசன்கோட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதியது. பெரிய காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக கல்லூரி மாணவிகள் உயிர்தப்பினர். ஒரு மாணவிக்கு மட்டும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 11:47 (IST) 13 Jul 2023
    தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

    தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. தபால் வாக்குகளில் பதிவு செய்யப்பட்ட 13 சி விண்ணப்பத்தை சரிபார்க்க அதிகாரிகள் தரப்பு மறுத்து, வாக்கு சீட்டை மட்டுமே காட்டுவதாக அ.தி.மு.க வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு வந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது



  • 11:23 (IST) 13 Jul 2023
    குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 33 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

    குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த 33 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். உங்களை இந்த இடத்திற்கு உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எப்போதும் மறக்காதீர்கள். உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களாக பணியாற்ற வேண்டும் என பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்



  • 11:13 (IST) 13 Jul 2023
    மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் - ஸ்டாலின்

    மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீதே எனது முழு கவனம் உள்ளது. எந்த சிக்கலும் இல்லாமல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். யாருக்கெல்லாம் உரிமைத்தொகை அவசியமோ, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • 11:00 (IST) 13 Jul 2023
    மகளிர் உரிமைத் தொகை திட்டம்

    தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைச் செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்த உள்ளோம்; 1 கோடி மகளிருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்க இருக்கிறோம்; மகளிருக்குப் பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம். எந்த சிக்கலும் இல்லாமல் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி



  • 10:45 (IST) 13 Jul 2023
    வைரமுத்துவுக்கு, ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    வைரமுத்துவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 10:27 (IST) 13 Jul 2023
    எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு மேலும் எட்டு கட்சிகள் ஆதரவு

    2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக ஐக்கிய முன்னணி முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு புதிதாக எட்டு கட்சிகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

    முழு செய்தியும் படிக்க

    https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-to-attend-opposition-meeting-in-bengaluru-congress-722096/



  • 10:21 (IST) 13 Jul 2023
    பிரான்ஸ் சென்றார் பிரதமர் மோடி

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். பாரிஸ் நகரில் நாளை நடைபெற உள்ள பாஸ்டீல் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொள்கிறார்.

    பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஜூலை 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.



  • 10:21 (IST) 13 Jul 2023
    முன்னாள் டிஜிபி பெயரில் போலி பேஸ்புக் அக்கவுண்ட்

    முன்னாள் டிஜிபி மற்றும் தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி தமது புகைப்படத்தை வைத்து போலியான பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி மோசடி செய்வதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.



  • 10:17 (IST) 13 Jul 2023
    தபால் வாக்கு மறு எண்ணிக்கை

    2021 தேர்தலில் தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக அதிமுக சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில்,

    நீதிமன்ற உத்தரவுப்படி தென்காசி சட்டப்பேரவை தொகுதியில் பதிவான தபால் வாக்கு மறு எண்ணிக்கை இன்று காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. அங்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



  • 09:26 (IST) 13 Jul 2023
    தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி.. இன்று என்ன விலை

    இன்று சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி 150 முதல் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இஞ்சி நேற்று கிலோ 260 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 220 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் விலை இன்று கிலோவுக்கு ரூ.170, பூண்டு விலை ஒரு கிலோ ரூ.200 விற்பனையாகிறது.



  • 09:26 (IST) 13 Jul 2023
    தக்காளி, பூண்டு, சின்ன வெங்காயம், இஞ்சி.. இன்று என்ன விலை

    இன்று சென்னை கோயம்பேடு மார்கெட்டில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சில்லறை விற்பனை கடைகளில் 1 கிலோ தக்காளி 150 முதல் 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இஞ்சி நேற்று கிலோ 260 ரூபாய்க்கு விற்ற நிலையில், இன்று 220 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் விலை இன்று கிலோவுக்கு ரூ.170, பூண்டு விலை ஒரு கிலோ ரூ.200 விற்பனையாகிறது.



  • 09:15 (IST) 13 Jul 2023
    தீபாவளி ரயில்கள் முன்பதிவு

    நவ.10ந் தேதிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் , உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. மீதமுள்ள ஒரு சில ரயில்களி​ல் வெயிட்டிங் லிஸ்ட் 200ஐ கடந்தது.

    இதனால் அதிகாலை 3 மணி முதல் கவுன்ட்டரில் டிக்கெட் பெற வரிசையில் நின்றவர்கள் டிக்கெட் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.



  • 08:27 (IST) 13 Jul 2023
    வேங்கைவயல் விவகாரம்

    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில், மேலும், நான்கு சிறார்களிடமும் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்த, மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு விசாரணையில், டிஎன்ஏ பரிசோதனைக்கு சிறார்களின் பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், வழக்கு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் நான்கு சிறார்களையும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.



  • 08:14 (IST) 13 Jul 2023
    டிஎன்பிஎல் இறுதிப் போட்டி- கோப்பையை வென்றது கோவை அணி

    டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் நெல்லை அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    நெல்லையில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கோவை அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பின்னர், 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணி, 15 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதன் மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கோவை அணி கோப்பையை கைப்பற்றியது.



  • 08:12 (IST) 13 Jul 2023
    தமிழகம் திரும்பினார் ஆளுநர் ரவி

    ஒரு வார டெல்லி பயணத்தை முடித்து கொண்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னை திரும்பினார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஒரு வார பயணமாக கடந்த 7-ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றார். அங்கு, அவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தனது பயணத்தை முடித்துக் கொண்ட ஆளுநர், புதன்கிழமை இரவு சுமார் 8 மணிக்கு சென்னை திரும்பினார்



  • 08:12 (IST) 13 Jul 2023
    மதுரை எய்ம்ஸ் பல்வேறு மருத்துவ பணிகள்; நேர்காணலுக்கான தேதி வெளியானது

    மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது - மூக்கு - தொண்டை, கண் மருத்துவம், எலும்பியல் துறைகளுக்கான பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நேர்காணலுக்கான தேதி வெளியானது.



  • 08:11 (IST) 13 Jul 2023
    சென்னையில் மழை; விமான சேவை பாதிப்பு

    சென்னையில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த மழையால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.

    விமானங்கள் தரையிறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்த நிலையில் ஒரு விமானம் பெங்களூருக்கு திரும்பியது; 4 விமானங்கள் தாமதமாக தரையிறங்கின. சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்களும் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.



  • 08:10 (IST) 13 Jul 2023
    பொறியியல் கலந்தாய்வு தேதி இன்று அறிவிப்பு

    பொறியியல் கலந்தாய்வுக்கான தேதியை இன்று காலை 11 மணிக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிடுகிறார்.



  • 08:10 (IST) 13 Jul 2023
    4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



Chennai Tamilnadu India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment