/tamil-ie/media/media_files/uploads/2020/10/mk-stalin-statement-4.jpg)
News In Tamil : டெங்கு, மலேரியா உள்ளிட்ட மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாகக் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். வழக்கமாகத் தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் டெங்குவின் பாதிப்புகள் கண்டறியப்படும். கடந்த ஆண்டு தமிழகத்தில், 8,527 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு தற்போது வரை 1,785 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு பாதிப்பின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது என்றும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு மற்றும் பிற மழைக்கால நோய் பரவுதலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கிறார்.
மத்திய மேற்கு மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்று, வடதமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சேலம், தர்மபுரி,,வேலூர் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஹத்ராஸ் பெண் வழக்கில் ஃபாரன்சிக் அறிக்கைக்கு மதிப்பே கிடையாது என்று இந்த மாத ஆரம்பத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டி அளித்த ஜவஹர்லால் நேரு மருத்துவமனை மருத்துவரை, இனிமேல் பணியாற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளாக நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். விஜய் நடித்த தலைவா படத்தின்போது ஏற்பட்ட நிகழ்வுகளால் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், நடிகர் விஜயின் தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும் என்று கூறியுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Latest Tamil News Live: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இலவச கொரோனா தடுப்பூசி மக்களுக்கு காட்டும் சலுகை என நினைக்கிறாரா முதல்வர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை. நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
இலவச #CoronaVaccine-ஐ மக்களுக்கு தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா @CMOTamilNadu?
மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை!
நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை! pic.twitter.com/9DdBt1T4Jt
— M.K.Stalin (@mkstalin) October 22, 2020
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி மொத்த எண்ணிக்கை 7,00,193 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 45 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் பாரதீப்பிற்கு 180 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 23ம் தேதி மேற்கு வங்கம் சாகர் தீவுகள் அருகே கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்க கடலில், பாரதீப்பிற்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி காரைக்கால் , பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை கொடி எண் ஒன்று (DISTANT CAUTIONARY SIGNAL NO.1) ஏற்றப்பட்டது.
நடிகர் விஜய்சேதுபதி குடும்பத்தினர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூரில் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதில் இருந்து, விஜய்சேதுபதி விலக கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, அவரும் படத்தில் இருந்து விலகினார்.
இதனிடையே, விஜய் சேதுபதி குடும்பத்தினர் மீதும் அவருடைய மகளுக்கும் வக்கிரமாக மிரட்டல் விடுக்கப்பட்டது. சைபர் கிரைம் போலீசார் மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் கண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மாணவர் அமைப்பினர் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறையை நியாயப்படுத்தும் போலியான நோக்கில், ‘தமிழகம் சாதிக்கிறது’ எனப் பூரிப்படைந்தோர் தெளிவு பெறவேண்டும். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என உறுதியாகச் சொல்ல முடியாது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை... செய்யவும் மறுக்கிறார்கள்" என்று பாமக நிறுவனர் இராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியாவை முன்னேற்றுப் பாதையில் கொண்டு செல்வதற்கு அமித் ஷாவின் பங்கும் அர்ப்பணிப்பும் அளவற்றது என்றும் பாஜக-வை பலப்படுத்த அமித் ஷா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்தையும் பதிவு செய்திருக்கிறார் மோடி.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,06,946-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 68,74,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,86,70,363 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,69,984 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீட்டைப் பெற முதலமைச்சர் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஒரு மாதமாகியும் மசோதாவுக்கு ஒப்புதல் தராத ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, ஐந்து தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று சந்திக்க இருக்கிறார்கள். ஒட்டுமொத்த உறுப்பினர்களும் சேர்ந்து நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் நிராகரிக்க முடியாது என்றும் சட்ட வல்லுநர்களின் 10 % இட ஒதுக்கீட்டைத் தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக அரசு ஆதரித்துள்ள வேளாண் சட்டங்கள் அமலுக்கு வந்தால், எவ்வளவு வேண்டுமானாலும் வெங்காயத்தைத் தேக்கி வைத்து, விலையை உயர்த்த முடியும் என்று குற்றம் சாட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், இனிமேலாவது வேளாண் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தக்கூடாது என்றும் முழுவீச்சில் வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்து, நியாமான விலைக்குக் கிடைக்கும்படி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பல்வேறு விதமான நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுக்கோட்டைச் செல்கிறார். காலை 10 மணிக்குத் திருச்சி விமான நிலையம் சென்றடைந்த இபிஎஸ், விராலிமலை சென்று உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையைப் பார்வையிடவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு சிலை திறப்பு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக விவசாயிகள் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவிருக்கிறார்.
ஆசிரியர், மாணவர் விகிதம் மாநில அளவில் கணக்கிடப் படுவதால் தான் ஆசிரியர் பணியிடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியர் மாணவர் விகிதத்தை பள்ளி அளவில் கணக்கிடுவது தான் சரியானதாக இருக்கும். எனவே, பள்ளி அளவில் ஆசிரியர் மாணவர் விகிதத்தை கணக்கிட்டு, அதனடிப்படையில் புதிய பணியிடங்களை உருவாக்கி, அவற்றில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights