பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
எந்த சட்டமும் வகுக்கவில்லை
கோயிலுக்கு இவர்கள்தான் வர வேண்டும் என கடவுள் எந்த சட்டமும் வகுக்கவில்லை. கிராமம், நகரம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது. என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினம் : திரௌபதி முர்மு உரை
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாளை இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
மறைந்த உத்திர பிரதேச முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் முதல்வரான எஸ்.எம் கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த இருளர் பழங்குடி இனத்தின் சிறந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருதும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழில் வணக்கம் சொல்வதன் மூலமாகவும் திருக்குறளையும் பாரதியாரையும் மேற்கோள் காட்டுவதன் மூலமாகவும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.” என்று பேசினார்.
மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தி மொழியை திணிக்க பா.ஜ.க தொடர்ந்து முயற்சி செய்கிறது. ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்க நினைக்கிறது பா.ஜ.க என்று கூறினார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' பிரச்சாரத்தில் மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது என்று கூறினார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இந்தியாவின் மார்ஸ் மிஷன் அசாதாரணமான பெண்களைக் கொண்ட குழுவால் இயக்கப்பட்டது. மேலும், நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் மற்ற துறைகளிலும் பின்தங்கியிருக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில், பெண்களின் அதிகாரம் மற்றும் பாலின சமத்துவம் ஆகியவை இனி வெறும் கோஷங்கள் அல்ல, ஏனெனில் இந்த இலட்சியங்களை நோக்கி நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.” என்று கூறினார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு புதன்கிழமை இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார், இது அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்படும் மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பப்படுகிறது.
இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அரசியலமைப்புக்கும் இந்தியாவின் ஆன்மாவுக்கு புகழாரம் சூட்டினார்.
டெல்லி ஜாமியாவில் பிபிசி ஆவணப் படம் திரையிடப்பட்ட நிலையில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ஜாமியா நிர்வாகம், “பிபிசி ஆவணப் படம் திரையிட எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
சில எஸ்எஃப்ஐ மாணவர்கள் தவறாக நடந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
பணமோசடி வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே கைது செய்யப்பட்டார்.
இந்தத் தகவலை அமலாக்கத்துறை இயக்குனரகம் உறுதி செய்துள்ளது.
“எடப்பாடி பழனிசாமி செய்த தவறால், திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் சண்டையால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்புள்ளது.
வருகிற 27ஆம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசித்து இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும்” என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
டாடா மோட்டார்ஸ் மூன்றாம் காலாண்டு நிதி நிலை அறிக்கைகள் இன்று வெளியாகின.
அதில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,043 கோடியாக உள்ளது. நிகர விற்பனை ரூ.88,489 கோடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், “நான் யாருக்கும் ஆதரவு கொடுக்கவும் மாட்டேன், கேட்டகவும் மாட்டேன். நான் மக்களை நம்பி களத்தில் நிற்கிறேன்” என்றார்.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தப் பேரணி 20 மாநிலங்களில் நடைபெற உள்ளது. போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த டிராக்டர் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாரதிய ஜனதா நிர்வாகி லைஷ்ராம் ரமேஷ் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். முன்னதாக கார் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது குற்றவாளிகளுக்கு யாரும் ஆதரவு கொடுக்கக் கூடாது என போலீசார் எச்சரித்திருந்தனர்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் 13ஆவது தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாருக்கு சிறப்பு விருதினை தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
தேர்தல் தொடர்பான பணிகளை சிறப்பாக செய்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் சரக்கு வாகனத்தில் ரகசியமாக கஞ்சா கடத்திய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது, அவர்களிடம் இருந்து 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வியாபாரிகள் போல் நடித்து கஞ்சா கடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவை வழங்கியுள்ள ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நன்றி தெரிவித்துள்ளார்
2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருது சூர்யகுமார் யாதவ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது
ஐ.பி.எல் போன்று மகளிர் பிரீமியர் லீக் போட்டி WPL போட்டியில் 5 அணிகள் ரூ.4,669.99 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல் 2008 ஏலத்தொகையை WPL ஏலம் முறியடித்துள்ளது என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்
2012ம் ஆண்டு தாம்பரம் சேலையூர் அருகே பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து மாணவி விழுந்து உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் சானியா மிர்சா – ரோகன் போபண்ணா இணை முன்னேறியுள்ளது. கலப்பு இரட்டையர் அரையிறுதியில் நீல் ஸ்கூப்ஸ்கி – டெஸிரா கிராஸிக் இணையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்
கடந்த சில தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்; பெண்கள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என சுதந்திரமாக முடிவு எடுக்கிறார்கள் -ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த சில தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்; பெண்கள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என சுதந்திரமாக முடிவு எடுக்கிறார்கள் -ஆளுநர் ஆர்.என்.ரவி
தென்கிழக்கு வங்கக்கடல், மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 27 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பட்டியல் இன மக்களுக்கு மறுப்பு தெரிவிப்பதாக கூறி புதுச்சேரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தின விழாவையொட்டி மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களை இன்று முதல் நாளை முற்பகல் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து
உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிக்காக நானும், கட்சியினரும் இயன்ற உதவியை செய்வோம்
நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு
தேர்தலில் துடிப்பான பங்களிப்பை மேலும் வலுப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் சட்டசபை உரிமைக்குழு கூட்டம் தொடங்கியது
ஜன.9ம் தேதி சட்டசபையில் ஆளுநரின் விருந்தினர் செல்போனில் புகைப்படம் எடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உரிமைக்குழு ஆய்வு
27-ம் தேதி பழனி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, மூலவர் சன்னதியின் தங்க விமானத்தை மெருகூட்டும் பணி தீவிரம்
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பழனி கும்பாபிஷேக விழா
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம்
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகை
ரயில்வே எஸ்.பி விஜயகுமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
உத்தர பிரதேசம், லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய 4 விவசாயிகள் கார் மோதி உயிரிழந்த சம்பவம்
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ராவுக்கு 8 வார இடைக்கால ஜாமின் – உச்ச நீதிமன்றம்
8 வார இடைக்கால ஜாமின் காலத்தில் உத்தர பிரதேசத்திலோ, டெல்லியிலோ ஆஷிஷ் மிஸ்ரா தங்கி இருக்கக் கூடாது – உச்சநீதிமன்றம்
ஆளுநர் மாளிகையில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேநீர் விருந்து
தமிழக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு
ஓபிஎஸ்-ஐ தவிர்த்தால் அதிமுகவுக்கு கிடைக்கும் பாரம்பரிய வாக்குகளே கிடைக்காது.
கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேட்டி
குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிப்பு
சென்னை ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு ஏஎஸ்பி பொன் ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவி சேகரன் ஆகியோருக்கு விருது அறிவிப்பு
மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.. மொழி காக்க இன்னுயிர் நீத்தவர்களின் உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை
மொழிப்பேர் தியாகிகள் தினம் – நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்கள் மரியாதை
மொழிப்போர் தியாகிகளை தாய்மொழிப்பற்றோடு நினைவு கூர்ந்து வணங்கிடுவோம். மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம்' என்பதை மறவாமல், தமிழ் மொழியைக் காத்திட இந்நாளில் உறுதி ஏற்போம்” மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்
சமகவின் இந்த நிலைக்கு நானே காரணம் .இன்று எடுத்த முடிவை 10 வருடங்களுக்கு முன்பே எடுத்திருக்கலாம். பணம் இல்லாது கட்சியை நடத்தி வருகிறோம். ஒரு குடும்பம் பிரிந்தால் அந்த குடும்பம் நல்லா இருக்கணும் என்றுதான் நான் நினைப்பேன். அதிமுக நன்றாக இருக்க வேண்டும். பலம் வாய்ந்தவர்களை எதிர்கொண்டு போட்டியிடுவதே முயற்சி.
மநீம தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று காலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க வாய்ப்பு.
கோவை: பூசாரிப்பாளையம் தோட்ட வேலியில் தானாக வளர்ந்த சந்தன மரங்கள் வெட்டிக்கடத்தல் தோட்டத்து நாய்களை விஷம் வைத்துக்கொன்று, மர்மநபர்கள் மரங்களை கடத்தியுள்ளனர்; போலீசார், வனத்துறையினர் விசாரணை
சிதம்பரம் நகர காவல் நிலைய எஸ்.ஐ. மகேந்திரன் (58) மாரடைப்பால் உயிரிழப்பு இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அதிகாலையில் திடீரென உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்