பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தீப்பிடித்த தனியார் பேருந்து
கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம் அருகே தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு. பேருந்தில் இருந்து வேளியேறியபோது 11 பேர் காயம்.
நீர் இருப்பு
புழல் ஏரிக்கு நீர்வரத்து 215 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 465 மில்லியன் கனஅடியாக உள்ளது
50,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக்கூடிய பச்சை நிற வால் நட்சத்திரம், லடாக் பகுதியில் தென்பட்டது!
தமிழ்நாடு முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் அலுவலக பயன்பாட்டிற்கு, ஜெராக்ஸ் மிஷின் வழங்கும் நிகழ்ச்சி சட்டபேரவையில் இன்று நடைபெற்றது. புதிய மிஷினில், தனது ஆன்மீக குருவான அப்பா பைத்தியம் சுவாமிகள் படத்தை முதலமைச்சர் ரங்கசாமி ப்ரிண்ட் எடுத்தார்.
எந்த காலத்திலும் இல்லாத அளவில் திருக்கோவில்களுக்கு தேவையான திட்டங்களைச் செய்யக்கூடிய அரசாக இந்த அரசு உள்ளது” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
ஈரோட்டில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நியமனம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
“2014ஆம் ஆண்டுக்கு பிறகு காஷ்மீரில் நிலைமை மாறிவிட்டது. அதனால்தான் ராகுல் காந்தியும், பிரியாங்கா காந்தியும் பனிகட்டிகளை தூக்கி வீசி விளையாடுகிறார்கள்.
இதற்கெல்லாம் சிறந்த அந்தஸ்து நீக்கம்தான் காரணம். இதற்காக அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.
பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் விடாமல் திட்டிய திமுக நிர்வாகி மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர்.
சேலம் திருமலைகிரி மாரியம்மன் கோவிலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திமுக பிரமுகர் மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில்துறை அமைப்பான எஃப்.ஐ.சி.சி.ஐ ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எத்தனால், மெத்தனால், பயோ-சி.என்.ஜி, பயோ-எல்.என்.ஜி மற்றும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.
மத்திய, மாநில அரசுகள், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான 15 ஆண்டுகளுக்கும் மேலான ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சாலையில் நிறுத்தப்படும் என்றும், அதற்குப் பதிலாக புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ட்வீட்: “காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவுநாளில் வணங்குகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 30, 2023
அதானி நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் தொடர்பான பல்வேறு வதந்திகளுக்கு எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எல்.ஐ.சி-யின் மொத்த முதலீடுகளான 41 லட்சம் கோடியில், அதானி குழுமத்தில் 0.975 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
சென்னையில், ஜி20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதையொட்டி, சென்னையில், நாளை முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
அண்ணாமலை முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணையப் போகிறேன் என தாடி பாலாஜி மனைவி கூறியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் திங்களன்று ஒரு மசூதிக்குள் வெடித்ததில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் காயமடைந்தனர்,
மதச்சார்பற்ற நெறிகளை பாதுகாப்பதே நோக்கம் என இந்திய ஒற்றுமை பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியுள்ளார்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முரளி விஜய் அறிவித்துள்ளார். அவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 17 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் ஆடியிருக்கிறார்
குஜராத் கலவரம் தொடர்பான பி.பி.சி ஆவணப்படம் குறித்து பிரதமர் பதிலளிக்க தி.மு.க கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவும், ஜாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பின் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்
மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க.,வின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாடாளுமன்ற மாநிலங்களவை குழு தலைவர் தம்பிதுரைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விஷயங்கள் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவும் ஓ.பி.ரவிந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத்தொகையாக வழங்கப்பட்ட 1,000 ரூபாய் பரிசுத்தொகையை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை. இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியுள்ளது என தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது
Philips நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது; அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்; தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு, திருவாரூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரை அவதூறாக பேசிய சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட விசிக செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து 3 மாத காலம் இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
11 ம் வகுப்பு தேர்வு முடிவு மே19ம் தேதியும், 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும் வெளியிடப்படும்… 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக விவாதிக்க அதிமுகவின் மக்களவை தலைவர் என குறிப்பிட்டு ஓபிஎஸ்-ன் மகன் எம்.பி. ரவீந்திரநாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ – ஒற்றுமை பயணம் நிறைவு
பல்வேறு மாநிலங்களை கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்துள்ள ஒற்றுமை யாத்திரை
கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய யாத்திரை சுமார் 150 நாட்கள் நடைபெற்றது
ஜம்மு காஷ்மீரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார் ராகுல் காந்தி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் பகலவன் கட்சியில் இருந்து இடை நீக்கம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பு
திருப்பூரில் தமிழக இளைஞர்களை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம்
வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பீகாரை சேர்ந்த ரஜட் குமார், பரேஷ் ராம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
டெல்லி ராஜ்கோட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி
நேற்று மாலை வரை 87.44% நிறைவடைந்துள்ளது – அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்பு
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய இ.பி.எஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் வழங்கவும் அனுமதி
ஓ.பி.எஸ் தரப்பு, தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு
விசாரணை பிப்ரவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று அவரை நான் வணங்குகிறேன், அவருடைய ஆழ்ந்த எண்ணங்களை நினைவு கூர்கிறேன் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன்; அவர்களின் தியாகங்கள் ஒரு போதும் மறக்கப்படாது. அவர்களின் தியாகங்கள் வளர்ந்த இந்தியாவுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற நமது உறுதியை மேலும் வலுப்படுத்தும் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள்-தமிழ்நாடு ஆளுநர்,முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை . எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். காந்தியும் உலக அமைதியும் என்கிற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியையும் திறந்து வைத்தனர்.
சென்னை, அண்ணா சாலையில் கட்டிடம் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் . தலைமறைவாக இருந்த ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது.
அதிமுகவின் தலைமை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அடுத்தகட்ட முடிவினை பாஜக தலைமை எடுக்க இருப்பதாக தகவல் . இரட்டை இலை சின்னம் யார் பக்கத்தில் இருக்கிறதோ, அவர்களுக்கே பாஜகவின் ஆதரவு என தகவல்
கன்னியாகுமரியில் தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, காஷ்மீரில் இன்று நிறைவடைகிறது . நிறைவு விழாவில் பங்கேற்க 21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு .
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் .இ. பி.எஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சென்னை மாநகராட்சி கூட்டம், இன்று காலையில் கூடுகிறது. மேயர் பிரியா ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு., சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு .